Tuesday, December 28, 2010

காந்திபுரம் - சினிமா விமர்சனம்

அர்ஜூன் - கவுண்டமணி அண்ணே ,வாங்க நல்லாருக்கீங்களா?ரொம்ப நாள் ஆச்சு,உங்களைப்பார்த்து..?

கவுண்டமணி - வல்லக்கோட்டை விமர்சனத்துல வலிக்க வலிக்க வாங்குனது மறந்துடுச்சா?

அர்ஜூன் - அண்ணனுக்கு எப்பவும் தமாஷ்தான்.

கவுண்டமணி -படுவா,பிச்சுப்புடுவேன் பிச்சு... எது தமாஷூ?சீரியசா பேசிட்டு இருக்கறப்ப காமெடி பண்ணிட்டு...அது இருக்கட்டும் ரஜினி நடிச்ச பாட்ஷா படத்தையும்,விஜய் நடிச்ச கில்லி படத்தையும் மிக்ஸ் பண்ணனும்னு ஐடியா குடுத்த மகராசன் யாரு?

அர்ஜூன் - வேற யாரு. நம்ம டைரக்டர்தான்.

கவுண்டமணி -அடங்கொக்கா மக்கா.அந்தாளு வேலையா இது?ஆனா எனக்கு ஒரே ஒரு விஷயம் இந்தப்படத்துல பிடிச்சிருந்தது...

அர்ஜூன் - என்னண்ணே,என் நடிப்பா?

கவுண்டமணி -நாசமாப்போச்சு... இந்தப்படத்துல நீ ஹீரோ இல்ல, கெஸ்ட்  ரோல்தான்.ஆனா போஸ்டர்ல நீதான் ஹீரோங்கற மாதிரி ஒரு பில்டப் எதுக்கு?

அர்ஜூன் - எல்லாம் மார்க்கெட்டிங்க் டெக்னிக்தான் அண்ணே.
rrkk-review.jpg (494×233)
கவுண்டமணி -இது தமிழ்ப்படம் கிடையாது,தெலுங்கு டப்பிங்க் படம்.அதுவும் ஜூனியர் என் டி ஆர் ஹீரோவா நடிச்ச படம்.எதுக்கு இப்படி ரசிகர்களை ஏமாத்தனும்...?

அர்ஜூன் - சரி,விடுங்கண்ணே... படத்தோட கதையை பத்தி கொஞ்சம் சொல்லுங்க.

கவுண்டமணி -ஆமா ,இவரு பெரிய இதிகாசம் படைச்சுட்டாரு..அப்படியே நீட்டி முழக்க... அந்த கருமத்தை என் வாயால சொல்லனுமா? நீயே சொல்லித்தொலை...

அர்ஜூன் - மும்பைல தாதாவை தட்டிக்கேட்கும் நான் ஒரு கட்டத்துல தாதா ஆகிடறேன்.அங்கே நடந்த ஆக்சிடெண்ட்ல நான் செத்துப்போன மாதிரி சீன் கிரியேட் பண்ணி தமிழ்நாடு வந்துடறேன்,இங்கே எனக்கு 2 தங்கச்சிங்க,2 பேரும் லவ் பண்றாங்க. ( 2 தனி தனி ஆளுங்களைத்தான் )அக்கா தங்கை 2 பேரும் அண்ணன் தம்பியை முறையே லவ் பண்றாங்க..அதாவது ஒரே குடும்பத்துல சம்பந்தம் வைச்சுக்கறாங்க.அவங்க எப்படி ஒண்ணு சேர்றாங்க அப்படிங்கறதுதான் கதை... ஹலோ  ஹலோ என்னண்ணே அதுக்குள்ள தூங்கிட்டீங்க..?

கவுண்டமணி -இந்த மாதிரி அரதப்பழசான கதையை சொன்னா ஆடியன்ஸ் தூங்காம என்னப்பா பண்ணுவாங்க.? .நீ பேசாம வேலண்ட்ரி ரிட்டயர்மெண்ட் வாங்கிட்டு ஓடிப்போயிடு,

அர்ஜூன் - அதை விடுங்க என்னோட அறிமுகக்காட்சி எப்படிண்ணே இருந்துச்சு?

கவுண்டமணி -வழக்கம்போல ரொம்ப கேவலமா இருந்தது..ஜீப்ல உக்காந்துட்டு இருக்கற நீ அப்படியே ராக்கெட் மாதிரி மேலே எம்பி அந்தரத்துல பறக்கறே...புவி ஈர்ப்பு விசைங்கறது ஒண்ணு இருக்கு, மறந்துட வேணாம்.

அர்ஜூன் - என்னோட பாடி லேங்குவேஜ் பற்றி கொஞ்சம் சொல்லுங்க..


கவுண்டமணி -குளத்துல இருந்து எந்திரிச்சு வர்ற சீன்ல எதுக்கு நெஞ்சை நிமித்திட்டு வர்றே...சாதாரணமா நீ நடக்கவே மாட்டியா?மனசுக்குள்ள பெரிய அர்னால்டுன்னு நினப்பா?

Rama-Rama-Krishna-Krishna-Movie-Poster-Designs-10.jpg (433×650)
சி பி - அண்ணே ,வணக்கம்ணே....

கவுண்டமணி -வந்துட்டாண்டா வீங்குன வாயன்,டேய் பரட்டைத்தலையா?நீ ஹாஸ்பிடல்ல பொறந்தியா?சினிமா தியேட்டர்ல பொறந்தியா..ஒரு படத்தை விட மாட்டே போல..இந்த குப்பைப்படத்துக்கு விமர்சனம் போடலைன்னு யார் அழுதா..?

