Tuesday, January 25, 2011

விஜய் -ன் டாப் 10 படங்கள்

dd9cdc28-d2a7-495c-ace4-1e758b651a481.jpg (450×256)
பொதுவா டாப் 10 படங்கள் மாதிரி பதிவை யாராவது தொடர்பதிவுக்கு அழைச்சாத்தான் போடறாங்க.. என்னை யாரும் அழைக்காமயே போட 2 காரணம்.

1. என்னை யாரும் மதிக்கற மாதிரி தெரியல ( ஹி ஹி வழக்கமா நடக்கறதுதானே..)2.குடும்பத்துல எல்லாரும் அழைச்சிட்டுபோய் பொண்ணு பாக்கற வைபவம் என்னதான் கலகலப்பு இருந்தாலும் நாமா தனியா போய் சைட் அடிக்கறதுல ஒரு கிளு கிளுப்பு இருக்கத்தான் செய்யுது..

10. கண்ணுக்குள் நிலவு. ஃபாசில் இயக்கிய இந்தப்படம் வசூல் ரீதியா தோல்விப்படமா இருந்தாலும் ,விஜய்க்கும்,அவரது ரசிகர்களுக்கும் இது முக்கியமான படம்.அவர் நடிச்ச படங்கள்லயே அதிக அளவு வித்தியாசமான முக பாவங்களை வெளிப்படுத்துன படம் இதுதான்.வித்தியாசமான சஸ்பென்ஸ் திரில்லர் படம். ஆனா அந்த சஸ்பென்ஸ் ஓவர்டோஸ் ஆகி தங்களை ஏமாத்தறதா ரசிகர்கள் நினைச்சதன் விளைவு படம் அவுட்.தன்னால் கொலை செய்யப்பட்டதா நம்புன பொண்ணு தன் கண் முன்னால உயிரோட வர்றப்ப விஜய் காண்பிக்கும் ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்ஸ் டாப் கிளாஸ்.ஷாலினி விஜய் லவ் சீன்ஸூம் ரொம்ப கவிதையா இருக்கும்.ஈரோடு அபிராமியில் 13 நாட்களே ஒடியது.

9. ஷாஜகான் - நண்பனின் காதலியை அவனோடு சேர்த்து வைக்கும் ஹீரோவின் கதைதான். சாதாரண இந்தக்கதை விஜய்-ன் ஸ்பெஷல் ஆனது    விஜய் ஸ்மார்ட்டான கலரில் சர்ட் அணிந்து போட்ட டான்ஸ் ஸ்டெப்கள் ஒண்டர்ஃபுல்.டான்ஸ் மாஸ்டர் சொல்லித்தந்ததை மட்டும் ஆடி விட்டுப்போகாமல் தனது ஸ்டைலில் ஸ்பெஷலாய் ஏதாவது செய்ய வேண்டும் என்ற தவிப்பு இந்தப்பாடலில் எதிரொலிக்கும்.காதலை விட்டுக்கொடுக்கும் பெரும்பாலான படங்கள் கமர்ஷியல் சக்‌சஸ் ஆவதில்லை என்ற பொது விதியின் படி இந்தப்படமும் ஓடவில்லை.ஈரோடு ராயலில் 28 நாட்களே ஓடியது.

8.ஃபிரண்ட்ஸ்- விஜய் -ன் மார்க்கெட் டவுன் ஆகும்போதெல்லாம் அவருக்கு கை கொடுப்பது கேரளாதான். சித்திக் இயக்கிய இந்தப்படம் சத்தமே இல்லாமல் வந்து சக்கை போடு போட்டது.காமெடி கலக்கல் படம். வடிவேல் சர்வசாதாரணமாக விஜய்யை வாடா போடா என சகட்டு மேனிக்கு திட்டுவது போல் காட்சிகள் இருந்தாலும் விஜய் பெருந்தன்மையாக அதில் நடித்து பாத்திரத்துக்கு உயிர் ஊட்டினார்.பன்ச் டயாலக்கை நம்பாமல் திரைக்கதையயும்,காமெடியையும் நம்பினால் சக்சஸ் என்று உணர்த்திய படம்.ஈரோடு சண்டிகாவில் 80 நாட்கள் பின் சங்கீதாவில் 25 நாட்கள் ஓடியது

7.வசீகரா -இந்தப்படம் விஜய்-ன் வித்தியாசமான காமெடி சென்சை உணர்த்திய படம்.படம் முழுக்க நகைச்சுவை தோரணங்கள் கொடி கட்டிப்பறக்கும்.நெஞ்சம் ஒரு முறை வா என்றது பாட்டில் விஜய் சினேகா இருவரும் எம் ஜி ஆர் சரோஜா தேவி போல் ஆடி நடித்த இந்தப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெறாமல் போனது ஏமாற்றம்தான்.ஆனால் இதே போல் ரஜினிக்கும் மிஸ்டர் பாரத்தில் நடந்தது, என்னம்மா கண்ணு சவுக்கியமா? பாடல் காட்சியில் ரஜினி,சத்யராஜ் இருவரும் கலக்கலாக நடனம் ஆடி அவரவர் ஸ்டைலில் அசத்தி இருந்த போதும் ரசிகர்கள் பிரமாதமாய் ரசிக்கவில்லை.ஈரோடு அன்னபூரணி தியேட்டரில் இது 23 நாட்களே ஓடியது.

