1. “வண்டில பெட்ரோல் தீர்ந்துடுச்சு, ஒரு அடி கூட முன்னே போகாது. கீழே இறங்கு சார்!”
விஜய் - “முன்னேதானே போகாது! ரிவர்ஸ் எடுத்து மறுபடி என் வீட்டுக்கே கொண்டுவிடு!”
2. “அவர் இங்கிலீஷ் வெறி டாக்டர்னு எப்படி சொல்றே?”
“அப்பன்டிசைட்ஸ் ஆபரேஷன் செய்யப்படும்னு போர்டு வைக்கிறதுக்கு பதிலா ‘டாடி’ டிசைட்ஸ் ஆபரேஷன் செய்யப்படும்னு போர்டு வெச்சிருக்காரே!”
3. “தளபதியாரே! இன்னும் பத்து நாளைக்கு நீங்கள்தான் ஆக்டிங் மன்னர்!”
“ஏன் மன்னா?”
“போர் வந்துவிட்டதே!”
4. “டாக்டர்... ஆபரேஷன் முடிஞ்சுதா? பேஷண்டைக் கூட்டிட்டுப் போலாமான்னு கேட்டுறாங்க!”
“எடுத்துட்டுப் போலாம்னு சொல்லு!”
5. “பதவியைத் தியாகம் செய்யத் தயாரானு தலைவர்கிட்ட கேட்டது தப்பாப்போச்சு!”
“ஏன்?”
“பதவியைக் காப்பாத்திக்க யாகம் செஞ்சுதான் பழக்கம், தியாகம் செஞ்சு பழக்கம் இல்லைனுட்டார்!”
6. “தலைவரே! அடிக்கடி நடைப் பயணம் போகாதீங்கன்னு சொன்னேனே, கேட்டீங்களா?”
“என்ன ஆச்சு?”
“நிறைய பேர் கட்சியைவிட்டு நடையைக் கட்டிட்டு இருக்காங்களே?”
7. “மன்னாதி மன்னா! போருக்குப் போகவில்லையா?”
“இல்லை! போனால் ஆகிவிடுவேன் மண்ணோடு மண்ணா!”
8. “அடிக்கடி தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக் குளிப்பீங்களா?”
“பிரமாதம் ஜோசியரே! எப்படி கண்டுபிடிச்சீங்க?”
“ஆயுள் ரேகையைவிட ஆயில் ரேகைதான் அதிகமா இருக்கு!”
9 “போர்க்களத்தில் இன்னும் போரே துவங்கவில்லை. அதற்குள் மன்னர் வெற்றிச் சின்னம் காண்பிக்கறாரே?”
“அட, எதிரிப் படையின் எண்ணிக்கையைக் கண்டு கதிகலங்கி வயிறு கலங்கி விட்டதாம். நம்பர் டூ போக பர்மிஷன் கேட்கிறார்!”
10. “எந்த ஆவணமும் இல்லாம உங்க கட்சி ஆளுங்க உள்ளாட்சித் தேர்தல்ல ஓட்டு போட்டாங்களாமே?”
“நாம தான் ஜெயிப்போம்கற எந்த ஆணவமும் இல்லாம ஓட்டுப் போடுங்கன்னுதானே சொன்னேன்!”
11. “அமைச்சரே! கடைசி வரை போராடணும்னு நீங்கதானே சொன்னீங்க!”
“அதுக்காக போரில் ‘ஆடி’க் கொண்டு இருப்பதா?!”
12 “ம்ன்னர் ஏன் அமைச்சரை டிஸ்மிஸ் செய்துவிட்டார்?”
“ ‘ம்ன்னர்கள் ஒன்றும் வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல! போர்க்களத்திலிருந்து தப்பிக் குதித்தோடி வந்தவர்கள்தான்’னு சொல்லிட்டாராம்!”