ஆ.ராசா கைது: சிபிஐ நடவடிக்கை
புதுடெல்லி, பிப்.2,2011
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, ஆ.ராசாவிடம் 4-வது நாளாக இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த முறைகேட்டில், ராசா தொடர்புடையதற்கான போதுமான ஆதாரங்களைத் திரட்டிய நிலையில், அவரை சிபிஐ கைது செய்தது.
முன்னதாக, ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் திங்கட்கிழமை விசாரணை நடத்தினர். அவரிடம் கடந்த டிசம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் இரண்டு தடவை சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு முந்தைய சூழ்நிலைகள், பண விவகாரம் ஆகியவை குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், சில தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக கூறப்படுவது குறித்து ராசாவிடம் விசாரிக்கப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கிளை நிறுவனங்களில் ஆ.ராசா குடும்பத்தினரின் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் சிபிஐ விசாரித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, ராசாவின் கோதரர் ஏ.கே.பெருமாளிடம் சிபிஐ நேற்று விசாரணை நடத்தினர்.
இதனிடையே, 2001-ம் முதல் 2009-ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான நடைமுறைகள் குறித்து ஆராய்வதற்காக தொலைத் தொடர்புத் துறையால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிவராஜ் வி பாட்டீல் தலைமையிலான ஒருநபர் குழு,மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபலிடம் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், ஆ.ராசாவின் நிர்வாகத்தின் மீதே குறைகூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நேரத்தில் இந்த கைது பெரிய அரசியல் திருப்பத்துக்கு அடி கோலும் என சொல்லப்படுகிறது.
இந்த தகவலை எனக்கு அனுப்பி வைத்த ஆனந்த விகடனில் பணியாற்றும் நண்பருக்கு நன்றி..