1.ஆசிரியர் - வெள்ளையர் ஆட்சியை ஏன் எதிர்த்தோம்?
மாணவன் - எத்தனை நாளுக்குத்தான் வெளி ஆட்கள் நம்ம நாட்டை கொள்ளை அடிக்க அனுமதிப்பது?
-----------------------------------------------------
2. பி ஜே பி - காங்கிரஸ் என்ன வித்தியாசம்?
இவங்க கர சேவை செய்யத்துடிக்கறாங்க.. அவங்க கரப்ஷன் ( CORRUPTION) சேவை (ஊழல்) செஞ்சே நம்மளை துடிக்க வைக்கிறாங்க...
-------------------------------------------------------------
3.தலைவ்ரே.. மார்ச் மாசத்துக்குள்ள விலைவாசி குறையும்னு எப்படி சொல்றீங்க?
மாசத்தை சொன்னேன்... வருஷத்தை சொன்னேனா?
-----------------------------------------------
4.அந்த காலேஜ் ஸ்டூடண்ட் அரசியல்வாதி பையன் தான்னு எப்படி சொல்றே?
க்ளாஸ்ரூம்ல எந்த ஃபிகர்ட்டயும் நான் கிஸ் கேக்கலை.. ஆனா அவங்களா குடுத்தா நான் வேணாம்னு சொல்லமாட்டேன் அப்படின்னானே..?
-------------------------------------------------
5.எந்த செல்ஃபோன் கம்ப்பெனிக்கு மாறுனாலும் இனி நம்ம செல்ஃபோன் நெம்பர் மாறாதாமே..?
இதென்ன பிரமாதம்? எந்தக்கட்சி கூட கூட்டணியை மாத்திக்கிட்டாலும் நம்ம தலைவர் 25 சீட்தான் வேணும்னு அடமா மாறாம இருக்காரே..?
----------------------------------------------------------
6.ரொம்ப நாள் கழிச்சு மேடை ஏறுன மகளிர் அணித்தலைவியை பார்த்து தலைவர் கொண்டாட்டம் ஆகிட்டார்.
இருக்கட்டும், அதுக்காக மேடையிலேயே “ அடி யாத்தே யாத்தே” னு வேட்டியை முகத்துல மூடிக்கிட்டு பாட்டு பாடி ஆடனுமா?
-----------------------------------------------------
7. மிஸ். மோஹனா.. உங்களை நான் 10 வருஷமா லவ் பண்றேன்..
ரொம்பப்பழசான , வயசான லவ்வா இருக்கே..?
-----------------------------------------------------------
8.தலைவருக்கு சினிமா நாலெட்ஜூம் இல்ல.. ரவுடிகள் நடமாட்டம் பற்றிய நாலெட்ஜூம் இல்லன்னு எப்படி சொல்றே..?
ராக்கெட் ராஜாங்கறது சயிண்ட்டிஸ்ட் ஆளா?ன்னு கேக்கறாரே..
-------------------------------------------------------
9.தலைவ்ரே.. நேர்மையான ஆட்சி நடத்துவீங்களா?ன்னு நிருபர் கேக்கறரு..
இன்னுமாய்யா இந்த உலகம் என்னை நம்புது...
------------------------------------------------------
10 அசிஸ்டெண்ட் டைரக்டர் - சார்... வீடு வாடகைக்கு வேணும்...
ஹவுஸ் ஓனர் - ஸாரி.. சினிமாக்காரனுக்கு வீடு தரமாட்டோம்.
அசிஸ்டெண்ட் டைரக்டர் - சினிமாக்காரரை நம்பி சி எம் சீட் தர்றீங்க.. நாட்டை தர்றீங்க.. சிம்ப்பிளா ஒரு வீட்டை வாடகைக்கு தர மாட்டேங்கறீங்களே...
--------------------------------------------
டிஸ்கி 1 -- வட போச்சே....
டிஸ்கி 2 - போன இடுகைல தாப்ஸி பற்றி போட்ட கமெண்ட்டுக்கும், தமனா பற்றி சொன்னதுக்கும் கடும் எதிர்ப்பு.. அதனால 2 பேர் ஃபோட்டோவும் போட்டுட்டேன்.. யாரை வேணாலும் ரசிச்சுக்குங்க..( காசா.. பணமா?). 2 பேருக்கும் உள்ள ஒற்றுமை என்னன்னா 2 பேரும் வெளில எங்காவது போறப்ப தலை சீவ மாட்டாங்க போல..அப்புறம் ரொம்ப ஓப்பன் டைப்.. ஹி ஹி
டிஸ்கி 3..- நேத்து நெட் பக்கம் வராதவங்களுக்காக....
1.