Thursday, January 13, 2011

மாயவலை -சினிமா விமர்சனம் 18+

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip-TTR4hH1DcuhdBoLa2ujGDcEiJGh6CCIKamh9INqcaNXmMze0HcbHhr_k9YBiDsAQL3fgFyCKhkgB8Hpypxm5UlAVzIYfGA0V8d44IXZiXeo3KmRkeAuONMX9djF9pHxTwdoOCPcl2Y/s320/Swetha510w070709_050.jpg
பொதுவா தீபாவளி,பொங்கல டைம்ல ஒரு வாரத்துக்கு முன்னால தியேட்டர்ல புது தமிழ்ப்படம் எதுவும் ரிலீஸ் பண்ண மாட்டாங்க..அந்த கேப்ல இந்த மதிரி சீன் படத்துக்கு மவுசுதான்.டம்மிக்கட்சியான பா .ம. க எலக்‌ஷன் டைம்ல மட்டும் செல்வாக்கோட வலம் வர்ற மாதிரி இது.

இப்போ நமக்கு(!?) முன்னால இருக்கற 2 சாய்ஸ்.. மல்லிகா ஷெராவத் நடித்த மல்லிகா காமினி,கீர்த்தி சாவ்லா நடித்த மாய வலை படமும். சமுதாய சீர்திருத்தவாதிகளிடம் விசாரித்தபோது மல்லிகா காமினி படம் டைட்டில் புதுசு படம் பழசு கதை ஆச்சு.அது ஏற்கனவே ஹிந்தியில் வந்து சக்கை போடு போட்ட மர்டர் படம்தானாம்.

ஏற்கனவே கடலை போட்ட சூப்பர் ஃபிகரிடம் மீண்டும் கடலை போடுவதை விட இதுவரை கடலை போடாத மொக்கை ஃபிகரிடம் கடலை போடுவதே சாலச்சிறந்தது என்ற தமிழனின் கொள்கைப்படி கீர்த்தி சாவ்லா படத்துக்கே போலாம் என்று உறுதியான முடிவு எடுத்தேன்..

கொமராபாளையம் சரஸ்வதி தியேட்டர்... ஆஹா மங்களகரமான தியேட்டர்.சாமி படத்தை சாமி பெயர் உள்ள தியேட்டரிலேயே போட்டிருக்காங்க என மெச்சிக்கொண்டே தியேட்டருக்குள் போனேன்.

மொத்தமே ஒன்றரை மணி நேரப்படம்தான். ஆங்கிலப்படத்திலிருந்து சுடறவங்க எல்லாருமே பெரும்பாலும் ஆங்கிலப்படத்துக்கு நிகரா 8 ரீல்லயே படத்தை முடிச்சிடறாங்க..
http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/september/20.09.09/actress.jpg
படம் ஆரம்பிச்சு 24 நிமிஷம் ஹீரோயின் கீர்த்தி சாவ்லா ஸ்விம்மிங்க் பூல்-ல குளிக்கறாங்க குளிக்கறாங்க ,குளிச்சிட்டே இருக்காங்க...பாவம் ரொம்ப நாளா குளிக்கல போல. சிங்கிள் பீஸ் நீச்சல் டிரஸ்ல அவங்க குளிக்கறதை கேமராமேன் அவரால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கோணங்கள்ல க்ளோஷப்ஷாட், லாங்க் ஷாட் எல்லாம் வெச்சு எடு எடுன்னு எடுத்து தள்ளிட்டாரு.

அவருக்கு ஒரு ஃபோன் வருது..லவ்வர் போல. ஏதோ சொல்றான்.என்ன சொல்றான் அப்படிங்கறது சஸ்பென்ஸ்..( சீன் படத்துல சஸ்பென்ஸ் என்ன வேண்டிக்கிடக்கு?)படத்துல அஜால் குஜால் சீன் இருக்குமா இருக்காதாங்கற சஸ்பென்ஸையே நம்மளால தாங்க முடியல...இதுல டைரக்டர் வேற...கொல்றாரு.

ஹீரோயினிடம் ஹீரோ ஃபோன்ல பேசறப்போ ஹீரோயினின் ஃபோன் நெம்பரை எதுக்கோ சொல்றான்..வில்லன் அந்த நெம்பரை நோட் பண்ணி ஹீரோயினுக்கு ஃபோன் பண்றான்.. மேடம் ,கூரியர் ஆஃபீஸ்ல இருந்து பண்றேன்.உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு..உங்க வீட்டு லேண்ட் மார்க் சொல்லுங்க . உடனே பிளம் கேக்கு மாதிரி உடம்பும்,பேக்கு மாதிரி மூளையும் உள்ள ஹீரோயின்  (கேக்கு - பேக்கு பாருங்க வார்த்தை ஜாலத்தை - நானும் கவிஞன் தான் ) அட்ரஸை சொல்றா.
http://www.viduppu.com/photos/full/actresses/others/keerthi_chawla002.jpg
காலிங்க் பெல் அடிக்குது..வில்லன் மாஸ்க் போட்டு வெளில நிக்கறான், நம்ம ஹீரோயின் ஹீரோ தான் அவன் -னு தப்பா நினைக்கறா. என்ன தான் முகத்தை மூடி இருந்தாலும் ஆள் உயரம் ,பாடி ஷேப் தெரியாதா?என்ன கொடுமை சார் இது?வில்லன் ஹீரோயின் கூட கொஞ்சறான், குலாவறான் பாவம் அதுவரை ஹீரோயினுக்கு விபரமே தெரியல..

