1.இளைய தளபதி விஜய்யோட காவலன் ரிலீஸ் ஆகறப்ப மக்கள் நாயகன் ராமராஜன் நடிச்ச மேதை படமும் ரிலீஸ் ஆகுதாமே? ஏன்?
சனி பொணம் தனியா போகாதும்பாங்களே...அதான்
2. காவலன் செம காமெடி படமாத்தான் இருக்கும்னு எப்படி சொல்றே?
விஜய் சும்மா வந்து நின்னாலே காமெடியாத்தான் இருக்கும்,இதுல 4 கெட்டப்ல
வேற வர்றாராம்.
3. படத்துல விஜய்க்கு 2 ஜோடியாமே?
20 ஜோடி போட்டாலும் படம் 20 நாள்தான் ஓடப்போவுது.
4. நடிகர் சிவகுமார் விஜய் மேல கேஸ் போடப்போறாராமே?
அவர் நடிச்ச பழைய படமான வாட்ச்மேன் வடிவேலு டைட்டிலை அவரோட
அனுமதி இல்லாம சுட்டு உல்டா பண்ணீட்டாங்களாம்.
5. மிஸ்டர் விஜய்,உங்க எல்லா படத்துலயும் காமெடி இருக்கற மாதிரி
பார்த்துக்குறீங்க?ஏன்?
காமெடிபீஸ் இருக்கு,காமெடி இல்லைன்னா எப்படி?
6. உங்க படத்தை ஏன் டிசம்பர் மாசம் ரிலீஸ் பண்றீங்க?
இப்போதான் குளிர்,மழை எல்லாம் இருக்கு,கொசு ஜாஸ்தி இருக்கும் , தியேட்டர்ல ஆடியன்ஸ் கொசு அடிக்கறப்ப படத்தைப்பார்த்துத்தான் கை தட்டறாங்கன்னு பில்டப் குடுக்கலாம்.
7. இனிமே பைலட்னுதான் உங்களை கூப்பிடனுமா?ஏன்?
ஏற்கனவே கேப்டன்னு ஒரு டெரர் பீஸ் இருக்கே?
8.ஒண்ணா படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணி இருக்கனும்,அல்லது
பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணனும்,இப்படி ரெண்டுங்கெட்டானா டிசம்பர்ல
ரிலீஸ் பண்றீங்களே ,ஏன்?
உங்க கேள்விலயே பதிலும் இருக்கு.
9.ஹிந்தி டிக்ஷன்ரியை எடுத்து பாருங்க,விஜய்னா வெற்றின்னு அர்த்தம்.
தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி டிக்ஷனரியை எடுத்துப்பாருங்க,விஜய்னா ஃபிளாப்னு அர்த்தம்.
10.இதுவரைக்கும் ஏதாவது சரித்திரப்படத்துல நடிச்சிருக்கீங்களா?
இல்லை.
சாண்டில்யன்,கல்கி நாவல் ஏதாவது படிச்சிருக்கீங்களா?
இல்லை.
ஸ்டாலின் கட்சியா?
இல்லை.
ஜே கே ரித்தீஷ்க்கு உறவா?
இல்லை.
அப்புறம் என்ன இதுக்கோசரம் இளைய தளபதின்னு பட்டப்பேரு வெச்சுக்கிட்டீங்க?