Tuesday, January 25, 2011

நாட்டு நடப்பும், நையாண்டி சிரிப்பும்

https://www.cia.gov/library/publications/the-world-factbook/graphics/flags/large/in-lgflag.gif 
1,தமிழக சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன்: குழந்தை பிறப்பு முதல், பராமரிப்பு, கல்வி, மருத்துவம், திருமண உதவி உள்ளிட்ட, வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும் தி.மு.க., அரசு உதவி வருகிறது. அடுத்த முறை, உட்கார்ந்து சாப்பிடும் வகையில், பொதுமக்களுக்கு வீடு தேடி டிபன் கேரியரில் சாப்பாடு வழங்கும் அளவுக்கு, பல திட்டங்களை கைவசம் வைத்துள்ளோம்.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - அதுதான் 70 தலைமுறைக்கும் உக்காந்து சாப்பிடற அளவு தலைவர் சேர்த்து வெச்சிருக்காரே.. அப்புறம் என்ன?

2. பெட்ரோலியத் துறை மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி: சர்வதேச கச்சா எண்ணெய் விலை, பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில், விலை உயர்வு தவிர்க்க முடியாது. எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டப்படுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - அதுவும் கரெக்ட்தான்.. மக்கள் நஷ்டப்பட்டு நாசமாப்போனா நமக்கு என்ன?

3. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: சினிமா மோகத்தால் இளைஞர்கள், தே.மு.தி.க.,வில் சேருகின்றனர்; அவர்களை, பா.ம.க.,வுக்கு இழுத்து வர வேண்டும். வரும் தேர்தலில், பா.ம.க., தனித்து போட்டியிட்டால் கூட, 30 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலை தற்போது உள்ளது.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - ஆளே இல்லாத டீக்கடைல யாருக்குண்ணே டீ ஆத்தீட்டு இருக்கீங்க?

4. பிரதமர் மன்மோகன் சிங்: அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது. இந்த விஷயத்தில் நாம் பல்வேறு ஒப்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியுள்ளது.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - பி எம் சார்.. நல்லா யோசிச்சு சொல்லுங்க..ஒப்பந்தமா? நிர்ப்பந்தமா?
http://www.positivityblog.com/_images/080509_gandhi.jpg

5. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் அறிக்கை: அணி அணியாக அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேறி, தி.மு.க.,வில் இணைகின்றனர். இந்த உண்மையை மூடி மறைக்கவே, தி.மு.க., உட்பட மாற்றுக் கட்சிகளில் இருந்து, அ.தி.மு.க.,வில் இணைகின்றனர் என்று கூறி, அ.தி.மு.க.,வில் இருப்பவர்களை மீண்டும் அதே கட்சியில் சேர்க்கும் அவலத்தை ஜெயலலிதா அரங்கேற்றுகிறார்.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - தமிழனோட தலை எழுத்தைப்பார்த்தீங்களா?இந்தப்பக்கம் போனா ஊழலின் ஊற்றுக்கண்.. அந்தப்பக்கம் போனா ஊழல் கடல்.. பாவம் அவனும் தான் என்ன செய்வான்..?


6. அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படும் நடிகர் விஜய் பேட்டி: என் சினிமாக்களில் அரசியல் உள்ளது; ஆனால், ஒரேயடியாக அதை தந்துவிட முடியாது. இப்போதுள்ள தலைமுறை தெளிவாக உள்ளனர். அரசியலை சினிமாவுடன் இணைத்துப் பார்க்கும், பேசும் மன பக்குவம் அவர்களுக்கு உள்ளதா எனத் தெரியவில்லை. அவர்கள் நினைத்தால் எல்லாம் கூடும்.
கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - தம்பி.. அப்பா பேச்சைக்கேட்டுட்டு கட்சி.. சி எம்னு கனவு கண்டுட்டு அப்புறம் உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணானு அவஸ்தைப்பட வேணாம்..வந்தமா.. நடிச்சமா?4 காசு பார்த்தமா?ன்னு இருக்கனும்..ரஜினியே உள்ளே வர யோசிக்கறாரு.. உங்களுக்கென்ன அவசரம்.?

7.இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பரதன் பேட்டி: கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்திருப்பது ஏன்? அவர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்? தங்கள் பணத்திற்கு வரி செலுத்தாமல், பதுக்கி வைத்துள்ளனர். அந்த பணத்தை மத்திய அரசு பறிமுதல் செய்ய வேண்டும்.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - ஏன்? ஏன்?னு ஏன் கேள்வி கேட்டு கொல்றீங்க? சொந்த செலவுல யாராவது சூன்யம் வெச்சுக்குவாங்களா?அந்த மேட்டர் வெளில வந்தா பாதி பேரு காங்கிரஸ் காரனா இருப்பான்.. மீதிப்பேரு கழக ஆட்களா இருப்பாங்க..

8.ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேச்சு: வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்தில், இலங்கை ராணுவத்திற்கு எந்த உதவியும் செய்யமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சோனியாவும் பங்கேற்றார். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் காரியமே, சிங்கள அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது தான். ஆறு கோடித் தமிழர்களை உள்ளடக்கிய இந்தியாவை ஆளும் காங்கிரஸ், தமிழர்களுக்கு எதிரான முடிவை எடுத்தால், அதை நாம் கண்டிக்கக் கூடாதா?

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - எந்தக்காலத்துல  எந்த அரசியல்வாதி சொன்னதை செஞ்சிருக்கான்?ஏன் நீங்க கூடத்தான் என் ஒரே தலைவன் கலைஞர்தான் அப்படின்னு வீர வசனம் பேசுனீங்க..இப்போ அம்மா பின்னால ஓடலையா?


டிஸ்கி 1 - சிறுகதைகள் பத்திரிக்கைகளில் பெரிய வரவேற்பை இப்போது பெறுவதில்லை..பிளாக் உலகில் கதைகள் ரொம்ப குறைவான அளவிலேதான் வருது.. அப்படியே வந்தாலும் சும்மா நட்புக்காக லைட்டா ரீட் பண்ணிட்டு ஓட்டும் கமெண்ட்டும் போடறதை பாக்கறேன்..அதனால கதை போடலாமா? அல்லது மின்னல் கதைகள் மாதிரி குட்டி கதைகள் ( 8 லைன்)போடலாமா? அப்படின்னுயோசிக்கறேன்..


டிஸ்கி 2 - வழக்கமா நான் போடற சினிமா பதிவை விட கவிதை,கட்டுரைகளுக்கான ஹிட்ஸ் 13 மடங்கு கம்மியா இருக்கு.இருந்தாலும் நான் கலந்து கட்டி அடிக்கக்காரணம் இவனுக்கு சினிமாவை விட்டா எதுவும் தெரியாதுன்னு சொல்றவங்க வாயை அடைக்கத்தான்..