Friday, January 07, 2011

THE SORCERER'S APPRENTICE (மாயவளையம்)- சினிமா விமர்சனம்


உல்டா பண்ணுவதில் நாம்தான் நெம்பர் ஒன் என நம்மாளுங்க யாரும் இனி மார் தட்டிக்க முடியாது.ஹாலிவுட் ஆட்களும் அந்த வேலையை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.டிஷ்னி யின் மாயவளையம் அர்னால்டு ஸ்வார்சனேகர் நடித்த ஜட்ஜ்மெண்ட் டே(தி டெர்மினேட்டர்-2) படத்தை மாயாஜாலம்,மந்திரம் மிக்ஸ் பண்ணி சின்ன பசங்க பாக்கற அம்புலி மாமா,ஹாரிபாட்டர் டைப் படம் ஆக்கீட்டாங்க.

ஜட்ஜ்மெண்ட் டே(தி டெர்மினேட்டர்-2) படத்தில் ஹீரோ சிறுவனை காப்பாற்றுவார்.படம் பூரா வில்லன் சேஸ் பண்ணுவார்.இதில் ஒரு ஹீரோ ஒரு பையனை காப்பாற்ற,வில்லன் இன்னொரு பையனுடன் அவர்களை துரத்துகிறார்.மந்திர மோதிரம்,மில்லேனியத்தின் விடிவெள்ளி என பில்டப் வேறு.

படத்தோட ஓப்பெனிங் சீன் அருமை.நியூயார்க் நகரின் அழகை அள்ளி
கொட்டுகிறது,குறிப்பா பாலம் பிரம்மாண்டம். புதையல் வேட்டையில் வந்த (தெ நேஷனல் ட்ரெஸ்ஷர்)  நிக்கோலஸ் கேஜ்தான் ஹீரோ.ஆனால் அவர் பூந்தோட்டக்காவல்காரன் விஜயகாந்த் மாதிரி கெஸ்ட் ரோல் தான்.
17 வயது பையனாக வரும் மெய்ன் ஹீரொ நண்பர்களுடன் அளவளாவும்
ஆரம்பக்காட்சியே கலகல.”10 வருஷம் கழிச்சு அவளை பார்த்திருக்கே,அவ்ளை கரெக்ட் பண்றதை விட்டுட்டு ஆண்ட்டனாவை கரெக்ட் பண்ணிட்டு வந்து
இருக்கியே?”

படத்தின் டைரக்டருக்கு காமெடி ரொம்ப இயல்பா வருது.சீரியஸான காட்சிகளில்,ஆபத்தான காட்சிகளில் கூட போகிற போக்கில் நகைச்சுவையை
அள்ளித்தெளித்து விட்டு போகிறார் . ஒரு உதா...

மந்திர வளையத்துக்குள்ள ஒரு தடவை உள்ளே வந்துட்டா மறுபடி வெளீயே போக முடியாது.
அப்போ ஒரு தடவை சூசூ போய்ட்டு வந்துடட்டா?

வில்லனாக வருபவர் பிரதாப்போத்தன் மாதிரி வந்து அவர் பங்குக்கு லந்து பண்ணுகிறார்.மீண்டும் ஒரு உதா..

என்கிட்ட ஒரு பையன் இருக்கான்,ஆனா அவனுக்கு ஒண்ணும் தெரியாது.

அப்ப அவன் தான் இந்த வேலைக்கு கரெக்ட்டா இருப்பான்.



கேஜ் மாங்கு மாங்கு என சாப்பிடுவதைப்பார்த்து யங் ஹீரோ வியந்து நின்றதும்

“தப்பா நினைக்காதே,நான் சாப்பிட்டு 10 வருஷம் ஆச்சு”

என்றதும் தியேட்டரே கை தட்டலால் அதிர்கிறது.

ஹீரோயின் மிச்சமான ஃபிகர்.(17 1/2(பதினேழரை)வயது} ( பர்த் சர்ட்டிஃபிகேட் பார்த்த மாதிரியே சொல்றானே?)ஃபிரிட்ஜ் ஃப்ரீசரில் வைத்து எடுக்கப்பட்ட எலுமிச்சம்பழம் மாதிரி என்னா ஒரு ஃப்ரெஷ்னெஸ்,என்னா ஒரு கலர்?அவரது கூந்தல் அழகு தங்க இழைகளால் வார்த்து நெய்யப்பட்ட சுப்பையா பாவு மாதிரி அலை பாயும் அழகு..அடடா!


