Sunday, November 21, 2010

நகரம் - டப்பா படத்தை விமர்சனம் பண்ணுனா தப்பா?

 
கவுண்டமணி - வாப்பா சுந்தர் சி, சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கிட்டே போல?

சுந்தர் சி - ஏண்ணே ,படம் சரி இல்லையா?என் சொந்தப்படம்னே...

கவுண்டமணி - நாங்க எல்லாம் பார்த்து நொந்த படம்னு சொல்லு..

சுந்தர் சி - படத்துல பாட்டு,ஃபைட்டு,காமெடி,லவ்,ஆக்‌ஷன் அப்படினு எல்லா ஐட்டமும் இருக்கேண்ணே?

கவுண்டமணி - எந்தத்தமிழ்ப்படத்துல இதெல்லாம் இல்லாம இருக்கு.எல்லாருமே இதே மிக்சிங்க் தான் பண்றாங்க.அதெல்லாம் இருக்கட்டும்.நீ ஏன் தலை சீவறதே இல்லை?புறாக்கூட்டுத்த்லையன் மாதிரி சுத்திட்டு இருக்கே?எந்த கேரக்டர் குடுத்தாலும் தாடியோட சுத்தறே?

சுந்தர் சி - அண்ணே,அதெல்லாம் ஒரு ஸ்டைலுண்ணே...

கவுண்டமணி - ஸ்டைலா...மரியாதை கெட்டுப்போயிடும் பார்த்துக்கோ..அது இருக்கட்டும்,டூயட் சீன் எடுக்கறப்போ பக்கத்துலயே குஷ்பூ பொண்ணும் இருந்துச்சாக்கும்?



சுந்தர் சி - எப்படிண்ணே கரெக்ட்டா சொன்னீங்க?

கவுண்டமணி - பின்னே, டூயட் சீன்ல கூட மூஞ்சியை உம்முன்னே வெச்சுக்கிட்டிருந்தியே...ரவுடி கேரக்டர்னா எப்பவும் உர்ருன்னே வெச்சிருக்கனும்னு உனக்கு எவன் சொல்லிக்குடுத்தான்?

சுந்தர் சி - அண்ணே,படத்தோட கதையைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கண்ணே...


கவுண்டமணி - நாஸ்தி

சுந்தர் சி - என்னண்ணே இப்படி சொல்லுறீங்க?

கவுண்டமணி - நீதானே ஒரு வார்த்தை சொல்லச்சொன்னே...

அட

சுந்தர் சி - திருந்தி வாழனும்னு நினைக்கற ஒரு ரவுடியை போலீஸ் விடறதில்லை ,ஏமாத்தி மறுபடி அதே வேலையை செய்ய வைக்குது,அதுல ஆதாயமும் அடையுது..ஹீரோயினோட அம்மாவை வெச்சுக்கிட்டிருந்த வில்லன் இப்போ ஹீரோயினையும் வெச்சுக்கனும்னு நினைக்கறான்..ஹீரோயின் அம்மாவுக்கு ஆப்பரேஷன்..பணம் வேணும்...ஹீரோயின் கிட்டே காசில்லை... இங்கே தான் வில்லன் கொக்கி போடறான்.ஹீரோயின் ஓக்கே சொன்னா பணம் கட்டப்படும்.ஹீரோ வர்றாரு...




கவுண்டமணி - போதும் நிறுத்து...இந்த  மாதிரி 487 கதை வந்துடுச்சு.தமிழை விடு ,எத்தனை மலையாளப்படத்துல இந்த மாதிரி கேவலமான ட்விஸ்ட் வந்திருக்கும்?


சுந்தர் சி - சரிண்ணே,வடிவேலு காமெடி படத்துல ஹை லைட் ஆச்சே,செம காமெடியா இருக்கே அதை பத்தி சொல்லுங்க...


சி.பி. - அண்ணே ஒரு நிமிஷம்...


கவுண்டமணி - டேய், யார்டா நீ .,2 பெரிய மனுஷங்க பேசறப்ப குறுக்கே பேசறது?முதல்ல உன் கூலிங்க் கிளாசை கழட்டு,மனசுக்குள்ள பெரிய அஜித்குமார்னு நினைப்பா..?


