Tuesday, February 01, 2011

நாளைய இயக்குநர் - 30 01 2011 - விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjJEVcMAaOphjPQVkyW_PlaQb7ug3S3LQwP55dUCrBbzkxnKwbuqrSYCZsXm7OtQlvHAOs2ZU0rMDN9EoOkcy1jQqLy7XZRa7FPzniuPRzbJhf7cr0xK-Q33Vg49DRT_4MvmURTkABLz4/s320/kalaingar-Tv-Naalaya-Iyakkunar_tamilkey-250x130.jpg 
முதல் படமா பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதுன சிறுகதையை குறும்படமா எடுத்த சத்ய சந்தரனோட சொல்ல மாட்டேன் படம் போட்டாங்க. அவர் அமரர் சுஜாதாவோட ரசிகர் போல . வசனங்கள் எல்லாம் ரொம்பவே ஷார்ப்.ஒருபேஷண்ட் டாக்டர்ட்ட வர்றான். சார்.. நான் எது சொன்னாலும் நெகடிவ்வா செய்யற கேரக்டர்ங்கறான். சரி உங்க பிரச்ச்னை என்ன?ன்னு கேட்டா சொல்ல மாட்டேன் அப்ப்டிங்கறான்.. சரி சொல்லாதீங்கன்னதும் சரி டாக்டர்.. சொல்றேங்கறான்.. இப்படி காமெடியா போற கதைல டாக்டரோட லோடு செய்யப்பட்ட ரிவால்வரை பேஷண்ட் கைல எடுக்கறான்.. டாக்டர் பதட்டத்துல அவன் கேரக்டர் ஞாபகம் இல்லாம டேய்.. கன் லோடு பண்ணீ இருக்கு சுட்டுடாதேங்கறார். டப்புன்னு சுட்றான்..

ஹீரோ நடிப்பு வசனம் 2-ம் ஓக்கே.. சுமார் டைரக்‌ஷன்.

2.  சா அறிவழகன் எழுதுன கதை ..டைட்டில் மரண அடி.பிரமாதமான டைரக்‌ஷன்.கதையோட KNOT  என்னன்னா சுடுகாட்டு வெட்டியான் தன்னோட மகனை பரம்பரைத்தொழில் செய்ய பணிக்கறான்.. அவன் அதைக்கேக்காம வேலை வேலைனு அலையறான்.கடைசில அப்பா இறந்ததும் வேற வழி இல்லாம குலத்தொழிலை செய்யறான்..

இந்தக்கதைல 2 விஷயம் பாராட்டலாம். நம்ம அப்பா இருக்கறவரை நமக்கு அவரோட மதிப்பு தெரியறதில்லை.அவர் இறந்த பிறகுதான் அவரோட பெருமையை உணர்றோம். (எனக்கு அப்பா தவறிட்டார்)அதை ரொம்ப இயல்பா எடுத்திருக்காங்க.இன்னொன்னு குலத்தொழில் விஷயம்.நம்ம அப்பா பண்ணுன தொழிலை செய்ய நாம கூச்சப்படறோம்.. அப்புறம் முட்டி மோதி வேற வழி இல்லாதப்ப அதை ஏத்துக்கறோம்..

படத்துல கலக்கலான வசனங்கள்

1. எல்லாருமே பல்லக்குல ஏறி உட்கார்ந்துட்டா அப்புறம் பல்லக்கை சுமக்குறது யாரு?

2. அப்பா.. எதுக்கு உன் கதையை எல்லாம் என் கிட்டே சொல்றே..?

வேற யாரு என் பேச்சை கேக்கறா..?

3. ஒரு மனுஷன் 100 பேருக்கு நல்லது பண்ணீ இருந்தாலும் 4 பேருக்காவது கெட்டது பண்ணாமயா இருந்திருப்பான்..?அதை மனசுல வெச்சுக்கிட்டுத்தான் இந்த வெட்டியான் வேலையை செய்ய முடியும்..

4. வெட்டியான் பையன் வேலை கேட்டு நடையா நடக்கிறானே.. அவனுக்கு ஒரு வேலை போட்டுத்தர்றது?

