1.டைரக்டர் சார்,உங்க படத்துக்கு மாட்டை விரட்டற மாதிரி “ஹை ஹை “னு டைட்டில் வெச்சு இருக்கீங்களே,ஏன்?
”நல்லா ஓடட்டும்னுதான்”
2. இன்ஸ்பெக்டர் - சட்டம் தன் கடமையை செஞ்சே தீரும்.
கைதி - ரொம்ப நன்றி சார்,இந்தாங்க ரூ 1000 லஞ்சம்,என்னை விட்டுடுங்க.
3.இது ஒரு லோ பட்ஜெட் படம்னு எப்படி சொல்றே?
டெயிலி ஏதாவது ஒரு கோயில்ல ஷூட்டிங்கை வெச்சு லஞ்ச்சை அன்னதான சாப்பாடு சாப்பிட வெச்சு சாப்பாட்டு செலவை மிச்சம் பண்ணறாங்களே....
4. ஜட்ஜ் - ரூ 1000 பிக்பாக்கெட் அடிச்ச உனக்கு 6 மாத சிறை தண்டனை.
கைதி - ஆமா,கோடிக்கணக்குல ஊழல் பண்ணுனவங்களை எல்லாம் விட்டுடுங்க,பிசாத்து 1000 அடிச்சவன்,நோ எண்ட்ரில போறவன்னு இளிச்சவாயனாப்பார்த்து தண்டனை குடுங்க.
5. அந்த ஹீரோ ரொம்ப சிம்ப்பிள்,யூனிட்ல மத்தவங்க சாப்பிடற சாப்பாட்டைத்தான் அவரும் சாப்பிடறாராம்.
அடடா,அது எச்சில் ஆச்சே,வேற கொண்டு வரச்சொல்லி சாப்பிட வேண்டியதுதானே....
6. மாப்பிள்ளைக்கு சொந்தமா நாலஞ்சு மெயில் இருக்குன்னீங்க ,ஒரு ரயிலைக்கூட கண்ணுல காட்டலையே?
அடடா... ஓடற மெயில்னு நினைச்சுட்டீங்களா?மெயில் ஐ டி MAIL I D) இருக்குன்னு சொன்னோம்.
7. டியர், நீ இல்லாம என்னால ஒரு நொடி கூட இருக்க முடியாது....
4 நாள் வெயிட் பண்ணுங்க..என் கணவர் ஃபாரீன் போனதும் ஃபோன் பண்றேன்.
8. தலைவர் வீட்டுக்கு போனேன்,பொங்கல் குடுத்தாரு...
ஆச்சரியமா இருக்கே,, அவரு வழக்கமா எல்லாருக்கும் அல்வா தானே தருவாரு..?
9. குடுகுடுப்பைக்காரன் - நல்லகாலம் பிறக்குது ,நல்லகாலம் பிறக்குது,,
யோவ் ,தெளிவா சொல்லுய்யா...நாட்டுக்கா? தலைவருக்கா?
10. நிருபர் - மேடம்,திடீர்னு ஏன் சின்ன திரைக்கு நடிக்க வ்ந்துட்டீங்க?
நடிகை - பெரிய திரைல துரத்தி விட்டுட்டாங்க...ஆனா இதை ஆஃப் த ரெக்கார்டா வெச்சுக்குங்க. ( OFF THE RECORD) . பேட்டில எல்லா வீடுகள்லயும் ரீச் ஆக அப்படின்னு போட்டுக்குங்க....