முக அழகில் மடோனாவாவின் மினியேச்சர்,பளிங்குக்கற்களில் ஊற்றிய பாதரசம் போல் கண்கள்,கோதுமை அல்வாவை 2 துண்டுகளாக வைத்தது போல் உத்டுகள்,ஒயிட் வாஷ் செய்யப்பட்ட சோளக்கருது முத்துக்கள் தர்ப்பூசனிப்பழத்தில் பதித்துவைத்தது போல் பற்கள்,இடை அழகில் இலியானாவின் க்ளோனிங்க்,நடை அழகில் நேருக்கு நேர் சிம்ரன்,ஷெரன் ஸ்டோனின் கட்டழகு,என இமைக்காமல் ரசிக்க வைக்கும் அழகுப்பொக்கிஷம்.
இருவருக்கும் இடையே நடக்கும் காதலா,நட்பா வசனங்கள் ரொம்ப அழகு,

என்னை உனக்கு கொஞ்சமா பிடிச்சிருக்கா,நிறையா பிடிச்சிருக்கா?

......யோசிச்சு சொல்றேன்

என்னை ரொம்பத்தெளீவா குழப்பறே!




இந்த ஜோடிகளின் அலம்பல் பத்தாதென்று கேஜின் ஜோடியாக வரும் வெரோனிக்கா வேறு இதழ் ஒத்தடம் கொடுத்து அவரையும்,நம்மையும் சூடேற்றுகிறார்.

அங்கங்கே வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் சில பிரமிப்பு,சில சும்மா உதார்.மம்மி
படத்தில் வருவது போல் பல காட்சிகள்.சேசிங் காட்சிகள் அதிகம்.கார் மாடல் மாறுவது,வில்லன் கடைசி வரை ஹீரோவை டாமினேட் செய்வது ,என பல காட்சிகள் சிறுவர்களை கவருவது உறுதி.

காதில் பூ சுற்றும் காட்சிகளும்,லாஜிக்கே இல்லாத காட்சிகளும்
அதிகம்.ஆனால் ரசிக்க வைக்கும் அளவில்தான் அமைத்திருக்கிறார் டைரக்டர்.ஆங்கில பதிப்பில் பார்த்தால் பல வசனங்கள் புரியாமல் போக வாய்ப்புண்டு.

க்ளைமாக்ஸில் பேயாக மாறும் வெரோனிக்காவைப்பார்த்து யாரும் பயம் கொள்ளவே இல்லை.ஏனெனில் அவர் அப்போதுதான் லோ கட்டில்,லோ ஹிப்பில் கிளாமராக தெரிகிறார்.

15 வயசு முதல் 18 வயசு வரை உள்ள டீன் ஏஜ் பசங்களும்,அம்புலி மாமா,பாலமித்ரா காமிக்ஸ் ரசிகர்களூம்,ஹாரிப்பாட்டர் ரசிகர்களும் பார்க்ககலாம்.

டிஸ்கி 1 - தமிழன் தமிழ்ப்படம்தான் பாக்கனும்,தமிழ்ப்படத்துக்குதான் விமர்சனம் பண்ணனும்னு யாரும் சொல்லிடாதீங்க..ஃபாரீன்ல ஸ்விஸ் பேங்க்ல தமிழன் (அரசியல்வாதிங்க)அக்கவுண்ட் வெக்கறது இல்லையா?

டிஸ்கி 2 - ரெண்டு நாளுக்கு முன்னால ஒரு காமெடி நட்ந்துச்சு,நான் என் பதிவை இண்ட்லில இணைச்சுட்டு வர்றேன்,அதுக்குள்ள யாரோ தமிழ்மணத்துல இணைச்சு மைனஸ் ஓட்டு போட்டுட்டு போய்ட்டாங்க..என்ன அவசரம்?  நண்பேண்டா....

டிஸ்கி 3 - சின்ன பசங்க பாக்கற படம்னு சொல்லிட்டு ஸ்டில் ஏடாகூடமா இருக்கேன்னு பாக்க வேணாம்,(அதான் பாத்துட்டீங்களே?). இது படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்டில்,எதேச்சையா கிடைச்சுது,எஞ்ஜாய்