சின்னப்பசங்க படிக்கிற அம்புலிமாமா கதைதான்.நம்மாளுங்க தமிழ்ல வர்ற பாலமித்ரா..ரத்னபாலா கதைகளை எல்லாம் இளக்காரமா பேசுவாங்க.. ஆனா அதே கதை ஹாலிவுட்ல சொல்லப்படும்போது பிரமிப்பா பார்ப்பாங்க.. ஹாரிபாட்டர் கதைகள் ஃபேமஸ் ஆனது இப்படித்தான்.
அந்தக்காலத்துல ( எந்தக்காலத்துல?..) நடக்கறதா சொல்லப்படும் கதை.ஊர்ல சூன்யக்காரிகள்..சூன்யக்காரிக்கு உதவியா இருந்த பொண்ணு ..( பொண்ணுன்னாலே சூன்யக்காரிதான் என்பது டைரக்டரின் வாதம்) என எல்லாருக்கும் மரண தண்டனை கொடுப்பது போல கதை ஆரம்பிக்குது.அப்புறம் ஒரு சூன்யக்காரியை ( பார்ட்டி நல்ல ஃபிகர் - திகில் படம் பார்க்கற களேபரத்துலயும் உனக்கு கிளு கிளுப்பு கேக்குது..?) சில வீரர்கள் கூண்டில் அடைத்து 500 மைல் தள்ளி இருக்கற ஒரு இடத்துக்கு அழைச்சுட்டு போறாங்க..
எதுக்கு 500 மைல்? என்ன சார் நீங்க... படத்தை வளர்த்த வேணாமா? அங்கே ஸ்பாட்டுக்கு போவதற்குள் அவர்கள் சந்திக்கும் இடர்ப்பாடுகள் தான் கதை.
பொதுவா இந்த மாதிரி பயணக்கதைகள்னாலே ஒரு ஆபத்து இருக்கு.. கொஞ்சம் ஏமாந்தாலும் திரைக்கதை போர் அடித்துவிடும்.விதி விலக்காய் ஹிட் அடித்த படங்களில் ஞாபகம் உள்ளவை மைனா, திருடா திருடா,கண்டேன் காதலை ( ஜப் வி மெட்). கோட்டை விட்டதில் நினைவு உள்ளவை கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன்
மேலே இருப்பதுதான் சூன்யக்காரி.. அந்த ஃபிகர் சூன்யக்காரி.யா? சூட்சுமக்காரியா?ன்னு எல்லாரும் ஒரு முடிவுக்கு வர்றதுக்குள்ள படத்துல இடைவேளை வந்துடுது.
THE NATIONAL TREASURE (புதையலைத்த்தேடி) படத்துல ஹீரோவா நடிச்ச நிக்கோலஸ் கேஜ் தான் இந்தப்படத்தோட ஹீரோ.. கடைசில செந்தூரப்பூவே கேப்டன் ரேஞ்சுக்கு உயிர்த்தியாகம் எல்லாம் செய்யறாரு.இதே மாதிரி ஸ்டீரியோ டைப் படங்கள்ல நடிச்சுட்டு இருந்தா மார்க்கட் கோவிந்தாதான்.
ஹீரோயின் அந்நியன் படத்தில் விக்ரம் க்ளைமாக்ஸில் ரெமோவாக,அந்நியனாக,அம்பியாக சட்சட் என முகம் மாறுவாரே அது மாதிரி...நம்ம டாக்டர் ராம்தாஸ் எலக்ஷனுக்கு எலக்ஷன் அய்யா.. அம்மா அப்படி மாத்தி மாத்தி பல்டி அடிப்பாரே .. அந்த மாதிரி அடிக்கடி மாறும் முக பாவனைகள் அற்புதம்.அவர் நல்லவரா? கெட்டவரா? என ஒரு முடிவுக்கே வர முடியாதவாறு கேரக்டர் சித்தரிப்பு அருமை.
வசனகர்த்தா வசப்படுத்திய இடங்கள்
1. நான் உங்களோட வந்தது ஆள்றதுக்குத்தான்.. இத்தனை உயிர்களை கொல்றதுக்கில்லை...