அது சரி.. அப்புறம் வெட்டியான் வேலையை யார் செய்யறது?இவனுங்களை எல்லாம் மேலே வரவே விடக்கூடாது.

படத்துல ரெண்டே 2 கேரக்டர்.. அப்பா ,பையன்  2 பேர் நடிப்பும் அருமை. கேமராவும் கலக்கல். இந்தப்படத்துக்குத்தான் முதல் பரிசு குடுப்பாங்கன்னு நினைச்சேன்...ஆனா 2வது பரிசுதான் கிடைச்சது.

http://vannitube.com/wp-content/uploads//2010/09/208.jpg
3. அருள் வரதனோட சத்யம் படம் அகதா கிறிஸ்டி எழுதுன WHO IS THE WITNESS  நாவல்ல வர்ற ஒரு சம்பவத்தை அடிப்படையா வெச்சு எழுதப்பட்ட சிறுகதை.

ஒரு கேரளா கிராமம்.. சுடுகாடு.ஒரு ஆள் வெயிட் பண்றான். போலீஸ் ஆஃபீசர் வர்றார்.. யாரப்பா நீ?ன்னு விசாரிக்கறாரு.. 20 வருஷத்துக்கு முன்னே காலேஜ் படிக்கறப்ப பெரிய ஆள் ஆனதும் இந்த தேதில இன்ன நேரத்துல சந்திக்க்றதா பிளான்..அப்படின்னு சொல்ல சரின்னு அவர் கிளம்பி போறாரு. போலீஸ் கூட்டம் வந்து அவனை கைது பண்ணுது. அவன் போலீசால் தேடப்படற குற்றவாளி.. அந்த போலீஸ் ஆஃபீசர்தான் அவனோட நண்பன்.. இந்த ட்விஸ்ட் எதிர்பார்த்ததுதான் என்றாலும் சுவராஸ்யமாவே இருந்தது.. ஆனா 2 பேருக்கும் நடிப்பு சரியா வர்லே.. படத்துல பாரட்ட வேண்டிய அம்சம் கேமரா கோங்கள்.

4. ஆனந்த விகடன்ல கதாவிலாசம் எழுதி இலக்கிய உலகை ஒரு கலக்கு கலக்கின எஸ் ராம கிருஷ்ணன் எழுதுன கதையை வீட்டுக்கணக்குங்கற டைட்டிலோட படமாக்குன அருண் பிரசாத்துக்கு முதல் பரிசு.

கதை என்ன? அப்பா ஒரு உருப்படாத கவிஞன். சினிமாவுக்கு பாட்டு எழுதறேன்.. சான்ஸ் கிடைக்கும்னு கனவோட இருக்கற உதவாக்கரை. அவனோட மனைவி வேலைக்குபோய் சம்பாதிச்சு குடும்பததினை பாத்துக்கறா. (மனைவியோட முகம் ஒரு ஷாட்ல கூட காட்டாம விட்டது டைரக்‌ஷன் டச்..)அவனுக்கு ஒரு மக. அந்த சின்னப்பொண்ணை கடைக்கு அனுப்பி ஓ சி ல சிகரெட் வாங்குறது.. பக்கத்து வீட்ல அஞ்சு பத்து கடன் வாங்குறதுன்னு இருக்கான்.. ஒரு சமயம் ஹவுஸ் ஓனர் காலி பண்ண சொல்லிடறார். அவன் குடும்பத்தோட காலி பண்ணிட்டு போயிடறான்.காலி பண்ணுன வீட்ல அந்த  சின்னப்பொண்ணு அப்பா யார் கிட்டே எவ்வளவு கடன் வாங்கி இருக்கார்னு சுவர்ல எழுதி வெச்சிருக்கா.

கேக்க சாதாரணமா இருக்கற இந்தக்கதைல அந்த சின்னபொண்ணோட நடிப்பு பிரமாதமான தூணா படத்துக்கு கை குடுத்திருக்கு...வெல்டன்..
எங்கப்பா ஒரு நாள் பெரிய ஆளா வருவாரு..உங்க கடனை எல்லாம் அடப்பாரு என எல்லோரிடமும் சலிக்காமல் கூறும்  நடிப்பு கலக்கல்.