சி.பி. - அதைக்கழட்டுனா இன்னும் கேவலமா இருக்கும்னே ,பரவால்லியா?


கவுண்டமணி - ஓ இது வேறயா?சரி,இருந்துட்டு போகட்டும் வந்த மேட்டரை சொல்லிட்டு ஓடிப்போயிடு

சி.பி. - அண்ணே,படத்துல ரசிக்கற மாதிரி காமெடி டயலாக்ஸ் நிறைய இருக்கு,எனக்கு ஞாபகம் இருக்கறவரை சொல்றேன்..

கவுண்டமணி - ஆமா ,இவரு பெரிய வல்லாரை  லேகியம் வரதராஜன் அப்படியே நினைவாற்றலை கசக்கிப்பிழிஞ்சு வசனத்தை ஒப்பிக்குது நாயி,எட்டாங்கிளாஸ்ல எட்டு தடவ ஃபெயில் ஆகிட்டு பேச்சைப்பாரு,இந்த அக்கறையை படிக்கறப்ப காட்டி இருந்தா 10ங்கிளாஸ் முடிச்சிருப்பே இல்ல?சரி சரி சொல்லித்தொலை..
 
படத்தின் ஹைலைட்ஸ் காமெடி வசனங்கள்


1.தைரியம் இருந்தா என் ஏரியாவுக்கு வந்து பாரு.


உன் ஏரியா எதுன்னு சொல்லீட்டு போ.


ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படியா வம்பு வளர்க்கறது?


2. மணி என்ன இப்போ?    ஏன் உனக்கு மணீ பார்க்கத்தெரியாதா?


இப்போ மணி 3 ,லஞ்ச் டைம்,நாங்க அன்னத்துல கை வைக்கற டைம், யார் கன்னத்துலயும்  கை வைக்க மாட்டோம்


3.  எனக்கு முக்கிய வேலை இருக்குன்னு தெரிஞ்சு வம்புக்கு இழுக்கறியே?


சரி ,வேலையை முடி ,நான் வெயிட் பண்றேன்..


4. மாமியிடம் வடிவேல் - இரு இரு உன்னை வெச்சுக்கறேன்...


மாமி -ஏற்கனவே 2 பேரை வெச்சுத்தான் இருக்கேன்.


5. நாங்க எல்லாம் ஜெயில்ல இருந்து வி ஆர் எஸ் வாங்கிட்டு வந்தவங்க தெரியுமில்ல?


ஆமா,பெரிய ஜெயிலர் இவரு..கைதிக்கு லொள்ளப்பாரு.

6. இந்தாங்க புளீயோதரை சாப்பாடு.

என்னது? ஒரு புலிக்கே புளீயோதரை சாப்பாடா?

7.லவ்வுக்காக கண்ட கண்ட நாய் வாய்ல எல்லாம் வாய் வைக்க வேண்டியதா இருக்கு.

ஆமா,நாய் காட்டிக்குடுக்கலைன்னாலும் என் வாய் காட்டிக்குடுத்துடும் போல?

8. அங்கே என்ன பண்றே?ஆண்ட்டியை கரெக்ட் பண்ணச்சொன்னா டி வி ஆன்ட்டனாவை கரெக்ட் பண்ணீட்டு இருக்கே.?


9.நான் எல்லாம் அழ ஆரம்பிச்சா மாசக்கணக்குல அழ ஆரம்பிப்போம்,அத்தனை அழுகையை மனசுக்குள்ள அடக்கி வெச்சிருக்கோம்.


10. என் கிட்டே யாரும் சீரியஸா பேசாதீங்க,எனக்கு சிரிப்பு வந்துடும்.


11.என் ஃபேஸ்கட்டைப்பார்த்து யாரும் சிரிச்சு என்னை நோஸ்கட் பண்ணீடாதீங்க.


12.  ஏதோ அக்ரஹாரத்துல மாட்டுனதால வெறும் அடியோட விட்டாங்க..வேற எங்காவது சிக்கி இருந்தா குஸ்கா போட்டிருப்பாங்க.


13. இந்த ஒத்தை தம்பியை காப்பாத்த இந்த ஏரியாவுல இருக்கற மொத்தத்தம்பிகளும் வரனும் போல இருக்கே?