சி பி - சொந்தமா சரக்கு இருந்தா நான் ஏண்ணே இப்படி கண்ட கண்ட படத்துக்கு எல்லாம் விமர்சனம் போடறேன்?வந்தது வந்தேன்,என் ஜோலிய முடிச்சுட்டு போயிடறேன் அண்ணே...

கவுண்டமணி -அதான் ஏற்கனவே ஜோலியை முடிச்சுட்டியே ,அப்புறம் என்ன.?

சி பி - அதில்லைண்ணே... இந்தப்படத்துல வர்ற வசனங்கள் பற்றி....

கவுண்டமணி - அதெல்லாம் வசனம் இல்ல.. விசனம்....

1. கட்டிப்பிடிக்காதடி ... என் கற்பு போயிடும்.

என்னைக்கு இருந்தாலும் போகக்கூடிய கற்புதானே...( ஆஹா பொண்ணுங்கன்னா இப்படித்தான் முற்போக்குவாதியா இருக்கனும்,)

2.ஏதாவது நடந்துடுமோன்னு ஆசையை அடக்கிட்டு வாழறது ஒரு வாழ்க்கையா? ( புதிய தத்துவம் 19,879)

3. அல்வா அலமேலு..இப்போ பால் (BALL) போடறேன்.. உன் விக்கெட் விழப்போகுது. ( டபுள் மீனிங்காம்,சகிக்கலை)

4. பெரியவங்களோட பார்வைல லவ்ங்கறது ஆகாசத்துல பறக்கற ஏரோப்ளேன் மாதிரி..சின்னதாத்தான் தெரியும்..லேண்டிங் ஆகறப்பதான் அதன் மகத்துவம் தெரியும். ( கிழிஞ்சுது கிருஷ்ணகிரி)

5. நீ வைகைல முக்கறவன்னா நான் மும்பைல முக்கறவன் ( வில்லனுக்கும் பஞ்ச் டயலாக்கா..?)

6. ஆண்டவனை எல்லாரும் கோயில்ல வைப்பாங்க,நான் ஜெயில்ல வெச்சிருக்கேன்... ( செண்ட்டிமெண்ட் செம்மலு..)

7. நீங்க அவங்களைப்போய் வரவேற்கலைன்னா உங்க பிரெஸ்டீஜ் போயிடும்,வரவேற்றா உங்க மரியாதை போயிடும்.நல்லா மாட்டிக்கிட்டீங்க.. ( ஆமா டிக்கட் கவுண்ட்டர்லயே தெரிஞ்சுடுச்சு)

பிரெஸ்டீஜ்னா என்ன? மரியாதைன்னா என்ன? # டவுட்டு

கவுண்டமணி - அப்பாடா முடிச்சுட்டாண்டா///,,, அப்படியே திரும்பி பார்க்காம ஓடிப்போயிடு நாயே...

அர்ஜூன் - அண்ணே, படத்துல நீங்க ரசிச்ச அம்சம் ஏதாவது சொல்லுங்க...

கவுண்டமணி -நீ கோயில்ல இருந்து வெளில வர்றப்ப ஷூ காலோட வர்றியே,,, அது ஏன்?ஏற்கனவே குஷ்பூ செருப்பு போட்டு மாட்டுனது பத்தாதா?

அர்ஜூன் - அடடா சாரிண்ணே... அது டைரக்டர் ஃபால்ட்.

கவுண்டமணி -உன்னை கமிட் பண்ணுனது கூட அந்த ஆளோட ஃபால்ட்தான்.

அர்ஜூன் - என்னோட வசனம் பேசற ஸ்டைல்ல ஒரு மாற்றம் கொண்டு வந்திருக்கேன்,பாத்தீங்களா?

கவுண்டமணி -ஆமா.. இவரு பெரிய புரொனொன்சேஷன் புரொஃபசரு,, ((PRONOUNSATION PROFESSOR)அப்படியே வசனத்தை வடிகட்டறாரு.. “ பிரியா கூட மருதமலைக்கு போயிட்டு வான்னு சிங்கிள் லைன்ல சொல்ல வேண்டிய டயலாக்கை எதுக்கு இழுத்து இழுத்து 20 நிமிஷம் சொல்றே..? மனசுக்குள்ள பெரிய கமல்ஹாசன்னு  நினைப்பா?

அர்ஜூன் - இந்தப்படம் எத்தனை நாள் ஓடும்?

கவுண்டமணி -எத்தனை காட்சிகள் ஓடும்னு கேளு ,10 ஷோ ஓட்டிடுவாங்கன்னு நினைக்கறேன்.

அர்ஜூன் - ஏ செண்ட்டர்ல சொல்றீங்களா?

கவுண்டமணி -ஓ அந்த ஆசை வேற இருக்கா? சி செண்ட்டர்ல மட்டும்தான் ரிலீசே ஆகி இருக்கு.

அர்ஜூன் - ஆனந்த விகடன் விமர்சனத்துல எவ்வளவு மார்க் போடுவாங்க?

கவுண்டமணி -உனக்கு பேராசை ஜாஸ்தி.. அவங்க எப்போ டப்பிங்க் படத்துக்கு எல்லாம் விமர்சனம் போட்டிருக்காங்க?இண்ட்டர்நெட்லயே யாரும் கண்டுக்கமாட்டாங்க..நீ வேணா பாரு. இந்தப்பட விமர்சனத்தை அட்ரா சக்க மாதிரி ஒரே ஒரு மொக்கை பிளாக்ல மட்டும்தான் போடுவாங்க.