6.பிரியமுடன் - விஜய்க்கு அவரது கேரியரில் முக்கியமான படம்.கிட்டத்தட்ட சைக்கோ கம் வில்லன் கேரக்டர்..பாஜிகர் படத்தில் ஷாரூக்கான் நடித்த கேரக்டர்.இந்தப்படம் பார்க்கும்போது இது எடுபடாது.. தமிழில் ஓடாது என்றே நினைத்தேன். ஆனால் படம் ஹிட்.கவுசல்யாவின் அப்பாவை பேசிக்கொண்டே மாடியில் இருந்து தள்ளி கொலை செய்யும்போது விஜய் பிரமாதமாய் நடித்தார்.அதேபோல் க்ளைமாக்ஸ்சில் தனது காதலைப்பற்றி சொல்லிக்கொண்டே உயிர் விடும் காட்சியிலும் கலக்கினார்.ஈரோடு ராயல் தியேட்டரில் இது 53 நாட்கள் ஓடியது.

trisha_n_vijay.jpg (400×397)
5.திருமலை. - தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா, ஸ்ரீ வித்யாவுக்கு பாத்ரூமில் சோப்போடுவது மாதிரி சீன்களில் எல்லாம் நடித்து பேரை கெடுத்துக்கொண்ட விஜய் இந்தப்படத்தில்தான் ஆக்‌ஷன் ரூட்டில் பயணிக்க ஆரம்பித்தார்.வாழ்க்கைங்கறது ஒரு வட்டம் மாதிரி இதுல ஜெயிக்கறவன் தோப்பான், தோக்கறவன் ஜெயிப்பான் என பேசிய பன்ச் டயலாக் சூப்பர் ஹிட்.விஜய் -ன் கேரியர் புது பாணியில் வெளிப்பட அடி கோலிய படம்.அதே போல் ஜோதிகாவுக்கு நிகராக டான்ஸ் காட்சியில் முக பாவங்களை சட் சட் என மாற்றி நடித்த படம்.ஈரோடு ராயல் தியேட்டரில் இது 43 நாட்கள் ஓடியது.

4.குஷி -இயக்குநர் எஸ் ஜே சூர்யா செய்த உருப்படியான ரெண்டே காரியம் 1. வாலியில் அஜித்தை இயக்கியது.. 2. குஷி படத்தில் விஜய்யை இயக்கியது. எம் ஜி ஆர் காலத்தில் வந்த அன்பே வா பட KNOT தான். ஆனால் படம் முழுக்க ஜாலியாக போகும். என் இடுப்பை பாத்தியா? -இல்ல பாக்கல போன்ற பிரசித்தி பெற்ற வசனம் இதில் உண்டு.மேட்டோ ரீனா மேட்டோ ரீனா விசில் அடிக்கும் நிலவு தானா..பாட்டில் டான்ஸ் கொடி கட்டி பறக்கும்.கட்டிப்பிடி கட்டிப்பிடிடா கண்ணாளா மும்தாஜின் நடனமும் ஃபேமஸ்.இந்தப்படத்தில் ஜோதிகா பல இடங்களில் ஓவர் ஆக்டிங்க் பண்ணி இருப்பார், விஜய் அண்டர்பிளே ஆக்டிங்க் பண்ணி சமப்படுத்தி இருப்பார். ஈரோடு ஆனூர் தியேட்டரில் இந்தப்படம் 70 நாட்கள் ஓடியது.