14. வீட்டுக்கு வாடகை தான் தர்றது இல்லை.ஹவுஸ் ஓனர் பொண்ணுக்கு....


யோவ்....


பர்த்டே ஃபங்க்‌ஷன்,வந்து கொட்டீட்டு போன்னு சொல்ல வந்தேன்


15. சில லேடீஸ்க்கு ஆணோட ஃபேஸ்கட்டை விட இப்படி ஃபேர் பாடியோட இருந்தாதான் பிடிக்குது..
அட

கவுண்டமணி - முடிச்சிட்டே இல்ல,நீ ஓடிப்போயிடு.சுந்தர் நம்ம மேட்டருக்கு வருவோம்.உனக்கு ஆக்‌ஷன் ஹீரோ ஆகனும்னு ஆசை இருக்க வேண்டியதுதான்,அதுக்காக...

சுந்தர் சி - ஏண்ணே,ஃபைட் சீன்ல எல்லாம் பட்டையை கிளப்பி இருப்பேனே?

கவுண்டமணி - சொதப்பி இருக்கே,நிறைய ஆடியன்ஸை  தியேட்டரை விட்டு கிளப்பி இருக்கே..ஒரு ஃபைட் சீன்ல பட்டத்துக்கு விடற நூல் கண்டு மீறி மீறிப்போனா 20 கிராம் வெயிட் இருக்கும் ,அதை ஒரு அடியாள் மேல வீசி எரியறே,அவன் 108 கிலோ வெயிட் இருப்பான்,2 கி மீ தள்ளிப்போய் விழறான்...இதெல்லாம் என்ன?




சுந்தர் சி - அண்ணே ,ஃபைட் சீன் ல எல்லாம் லாஜிக் பாக்கக்கூடாது..


கவுண்டமணி - கதைலயும் லாஜிக் பாக்கக்கூடாது,காமெடியிலயும் லாஜிக் கூடாது,டூயட்ல ஏன் திடீர்னு கூடுவாஞ்சேரில இருந்து சிங்கப்பூர் போறீங்கன்னு கேக்கக்கூடாது,,அப்புறம் எதுல தான் லாஜிக் பாக்கறது..?


சுந்தர் சி - சரி விடுங்க,ஹீரோயினுக்கும் எனக்கும் பாடி கெமிஸ்ட்ரி எப்படி?


கவுண்டமணி - சிவா மனசுல சக்தி படத்துல அந்தப்பொண்ணு ஜீவா கூட நல்ல ரொமான்ஸ் பண்ணுச்சு,பாக்க முடிஞ்சுது.இதுல அந்தப்பொண்ணு உனக்கு ஜோடியா நினைக்கவே நாராசமா இருக்கு,நீ அந்தப்பொண்ணுக்கு பெரியப்பா மாதிரி இருக்கே...


சுந்தர் சி - படத்துல ஒரு ஐட்டம் சாங்க் இருந்துதே பார்த்தீங்களா?


கவுண்டமணி - ம்ம் ,ம்ம் ,பார்த்தேன் பார்த்தேன்,ஏய்யா லைட்டிங்க் அடிக்கறப்ப அப்படியா மஞ்சள் லைட் அடிப்பீங்க.தக தகனு அந்தப்பார்ட்டிக்கு இடுப்பு ஜொலிக்கறதைப்பார்த்து அவனவன் தியேட்டர்ல ஜொள்ளு விடறான்.

சுந்தர் சி - தலை நகரம் படத்துக்குப்பிறகு வடிவேல் காமெடி இந்தப்படத்துல ஒரு மைல்கல்னு எல்லாரும் பேசிக்கறாங்கண்ணே..


கவுண்டமணி - ம் ம் பார்ப்போம் பார்ப்போம்,வெறும் வடிவேல் காமெடியை மட்டும் வெச்சுக்கிட்டு நீ இன்னும் எத்தனை நாள் குப்பை கொட்டப்போறேன்னு?நகரம்னு டைட்டில் வெச்சதுக்குப்பேசாம நரகம்னு வெச்சு இருக்கலாம் கிரகம்டா சாமி.