1.தலைவரே...நாட்டுக்காக இதுவரை என்ன செஞ்சிருக்கீங்க..?
எனக்காகவே இன்னும் செஞ்சு முடிக்கல.....
-------------------------------------------
2.ரவுடின்னு தெரியாம கை மாத்து கேட்டது தப்பா போச்சு..
ஏன்?
செம மாத்து கிடைச்சது..
--------------------------------------------
3.மன்னா.! நம் நாட்டில் ஏழைகளே இல்லாம பண்ணப்போறீங்களாமே..?
ஆம் ,அமைச்சரே... எல்லா ஏழைங்களையும் அண்டை நாட்டுக்கு துரத்தி விட்டுட வேண்டியதுதான்.
-------------------------------------
4.கோதுமைத்தோட்டம் 10 ஏக்கரா மாப்ளைக்கு இருக்கு..
அப்போ WHEAT டோட மாப்ளைன்னு சொல்லு.. ( WHEAT - வீட் -கோதுமை)
-----------------------------------
5. டாக்டர்.. கீழே விழுந்துட்டேன்..
அடடா.. எப்படி விழுந்தீங்க?
மறுபடி ஒருக்கா விழுந்து காண்பிச்சா மறுபடி அடிபட்டுடுமே.. டாக்டர்.
------------------------------------
6.உங்க பையன் சரியான ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றீங்க..?
ஜில்லுன்னு இருக்கற பொருட்களுக்கு உதாரணம் சொல்லுன்னா பெப்ஸி , தப்ஸி அப்படின்னு சொல்லி இருக்கான்.
------------------------------------------------------
7.டாக்டர்.. உங்க கிளினிக்ல கூட்டமே வர்லைன்னாக்கூட கிளினிக்கை மூடிட்டு பியூட்டி பார்லர் ஆரம்பிச்சு பொழப்பு நடத்திக்கலாம்..
எப்படி சொல்றீங்க?
எல்லா நர்ஸூங்களும் சூப்பர் ஃபிகர்ஸா இருக்காங்களே..
-----------------------------------------------------------
8.ஆன்மீகத்துல தலைவருக்கு அவ்வளவு ஈடுபாடா..?ஆலயம் கட்ட ரூ 2 கொடி நிதி உதவி செஞ்க்சிருக்காரே..?
அட நீ வேற .. அவரு நடிகை தமனாவுக்கு கோயில் கட்டத்தானே நிதி உதவி தந்தாரு.?
------------------------------------
9.சார்.. நீங்க எப்போ வேணும்னாலும் எங்க வீட்டுக்கு வரலாம்.. வர்றதுக்கு முன்னே ஒரு ஃபோன் பண்ணி தகவல் மட்டும் சொன்னா போதும்..
எதுக்கு? முன் ஜாக்கிரதையா வீட்டை பூட்டி வெளில கிளம்பத்தானே..?
---------------------------------------
10.காதலுக்கு அதிக மதிப்பு தர்றது ஆண்களா? பெண்களா?
ஆண்கள்தான் மதிப்பு தர்றாங்க.. பெண்கள் மிதிப்புதான் தர்றாங்க..( ஒண்ணா அண்ணனை விட்டு மிதிக்க வெச்சுடறாங்க.. இல்லைன்னா காதலையே மிதிச்சிட்டு டாட்டா காட்டிடறாங்க..)
--------------------------------------------
டிஸ்கி 1- 6 -ம் நெம்பர் ஜோக்கும், 8- ம் நெம்பர் ஜோக்கும் நமக்கு சொல்ற நீதி என்ன?
டிஸ்கி 2 - நமக்கு நடிகைங்க ஸ்டில்ஸ் போடனும்னு ஆசையா இருந்தா இப்படி வலுக்கட்டாயமா அவங்க பேர் வர்ற மாதிரி ஜோக் ரெடி பண்ணிக்கனும்?
டிஸ்கி 3 - டிஸ்கி 2 நமக்கு சொல்ற நீதி என்னன்னா நம்ம மைனஸ் பாயிண்ட் எதுன்னு பார்த்து எப்படி கமெண்ட் வரும்னு யூகம் பண்ணி அதை நாமே நக்கல் அடிச்சுக்கிட்டா வெளி ஆட்கள் கமெண்ட் போடறப்ப வேற வழி இல்லாம ஜோக் நல்லர்ருக்கு.. பதிவு சூப்பர்னு கமெண்ட் போட்டுடுவாங்க.. ஹி ஹி ஹி
டிஸ்கி 4 - நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த என் சுவாசக்காற்றே புகழ் இஷா கோபிகர் நடித்த அஜால் குஜால் படமான மின்சாரக்காதலி ப்பார்த்தாச்சு.அதை விமர்சனமா போடறதுல சில சர்ச்சைகள்
இருக்கு. அது பத்தி ஆலோசிக்க இன்று கூடும் ரகசியக்கூட்டத்தில் அட்ராசக்க இணைய தளத்தின் அதிகாரபூர்வமான வக்கீல் நண்டு நொரண்டு ராஜா,சித்தோட்டு சிறுத்தை நல்ல நேரம் சதீஷ்,007 ஜேம்ஸ்பாண்ட் சதீஷ் மூவரும் கூடி முடிவு எடுப்பாங்க
..