1. கமல் - எனக்கு பொண்ணுங்களே பிடிக்காது..அப்புறம் முத்தம் தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.
2. ரஜினி - எனக்கு வயசு 20. என் அடுத்த படத்துல அனாகா என்கிற அம்லாபால் தங்கச்சிதான் ஜோடி.அரசியலுக்கு வருவேனா? வரமாட்டேனா ?அப்படிங்கறதை 2011 முடிஞ்சாக்கூட சொல்ல மாட்டேன்.
3. கே பாக்யராஜ் - எனக்கு டான்ஸ் நல்லா வரும்.சித்து பிளஸ் டூ படம் பட்டி தொட்டி எல்லாம் நல்லா ஓடுது.
4.தனுஷ் - தமிழகத்தின் அர்னால்டு நான்தான். பொங்கலுக்கு வர்ற ஆடுகளம் ஆக்ஷன்ல மைல்கல் படம்னு பேர்வாங்கும்.
5.ராஜ்கிரண் - எனக்கு ஜீன்ஸ் பேண்ட் ரொம்ப மேச்சிங்க் டிரஸ்.ராஜ் டிவி என்னுதுதான்னும்,கிரண் எனக்குப்பிடிச்ச நடிகைன்னும் சிலர் சொல்றாங்க அது உண்மை இல்ல.
6. சிம்பு - நான் என் லைஃப்ல ஒரே ஒரு பெண்ணை மட்டும்தான் லவ் பண்ணுவேன்.
7. விஜய்காந்த் - விருதகிரி எம் ஜி ஆர் நடிச்சு டைரக்ட் பண்ணுன உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி கலக்கிட்டு இருக்கு.அதனாலதான் விருதகிரி 10வது நாள் போஸ்டர்ல உலகம் சுற்றும் வாலிபன் பட ஸ்டில்ல்லை போட்டிருக்கேன்.
8. அஜித் - மங்காத்தா படம் ஒரு ஆத்தா செண்ட்டிமெண்ட் படம்.
9. பிரபுதேவா - என் அடுத்த படம் டைட்டில் ஒருவனுக்கு ஒருத்தி.
10. விஜய் - எங்கம்மா சத்தியமா நானும் ஒரு ஹீரோ,நம்புங்க
டிஸ்கி 1- காலைல 7 மணிக்குத்தானே ஒரு பதிவு போட்டே ,அதுக்குள்ள என்ன மறுபடி ஒரு பதிவு?ன்னு கேக்கறீங்களா? அது அட்டர் ஃபிளாப் ஆகிடுச்சு.அதான்.( புது வருசம் ஓப்பனிங்கே சரி இல்லையே).
டிஸ்கி 2 - ஹீரோக்கள் பற்றிய பதிவுக்கு ஹீரோயின் நயன்தாரா ஸ்டில் எதுக்கு? காரணம் 1 - ஹீரோக்கு ஜோடி வேணாமா? காரணம் 2 - பிரபுதேவா ஸ்டில் போட்டு உங்களை கடுப்பேற்றவிரும்பவில்லை.அதுக்கு சப்ஸ்டிடியூட்டா...நயன்