Saturday, January 29, 2011

பதினாறு - டீன் ஏஜ் வில்லேஜ் லவ் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgte2Di1pC5KWzZwwigqHsE-S7x5OHzpgaborjJ-nCnY636gZT2RKnqbIUIO0OPu46q1F6Crk98tR77VJW_K6m-0zXXSP47h7zFz8x7EAAH9ax9wUH0M-n-WTHfRdENkYqfBTiGXblYREw/s320/pathinaru+Songs+Free+download+Cd+Covers.jpg

ஆனந்த விகடனில் தொடராக வந்த சொர்ணமுகி படத்தோட ஒன்லைன் தான்
கதை..(கே எஸ் அதியமான் டைரக்‌ஷனில் ஆர் பார்த்திபன் நடித்த படம்).அதாவது  காதலி ஒரு சிக்கலான கட்டத்தில் ஒரு கால அவகாசம் கொடுத்து காதலனை வரச்சொல்ல அவனால் வர முடியாமல் போவதால் ஏற்படும் குழப்பங்களும், பிரச்சனைகளும்தான் திரைக்கதை.

படத்தோட மெயின் கதையை விட சில சமயங்களில் கிளைக்கதை எனப்படும் ஃபிளாஷ்பேக் கதை ஆழமாகவும்,மனதைத்தைப்பது போலவும் அமைந்து விடுவது உண்டு.. அது படத்தின் மெயின் கதையை டாமினேட் பண்ணும்போது ஏற்படும் சிக்கல் இந்தப்படத்துக்கும் ஏற்படுகிறது.

அழகி படத்தில் வருவது போல் காட்டப்படும் அந்த கிராமத்துக்காதல் கதையில் வரும் ஹீரோயின் நல்ல நடிப்புத்திறமையும்,சட் சட் என மாறும் முக பாவமும் பிளஸ் என்றால் அவரது இளமை கூடுதல் போனஸ்.(இமேஜில் தேடிப்பார்த்தால் அவரது ஃபோட்டோ கூகுளில் கிடைக்கல)

டென்த் படிக்கும்  மாணவர்களின் காதல் கதை என்பதால் இது அடலசண்ட் லவ்வை உற்சாகபடுத்துவதுபோல் அல்லாமல் டீன் ஏஜ் காதல் செல்லாது ..ஆகாது என்பது போல் நீதி உணர்த்திய இயக்குநர் அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் திரைக்கதையில் ஜால வித்தை காட்ட தவறி விட்டார்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNMtvIvJaqQja9f9nYn3wLRZoQHaK9fnqTJIvG3-visMVTZDbGYV_oI4PQhf7w3mFYVOBwU4rvzJgAzRZBh-Z3rA0P98WQXGC3lUtTlwO4SqFVFawCpEQH5g8J3ycT5AwVNTabqwsxccQ/s1600/Madhu+Shalini+In++16+pathinaaru+movie+Stills+%25286%2529.jpg
மெயின் கதையின் ஹீரோயின் இவர்தான். பார்ட்டி படு சுமார்தான். ஆனால் இவரது அம்மாவாக வருபவர் செம கலர் + ஷைனிங்க். ( அது என்னமோ தெரியல..ஹீரோயின் தங்கையா வர்றவரோ, தோழியா வர்றவரோ நம்ம கண்ணுக்கு கலக்கலா தெரியறாங்க..( சரி டீன் ஏஜ்ல இதெல்லாம் சகஜம்..)


படத்தோட ஓப்பனிங்க் சீன்ல வர்ற டூயட்ல ஹீரோயின் பல கிஃப்ட்களை ஹீரோவுக்கு கொடுக்க ஹீரோ ஹீரோயினுக்கு ஒரே ஒரு சின்ன கிஃப்ட் பாக்ஸ் குடுக்க அதை ஓப்பன் பண்ணி பார்த்தால் அந்த நகைப்பெட்டி காலி,, செம நக்கலோடு டூயட் தொடர்கிறது..