எல்லாம் ஆண்டவன் கட்டளைப்படிதான் செஞ்சுட்டு வர்றேன்..
ஓஹோ.. அப்போ நீங்களும்,ஆண்டவனும் அடிக்கடி பேசிக்குவீங்களா?
2. இதுக்கு முன்னால வேற யாராவது அங்கே போயிருக்காங்களா?
இல்லை...
அப்போ நாம கண்டிப்பா அங்கே போறோம்.
3. நான் செஞ்ச அசிங்கமான சிலை இன்னும் அங்கேயேதான் இருக்கு.
அப்போ அது உன்னை மாதிரியேதான் இருக்கும்னு சொல்லு.
4. உன் கெட்ட நேரம்.. எங்க கிட்டே மாட்டிக்கிட்டே..
இந்த சூன்யக்காரியையும் அங்கே கூட்டிட்டா போறோம்?
பின்னே.. அங்கே கும்மாளம் போடவா போறோம்?
5. ஒரு பொண்ணு நினைச்சா இந்த உலகத்தையே தலைகீழா மாத்திட முடியும்.
பொண்ணுங்களை நம்பி ஏமாறுவதை முதல்ல நிறுத்து..
6.நம்ம கிட்டே இருக்கற பலவீனங்களை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கறது பொண்ணுங்களுக்கு கை வந்த கலை.
7. நீங்க என்னை தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க...
ஏன்னா நீ தப்புதப்பாத்தானே காரியங்களை பண்ணீட்டு வர்றே..?
8. பாதிலயே வந்த வாழ்க்கை இது.. பாதிலயே போயிடும்.. அதுக்குள்ள பாவங்கள் செஞ்சு மேலும் நாம பாவிகள் ஆகனுமா?
9. சூன்யக்காரிகள்னு அபாண்டமா பழி போட்டு அப்பாவிப்பொண்ணுங்களை கொல்றீங்களே.. அவங்களுக்கு நிஜமாவே அப்படி ஒரு சக்தி இருந்தா தன்னைத்தானே காப்பாற்றி இருக்கலாமே... ( வாட் எ லாஜிக் கொஸ்டீன்)
10. இப்போ நாம எங்கே இருக்கோம்?
வழிகாட்டி - எனக்கே தெரியலை.
11. நாம எல்லாருமே பொணமாத்தான் போய்ச்சேருவோம்னு நினைக்கிறேன்.
நான் உயிரோட இருக்கறவரை அது நடக்காது..
அப்போ முதல்ல சாகப்போறது நீ தான்.
12. நாம கஷ்டப்படறதைப்பார்த்துக்குட்டு சும்மா இருக்கறவன் எப்படி ஆண்டவனா இருக்க முடியும்? ( செம கேள்வி)
13. சூன்யக்காரி - நான் பேச ஆரம்பிச்சா ஆண்டவனால கூட பதில் சொல்ல முடியாது.
நம்பவே முடியல..யார்னே தெரியாத ஒருத்தியை காப்பாற்ற இத்தனை பேரா?
சிதைந்து போன தொங்குபாலத்தில் சூன்யக்காரியின் வண்டியை கடக்க வைக்கும் இடம் செம விறு விறுப்பு.அந்த ஒரு இடத்தில் மட்டும் இசை அமைப்பாளர் ஆடியன்சின் டெம்ப்போவை ஏற்றும்படி கலக்கலாய் மியூசிக் போட்டிருக்கிறார்.
மற்றபடி ஜஸ்ட் பாக்கலாம்.படத்துல பெரிசா சொல்ற அளவு ஒண்ணும் இல்ல.
ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல இந்தப்படம் பார்த்தேன். ரொம்ப பயமா இருந்துச்சு.. ஹ்ஹி ஹ்ஹி தியேட்டர்ல மொத்தமே 23 பேர்தான்..ஏதோ 1000 பேர் இருந்தாலாவது ஆயிரத்தில் நான் ஒருவன்னு பெருமையா சொல்லிக்கலாம்..