3.காதலுக்கு மரியாதை - விஜய் என்றால் விடலைப்பசங்கதான் ரசிகர்கள், சங்கவி கூடத்தான் சுத்துவார் என்ற இமேஜை உடைத்து தமிழ்த்திரை உலகையே கலக்கு கலக்கிய படம் .இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் பிரமாதமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்வகையில் இருக்கும்.ஷாலினியின் நடிப்பும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் இருக்கும்.2 பேரும் போட்டி போட்டு நடித்திருந்தாலும் இது ஒரு இயக்குநர் படம். ஃபாசில் பின்னி பெடல் எடுத்த படம்.இளையராஜாவின் இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.க்ளைமாக்சில் இருவரின் காதலுக்கும் குடும்பம் ஓக்கே சொல்லும்போது ஒரு பின்னணி இசை வரும் பாருங்க.. சான்ஸே இல்லை..மேஸ்ட்ரோ மேஸ்ட்ரோதான்.இன்னும் கூட லவ் சப்ஜெக்ட் என்றால் இந்தப்படத்தைத்தான் ஸ்டோரி டிஸ்கஷன்போது இயக்குநர்கள் சொல்றாங்க.காவலன் பட விமர்சனங்களில் தினத்தந்தி, த ஹிந்து, ஸ்டார் டஸ்ட் போன்ற பத்திரிக்கைகள் விஜய்க்கு இன்னொரு காதலுக்கு மரியாதை என்றே குறிப்பிட்டுள்ளன.விஜய்-ஷாலினி இருவரும் புக்ஸ்டாலில் முதன்முதல் காதல் பார்வைகளை பரிமாறிக்கொள்ளும் சீன் கவிநயம்.அபிராமி தியேட்டரில் 64 நாட்கள் தேவி அபிராமி தியேட்டரில் 40 நாட்கள் மொத்தம் 104 நாட்கள் ஈரோட்டில் ஓடியது.

2. துள்ளாத மனமும் துள்ளும் -சார்லி சாப்ளின் படத்தில் வந்த கதையை ஆளாளுக்கு உல்டா பண்ணி இந்த டைமில் 12 படங்கள் வந்தன. கார்த்திக்கின் நிலவே முகம் காட்டு படம் மட்டும்தான் ஞாபகம் இருக்கு.ஈரோடு ராயலில் இந்தப்படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது ரசிகர்கள் அடித்த கமெண்ட் 3 மாசத்துக்கு வேற படம் போட மாட்டாங்க..க்ளைமாக்சில் இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை பாட்டுக்கு சிம்ரன் விஜய் இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.விஜய்க்கு டான்சில் சரிக்கு சரி சிம்ரன்தான்.படத்துல வேற எந்த செலவும் இல்லை. சிம்ப்பிளா வந்து லாட்டரி அடிச்சுது.ஈரோடு ராயலில் 103 நாட்கள் ஓடியது.

1. கில்லி- ரஜினிக்கு எப்படி பாட்ஷா முக்கியமான திருப்பு முனையோ அது மாதிரி விஜய்க்கு கில்லி முக்கியமான படம். அவர் நடித்து அதிக நாட்கள் ஓடிய படமும் இதுவே.. ( 205 நாட்கள்). கபடி வீரராக வரும் விஜய்க்கு படம் பூரா திரிஷாவைக்கூட்டிக்கொண்டு ஓடும் வேலைதான். பிரகாஷ்ராஜின் ஹாய்   செல்லம் டயலாக் செம ஃபேமஸ்..அப்படிப்போடு போடு பாட்டுக்கு விஜய் ஆடும் ஆட்டம் இளசுகளை துள்ளி ஆட வைத்தது.இந்தப்படத்தைப்பார்த்து காப்பி அடித்தே விஷால் பல படங்களில் நடித்தார்.நான் இந்தப்படத்தை பார்க்கும்போது படம் ஓக்கே நல்லாருக்கு என்றுதான் நினைத்தேன்.. ஆனால் படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்.இதற்குப்பிறகு வந்த விஜய் படங்களை கில்லியோடு ஒப்பிட்டு அதுமாதிரி இது இல்லையே என பேச ஆரம்பித்தார்கள்..இது எல்லா ஹீரோக்களுக்கும் நடப்பதுதான்,,

டிஸ்கி 1 - இந்த லிஸ்ட்டில் காவலன் ஏன் இல்லைன்னா இப்போதானே படமும் வந்தது,, படத்தோட விமர்சனமும் வந்தது..பொண்ணு பார்த்த அனுபவம் கேட்டா லேட்டஸ்ட்டா பார்த்த பொண்ணு (மனைவி)பற்றி யாரும் சிலாகிச்சுக்கறதில்லை.அது மாதிரி...

டிஸ்கி 2 - இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது நல்ல நேரம் சதீஷ், சிரிப்புபோலீஸ் ரமேஷ்,ஃபிலாசபி பிரபாகரன்.. இதுல என்ன காமெடின்னா ரமேஷ்க்கு விஜய்னா உயிரு,,(!!) சதீஷ்க்கு விஜய்னா சொந்த சம்சாரம் மாதிரி( அவங்கவங்க சம்சாரத்தை யார் இப்போ ரசிக்கறாங்க?)  பிரபாகரன் தல அஜித் ரசிகர்.. பாப்போம் என்ன நடக்குதுன்னு..