காட்டு செடிக்கு காவல் கிடைச்சிடுச்சு என தொடங்கும் பாடல் ஃபிளாஷ்பேக்கில் வரும் காதலை அழகியலோடு அணுகும் அற்புத தொடக்கம்.இயக்குநர் கவிநயம் மிக்கவர் என்பதற்கு அந்த ஒரே ஒரு பாடலே போதும்.

அந்தப்பாட்டில் ஆசிரியர் மாணவிக்கு தண்டனையாக முட்டி போட வைப்பது பழசு என்றாலும் அவள் அரிசி பரப்பிய தரையில் முட்டி போடுவது புதிய கிராமக்கலாச்சாரப்பதிவு.

  https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAPVw2VkDjSv935tFOIxkqNEbuLEAOc_8Rj0yVEno3GvmPjynKesmXBfmKmSOnjyUZeZYORcqBVOLn3zzdXJE3aPRx4bS8YQfviQhyzUqnzHubycmuWZNAH5epDCMeaDQiAZaTzx4Ki9FU/s1600/16_tamil_movie_stills_photos_01.jpg அட
டென்த் படிக்கும் பெண்ணாக வருபவர் சிறுமியாக வரும் சீனிலும் சரி, வயதுக்கு வந்த பருவக்குமரியாக வரும்போதும் சரி அவர் காண்பிக்கும் பாடி லேங்குவேஜ் மாற்றம் அபாரம்.. (இப்போ இருக்கற முன்னணி ஹீரோயின்கள் கவனிக்க.)


களவாணி படத்தில் எல் சி 311 கூட்டு என்பதை மகேஷ் என மாற்றுவது மாதிரி இதிலும் 16 என்ற எண்ணை  I G  கற்பிதம் செய்வது அழகு..  ( ஐ - இளவரசி ஜி -கோபி

ஆனால் இடைவேளைக்குப்பிறகு தனது காதலில் நாயகி உறுதியாக இருப்பது போல் காட்ட நினைத்தவர் வீம்பு பிடித்த பெண்ணாக காட்டியது திரைக்கதை கோளாறா? கேரக்டர் வடிவமைப்பில் ஏற்பட்ட பிழையா?

பொதுவாக எல்லாரையும் நல்லவராக காட்ட நினைக்கும் இயக்குநரின் நல்லஎண்ணம் புரிகிறது. ஆனால் முறை மாமனை, நல்லவனாக காட்டியதால் அவர் மீது பரிதாபம் ஏற்பட்டு  இந்த காதல் ஜோடி சேர்ந்துதான் ஆக வேண்டுமா? என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவது படத்தின் வெற்றிக்கு மாபெரும் மைனஸ்.

படத்தின் வசனகர்த்தா பட்டையை கிளப்பிய இடங்கள்


1. அவசர அவசரமா வாழ்ந்துட்டு சீக்கிரமா சாகறதுக்காகத்தான் மனுஷன் படைக்கப்படுகிறானா?

2.  ஹீரோயின் - ஹலோ...

ஹீரோ - எஸ் .. கோடம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்...

ஹீரோயின் - விளையாடாதீங்க.. நான் தான்.

3. என் ஃபியூச்சரை டிசைடு பண்ண பேரண்ட்ஸா உங்களுக்கு எப்படி ரைட்ஸ் இருக்கோ அதே மாதிரி எனக்கும் ரைட்ஸ் இருக்கு.

4. டே.. மச்சான்.. இந்து காலேஜ்ல டி சி வாங்கிட்டு வீட்டுக்கு போயிட்டா..

இப்போ என்னடா பண்றது?

நீயும் டி சி வாங்கிட்டு போயிடு.. அதுதான் காதலுக்கு மரியாதை.


5. பீச்ல அலை வந்து மோதுதே அது மாதிரி தான் காதலும்..

டேய். அவன் இதுவரைக்கும் பீச்சுக்கே போனதில்லையா? இப்படி விளக்கறே.. ( நையாண்டி டூ டி ஆர்?)

6. அவங்க ரொம்ப நல்லவங்களா தெரியறாங்க...

எப்படி சொல்றே..?

கார் வெச்சிருக்காங்களே...?

7. அடப்பாவி.. இந்த ஆண்ட்டி யார்டா? எப்போ கரெக்ட் பண்ணுனே.?எங்க கிட்டே சொல்லவே இல்ல..?

