Monday, January 17, 2011

எனக்கு புத்திமதி சொல்ல நீ யாரு?


http://shuhaibmh.files.wordpress.com/2010/07/socrates.jpg
இந்த உலகத்துல ரொம்ப ஈசியா கிடைக்கற விஷயம் புத்திமதிதான். இப்போவெல்லாம் யாராவது அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சா பின்னங்கால் பிடரி தெறிக்க ஓடிடறோம்.. இருந்தாலும் நான் படிச்ச சில தத்துவங்களை ,பொன்மொழிகளை உங்களோட பகிர்ந்துக்கறேன்..

1. எதையும் சிந்தித்து செய்தால் நமக்கு கிடைப்பது வெற்றி..எதையும் செய்து விட்டு சிந்தித்தால் நமக்கு கிடைப்பது அனுபவம். - அப்துல்கலாம்
--------------------------------------------------------------------
2. கனவுகளுக்கும்,லட்சியங்களுக்கும்  ஒரே வித்தியாசம்

கனவுகளுக்கு தேவை - அமைதியான தூக்கம்
லட்சியங்களுக்கு தேவை - அளவான தூக்கம். -

--------------------------------------------------------------------------

3. உனக்கு கிடைக்கும் வெற்றியில் பலரின் தோல்வி இருக்கும்.உனக்கு கிடைக்கும் தோல்வியில் யாரோ ஒருவரின் வெற்றி  இருக்கும் -

---------------------------------------------------------

4. அதிகமாக சிரிக்க வைப்பவனும்,அதிகமாக சிரித்துக்கொண்டு இருப்பவனும்தான் உலகில் மிகப்பெரிய மனிதன்.
------------------------------------------------------

5.நீ மட்டும் நடந்து சென்றால் யாரும் உன்னை திரும்பிப்பார்ப்பது இல்லை,என்னையும் உன்னுடன் அழைத்துச்செல் - தன்னம்பிக்கை

________________________----------------------------------------
http://math2033.uark.edu/wiki/images/6/65/Aristotle.jpg
6. உன் கோபம் உன்னை நேசிப்பவர்களைக்கூட வெறுக்க வைக்கும்.ஆனால் உன் அன்பு உன்னை வெறுப்பவர்களைக்கூட நேசிக்க வைக்கும்.

----------------------------------------------------------------------------

7.  நீ நேசிக்கும்  யாராவது உன்னை விட்டுவிலகினால் விட்டு விடு..
உன் நேசம் நிஜம் என்றால் மீண்டும் உன்னை தேடி வருவார்கள்

---------------------------------------------------------\\

8. அன்புதான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து..அந்த அன்பே பொய்யானால் உலகத்தில் அதை விட கொடிய நோய் எதுவும் இல்லை. அன்னை தெரேசா

----------------------------------------------------------

9. நீ அடைவதெல்லாம் கடவுள் உனக்கு தரும் பரிசு.
    நீ இழப்பதெல்லாம் கடவுளுக்கு நீ தரும் பரிசு.

---------------------------------------------------

10. நாம் வெறுக்க வேண்டியது ஒரு மனிதனின் கெட்ட குணங்களைத்தான்..
அந்த மனிதனை அல்ல.

-------------------------------------------

டிஸ்கி 1- டைட்டிலுக்கான விளக்கம்.நான் யாரைப்பார்த்தோ கூறுவதாக டைட்டிலை புரிந்து கொண்டால் அது என்னை யாரும் புரிஞ்சுக்கலைன்னு அர்த்தம். நான் போட்ட இந்த பதிவில் உள்ள  அட்வைசை பார்த்து நீங்க இப்படி சொல்வீங்களோன்னு நினைச்சுப்பார்த்த போது தோணுன டைட்டில்..ஹி ஹி

டிஸ்கி 2  - சினிமா தளங்கள் சில எனக்கு மெயிலில் தகவல் சொல்லீட்டு அவங்களாவே எனது சினிமா விமர்சனத்தை எடுத்து அவங்க தளத்துல போட்டுக்கறாங்க.நான் பதிவு போட்டு 12 மணி நேரம் கழிச்சி எடுத்துக்கங்கன்னு கேட்டுக்கறேன்.ஏன்னா எனக்கு ஹிட்ஸ் ரேட் 16 % குறையுது.மீறி  எடுத்தா என்னால ஒண்ணும் பண்ண முடியாது..ஹி ஹி ஹி.

டிஸ்கி 3 - பொங்கல் லீவ்ல நெட் பக்கம் வராதவங்களுக்காக

1.

இளைஞன் - வறட்சி ஆகி விட்ட புரட்சி - சினிமா விமர்சனம்

 

2.

காவலன் - விஜய் -ன் புதிய பரிமாணம் - சினிமா விமர்சனம்


.3 சிறுத்தை - செம ஸ்பீடு வித்தை - சினிமா விமர்சனம்

4.       ஆடுகளம் - அதகளம் - சினிமா விமர்சனம்

5.

பொங்கல் ரிலீஸ் படங்கள் - ஒரு பார்வை 

 

கோக்கு மாக்கு ஜோக்கு - BY ''A" பேக்கு 21+