1.தலைவரே.. எப்படி வெட்கமே இல்லாம மறுபடி அதே கட்சி கூட கூட்டணி வெச்சுக்கிட்டீங்க?
மான அவமானம் பார்த்தா அரசியல்ல குப்பை கொட்ட முடியுமா?
------------------------------------------------------
2.இன்ஸ்பெக்டர்.. நிறைய பேர் டெயிலி என்னை ஃபாலோ பண்றாங்க..
விளையாடாதீங்க மேடம்.. ட்விட்டர்லயும்,ஃபேஸ்புக்லயும் அக்கவுண்ட் வெச்சா ஃபாலோ பண்ணத்தான் செய்வாங்க...
---------------------------------------------------
3.தலைவர் தொழில்ல ரொம்ப சுத்தம்னு எப்படி சொல்றே,,?
ஊழல் பண்றப்ப,. மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கறப்ப கைல கிளவுஸ் போட்டுக்குவாரு..
-----------------------------------------
4. உன் மனைவிக்கு தாடி வளர்ந்திருக்கே..?
பொண்ணு பார்க்கப்போனப்பவே பொண்ணு பரம சாதுன்னு சொன்னாங்க... இப்ப தான் அர்த்தம் தெரியுது...
----------------------------------------
5.பேச்சு வார்த்தை நடக்குதுன்னு தலைவர் சொல்றாரே,,,?
அதாவது பேரம் நடந்திட்டிருக்குன்னு அர்த்தம்.
------------------------------------------------------
6.தலைவரே.. தனியாத்தான் போட்டி இடுவேன்ன்னு சொன்ன நீங்க திடீர்னு இப்படி அந்தர் அல்டி அடிப்பீங்கன்னு எதிர்பார்க்கலை.
ஆக்ஷன் ஹீரோன்னா அப்படி டூப் போடாம பல்டி அடிச்சுதான் ஆகனும்.
------------------------------------------
7.எடிட்டர் சார்.. வயசான நடிகையின் பேட்டின்னு உங்க பத்திரிக்கைல போட்டு என்னை அவமானப்படுத்தீட்டீங்களே..
ஹி ஹி சின்ன மிஸ்டேக் நடந்துடுச்சு மேடம்.. 18 வய்சான நடிகையின் பேட்டின்னு வந்திருக்கனும்... 18 + போட்டாலே பிரச்சனை வந்துடுதுன்னு அதை மட்டும் கட் பண்ணிட்டோம்.
-----------------------
8. வேலை வெட்டி இல்லாத பையனுக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி வெச்சுட்டீங்களே..?
அதனால என்ன? மேரேஜ்க்குப்பிறகு என் பொண்ணுக்கு சமையல் செஞ்சு போடறது, அவ துணி மணியை துவைச்சு போடறதுன்னு மாப்ளை பிஸி ஆகிடுவாரு..
--------------------------------------
9.ஏய் மிஸ்டர்.. எனக்கு இந்த காதல் கத்திரிக்காய்னாலே பிடிக்காது..
மிஸ்.. பி டி கத்திரிக்காய்தான் எனக்கு தெரியும்.. அதென்ன காதல் கத்திரிக்கா..?
----------------------------------------
10.டாக்டர்.. நீங்க சொன்ன டூத் பேஸ்ட் தான் வாங்குனேன்.. ஆனா வாய் துர்நாற்றம் சரி ஆகல..
அட நாயே.. டூத் பேஸ்ட் வாங்குனே ஓக்கே.. பல் துலக்குனியா?
டிஸ்கி - அரசியல் ஜோக்ஸ்ல எதுக்கு சினிமா நடிகைங்க ஸ்டில்ஸ்..? சினிமால பாலிடிக்ஸ் புகுந்திருக்கற மாதிரி இப்போ அரசியல்ல சினிமா புகுந்திருக்கு..அரசியல் பிரச்சார கூட்டங்களுக்கு ஒரு கிளாமருக்காக நடிகைகளை மேடை ஏத்தப்போறாங்க.. ஆனானப்பட்ட அவங்களே அப்படி செய்யும்போது ஆஃப்டர் ஆல் நான் அவஙக ஸ்டில்லை போடக்கூடாதா? ( எதுக்கு நடிகைங்க ஸ்டில் போடனும்..? எதுக்கு 7 லைனல் இப்படி ஒரு தன்னிலை விளக்கம் அளிக்கனும்?)