15 நிமிஷம் கழிச்சு வில்லன்தான் என்பதை எப்படியோ ஹீரோயின் கண்டு பிடிச்சுடறா.. உடனே ஓடறா ஓடறா ஓடிட்டே இருக்கா.. அந்த பங்களா ஃபுல்லா சுத்தி சுத்தி வர்றா.. நம்புனா நம்புங்க ,இந்த சேசிங்க் சீன் மட்டும் 40 நிமிஷம்.

அப்புறம் ஹீரோ வர்றார்.. ஃபைட் பண்றார். ஹீரோ ஜெயிக்கிறார். படம் முடிஞ்சுது. என்ன இப்படி பொசுக்குன்னு படத்தை முடிச்சுட்டாங்களே.. ஏதாவது பிட்டு போடுவாங்களா அப்படிங்கற நப்பாசைல சிலர் தியேட்டரை விட்டு கிளம்பவே இல்லை.

அப்புறம் மனசை தேத்திக்கிட்டு குனிஞ்ச தலை நிமிராம தியேட்டரை விட்டு வெளில எல்லாரும் கிளம்புனாங்க..அது ஏன் குனிஞ்ச தலை? யாராவது தெரிஞ்சவங்க பார்த்தா கேவலமா போயிடுமே...

வழக்கமா ஏதாவது வித்தியாசமா விமர்சனத்துல காண்பிக்கனும்னு நான் வசனத்தை கொஞ்சம் போடுவேன், ஞாபகம் இருக்கற வரை .அந்த மாதிரி போட வழியே இல்லை. படத்துல வசனமே மொத்தம் 7 வரிகள் தான்.

படத்துல பாரட்ட வேண்டிய அம்சம் ரெண்டே ரெண்டுதான். ஒண்ணு ஹீரோயின் கீர்த்தி சாவ்லாவின் அழகு.. ரெண்டு ஒளிப்பதிவு.. ராவணன் படத்துல ஐஸ்வர்யா ராய் குளிக்கறதை அழகா காட்டுன மாதிரி இதுல கீர்த்தி குளிக்கறதை ரசனையோட காட்டி இருக்காங்க...

படத்துல மொத்தம் 3 கேரக்டர்கள்தான். ஹீரோ, ஹீரோயின், வில்லன். ஹீரோயினுக்கு ரூ 5 லட்சம் சம்பளம் குடுத்திருப்பாங்க.ஹீரோவுக்கு நோ சம்பளம். வில்லன் கிட்டே இருந்து ரூ 2 லட்சம் வாங்கி இருப்பாங்க.. இந்த மாதிரி ஹீரோயினை ரேப் பண்ற வேலை இருந்தா வில்லன் கிட்டே காசு வாங்கிக்கறது கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் லோ பட்ஜெட் ஃபார்முலா..

சீன் இல்லாத சீன் படத்துக்கு விமர்சனம் எழுதி சமுதாயத்துக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துனதுக்காக  சிறந்த சமூக விழிப்புணர்வுக்காவலன் அப்படின்னு யாராவது பட்டம் குடுத்தா அதை கூச்சமே இல்லாம வாங்கிக்க தயாரா இருக்கேன்.  ( யாரப்பா அது கல்லை எடுக்கறது.. பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்.. வேணும்னா மைனஸ் ஓட்டு போட்டுக்குங்க.. அதை விட்டுட்டு அடிக்கற வேலை எல்லாம் வேணாம்.அப்புறம் அழுதுடுவேன்..அவ் அவ்)

டிஸ்கி 1 - சீன் படத்துக்கு விமர்சனம் எழுதி சமுதாயத்தை ஏன் கெடுக்கறே? அப்படின்னு சிலர் கேக்கறாங்க. நல்லா நோட் பண்ணிப்பாருங்க.. எழுதறது சீன் படமா இருந்தாலும் அதுல ஆபாச எழுத்து இருக்காது, சும்மா நக்கல் அடிச்சிருப்பேன் அவ்வளவுதான்.இதனால எத்தனை பேருக்கு பணம் மிச்சம் ஆகுது அதை நினைச்சுப்பாருங்க.

டிஸ்கி 2 - கடந்த 3 நாளா நல்ல கட்டுரைகளா போட்டியே .. ஏன் இப்போ இப்படி?அப்படின்னு கேக்கறவங்களுக்கு ..நான் கமல் ஃபார்முலாவை ஃபாலோ பண்றேன்.. அவர் மகாநதி மாதிரி நல்ல படம் குடுப்பாரு.. அது அவர் எதிர்பார்த்த வெற்றியை குடுக்காத பட்சத்துல கோபமா சிங்கார வேலன்,மவராசன் மாதிரி மசாலாக்குப்பை எடுத்து கோபத்தை காண்பிப்பாரு.