Saturday, January 22, 2011

MY MISCALCULATIONS - சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWmEUbc9BYTUIzUA9-rCbmSz8CVz3JT-ImaAhQYtXZLEAekwjwNlI21wGtOfMcja_nhyYDFASb3VouAaRnqz5czS5a7H5iYBlJabpC951KwfCo9DTQnLtejqTBnuLVN4bNGOUk0ucHX2Y/s1600/Siruthai-Movie-Stills-16.jpg
 கருத்துக்கணிப்புகள் என்றுமே சுவராஸ்யமானவை, அவை அவ்வளவாக பலிக்காது என்ற போதும்.பொங்கல் ரிலீஸ் படங்களைப்பற்றி நான் விமர்சனம் எழுதிய போது  பல கருத்து வேறுபாடுகளும் ,விமர்சனங்களும் எழுந்தன.நான் சொன்னதும்.. இப்போ நடப்பதும் - ஒரு அலசல்

கமர்ஷியல் சக்சஸ் ஆன சிறுத்தைக்கு நான் எதிர்பார்த்த விகடன் மார்க் 44. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக விகடன் 39 வழங்கி இருக்கிறது.இது எனக்கு விழுந்த முதல் அடி.ஆனால் அவர்கள் 8 பேர் ஆசிரியர் குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பார்த்த கலவையான அனுபவம் + மார்க். ஏன் இவ்வளவு குறைவா போட்டிருக்கீங்க என அதில் பணியாற்றும் நண்பரிடம் கேட்டபோது  ரீமேக் படங்கள், வன்முறையை தூண்டும் படங்கள் இவற்றுக்கு மைனஸ் மார்க் உண்டு என்றார்.


மேலும் கார்த்தி படத்தின் பின் பாதியில்  (திருடன் போலீஸ் ஆன பிறகு) செய்யும் காமெடி சேஷ்டைகள் படத்துக்கு மைனஸ் எனவும் படத்தின் சீரியஸ்னெஸ்சை அது பாதிக்கிறது எனவும் கூறினார்.ஆனால் மக்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. படம் ஜாலியா போகுது. நல்ல எண்ட்டர்டெயினிங்க் படம் என்றே ரிசல்ட் வந்திருக்கிறது.




பத்திரிக்கைகளில் வரும் விமர்சனங்கள் பல முறை பொய்த்துப்போனதற்கு ஒரு உதாரணம் கேப்டன் பிரபாகரன் வந்த போது ராணியில் அதற்கு அளிக்கபட்ட மார்க் 37.அது மெகா ஹிட் ஆகி கேப்டனின் லைஃப் டைம் அச்சீவ்மெண்ட் படம் ஆனது. ஈரோடு கிருஷ்ணாவில் அது 143 நாட்கள் ஓடி  போட்ட முதலை விட 7 மடங்கு லாபம் ( தியேட்டர்காரர்களுக்கு) சம்பாதித்து குடுத்தது,


என்னதான் சமாதானம் சொல்லிக்கொண்டாலும் ஏ , பி , சி  என எல்லா செண்ட்டர்களிலும் பட்டையை கிளப்பும் ஒரு படத்துக்கு ஆனந்த விகடன் அளித்த மார்க் அதிர்ச்சிதான்.
http://imagehosting.nazdrovia.net/images/tapsee5.jpg



அடுத்து ஆடுகளம். இந்தப்படத்துக்கு நான் எதிர்பார்த்த விகடன் மார்க் 43. ஆனால் விகடன் அளித்த மார்க் 44. ஒரு மார்க் தான் அதிகம் என்றாலும் என் கணிப்பு  தவறுதான். அதே போல் இந்தப்படம் சிட்டியில் சுமாராத்தான் போகும் என நான் நினைத்தேன். கிராமக்கதை அதுவும் சேவல் சண்டை அதிகம் என்பதால் நகர்ப்புற மக்களை அதிகம்  கவர முடியாது என நான் நினைத்தேன்.ஆனால் விகடனின் பார்வை வேறு விதமாக இருக்கு.படம் எதார்த்தமா எடுக்கபட்டதாலும் ,நடிகர்களின் ஜீவனுள்ள நடிப்பு பிரமாதம் என்பதாலும் பொங்கல் ரேசில் இதுதான் ஃபர்ஸ்ட் என்பது போல் விமர்சனம் வந்திருக்கு.


பொதுவா விகடன்ல நல்ல படங்களுக்கு 2 பக்க விமர்சனம் போடுவாங்க. ஆனா பொங்கல் ரிலீஸ்ல எல்லா படங்களுக்குமே ஒரு பக்க விமர்சனம் தான் போட்டிருக்காங்க..ஏன்?னு தெரியல.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEcmldHYOCUV5vAwedY0gcekKirP0-wj_lb1YDjdtV2jyJB5FinTEmj6hsU46IGTtmuvMTmXux9Sc8cyIMYXFS4v3b7jcHwLkG-iUy6WTGezkXh7ICSPMA_xh6pcgHXWsjiV7zhXXYn2mI/s1600/Kavalan_9.jpgADA
அடுத்து காவலன் படம் விகடன்ல 45 மார்க் எதிர்பார்த்தேன். ஆனா 42 மார்க்தான் போட்டிருக்காங்க.விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமா இருந்திருக்கும்.
படத்துல விஜய் நடிப்பு நல்லாருக்கு என விமர்சனம் எழுதி இருந்தாலும் மொத்த படத்தோட விமர்சனம் அப்ப்டி ஒண்ணும் படம் பிரமாதம் இல்லைன்னு எழுதி இருக்காங்க.பார்வைகள் வேறுபடுது.பார்ப்போம்.ரசிகர்களின் இறுதி தீர்ப்பு எப்படி இருக்கும்?னு..


ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல காவலன் ரிலீஸ் ஆனதை விஜய் ரசிகர்கள் வருத்தமா பார்க்க தேவை இல்லை. இதே ஸ்டார் தியேட்டர்லதான் முதல் மரியாதை, கரகாட்டக்காரன் போன்ற மெகா ஹிட் படங்கள் ரிலீஸ் ஆகி முதல் 7 நாட்கள் காத்து வாங்கி அப்புறம் மக்களின் மவுத் டாக் மூலம் படம் வெற்றி அடைந்தது.


என்னைப்பொறுத்தவரை காவலன் படம் ஓடனும்னு நினைக்கிறேன். காரணம், இந்த மாதிரி வெரைட்டி சப்ஜெக்ட் படம் எடுபட்டாத்தான் தொடர்ந்து விஜய் மற்றும் முன்னணி ஹீரோக்கள் நல்ல சப்ஜெக்ட்ல நடிப்பாங்க.. இல்லைன்னா பழையபடி பஞ்ச் டயலாக்.. தாதா கதைன்னு போயிடக்கூடிய அபாயம் உண்டு.


டிஸ்கி  - திடீர்னு விஜய்க்கு ஏன் ஆதரவா எழுதறீங்க?ன்னு சிலர் கேக்கறாங்க.ஒரு மனுஷன் தோல்வில இருக்கறப்ப மேலும் மேலும் வெந்த புண்ல வேல் பாய்ச்சக்கூடாது.2 ஹிட் குடுக்கட்டும்.. மீண்டும் மசாலா படத்துல பஞ்ச் டயலாக் பேசறப்ப கிண்டல் அடிப்போம்.