டேய்.. கொல்லாதீங்கடா..இது என் ஆளோட அம்மாடா..

ஓ சாரி .. நிஜமான ஆண்ட்டியா?

8. எல்லாமே உன்னாலதான்னு நான் சொல்ற மாதிரி என் கிட்டே நிறைய விஷயங்கள் இருக்கு.. ஆனா என்னாலதான்னு நீ சொல்ற மாதிரி உன் கிட்டே எதுவுமே இல்லையா?


9. என்னை உனக்கு பிடிக்கலைன்னு தெரியும்.. இருந்தாலும் இப்படி என் பைக் பின்னால நீ உக்காந்து வர்றது மனசுக்கு சந்தோஷமா இருக்கு.

10. டேய், சொந்த மாமன் மகளை பைக்ல கூட்டிட்டு போறது பெரிய விஷயமாடா..இந்த அலட்டு அலட்டறியே..?நாங்க எல்லாம் சினிமாக்கே கூட்டிட்டு போயிருக்கோம்..

எது அந்த 5 வயசு பொண்ணைத்தானே...

11. என்னடா..ஃபோட்டோ எடுக்கறப்ப யூனிஃபார்ம் போட்டுட்டு வந்திருக்கே..?வேற டிரஸ் போட்டுட்டு வா  போ..

என் கிட்டே இருக்கறதே இந்த ஒரு டிரஸ்தான்,அதுவும் நீ எடுத்துக்குடுத்ததுதான்.

12. மாலைக்கும் ,கழுத்துக்கும்  என் கழுத்து நின்னுச்சுன்னா அது உனக்கு மட்டும்தான்.

13.  ஊரே கூடி தேர் இழுத்தாலும் தேர் போய் சேரும் இடம் கோயில்தான்..என் கோயில் என் ஆள் கோபிதான்.

14. காதல்ல தோத்துப்போன யாரோ ஒருத்தரோட கதையைப்படிச்சாஎங்க மனசு மாறிடுமா?

15. காதலிக்காத ஒரு ஆளைக்காட்டுங்க.. நான் காதலிக்கறதை விட்டுடறேன்னு சொல்றியே...அப்படிக்காதலிச்சு கல்யாணம் பண்ணுனவங்க சந்தோசமா இருக்கறதைக்காட்டு...பார்ப்போம்.. விரல் விட்டு எண்ணிடலாம்.

16. மரணம்கறது ஒரு சம்பவம்..ஆனா என்னைப்பொறுத்தவரை நம்ம நினைவுகள்ல இருந்து நம்ம மனசுக்கு பிடிச்சமானவங்க எப்போ போறாங்களோ (பிரியறாங்களோ) அதுதான் மரணம்.

17 நான் செத்துப்போயிட்டேன்னு நினைச்சு அவ இப்படி நடைப்பிணமா வாழ்ந்திட்டு இருக்கா. நான் உயிரோட இருக்கறது தெரிஞ்சா அவ செத்துப்பொயிடுவா..

தமிழ்ப்படம் படத்துல ஹீரோவா நடிச்ச ஷிவா இந்தப்படத்துல சீரியஸ் ஹீரோவா நடிக்க வேண்டிய கட்டாயம். ஆனா அவர் சும்மா கெஸ்ட்
ரோல் மாதிரிதான்.மதுஷாலினிதான் ஹீரோயின்.அவங்க நடிப்பும் சுமார்தான்.

கிளைக்கதையில் வரும் பாத்திரங்கள் அனைவரின் நடிப்பும் டாப்.ஆனால் என் வருத்தம் எல்லாம் ஒரு சூப்பர் ஹிட் ஆக வேண்டிய படத்தை இயக்குநர் கவனக்குறைவால் சாதாரண லவ் சப்ஜெக்ட் ஆக்கி விட்டார் என்பதுதான்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

எத்தனை நாள் ஓடும்?  ஏ செண்ட்டர்களில் படம் ரிலீஸ் ஆன மாதிரியே தெரியல.. 25 நாள் ஓடலாம். காதலர்கள் பார்க்கலாம்.