Saturday, November 20, 2010

மந்திரப்புன்னகை - சினிமா விமர்சனம்





குடைக்குள் மழை ஆர் பார்த்திபன் மாதிரி மனச்சிதைவு நோய்க்கு ஆளான ஹீரோ  மீது கல்கி ஹீரோயின் மாதிரி முற்போக்கு எண்ணம் உள்ள பெண் காதலிப்பதே  கதை.தான் அன்பு வைத்த அம்மா அப்பாவுக்கு துரோகம் செய்து ஓடி விடுவதால் தன் மேல் அன்பு வைக்கும் பெண்ணும் அதே போல் தனக்கு துரோகம் செய்து விடுவாள் என கற்பனை பண்ணிக்கொள்ளும் இளைஞன்,அந்த பெண்ணுடன் நடத்தும் நாடகம் தான் திரைக்கதை

கரு பழனியப்பன் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார்.மக்கள் அவரை ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்விக்குப்போகும் முன் இந்தப்படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ஹீரோவுக்கு ஏன் அப்படி ஒரு நோய் வந்தது என்பதற்கு இயக்குநர் படத்தின் பின் பாதியில் ஒரு ஃபிளாஷ்பேக் வைத்திருக்கிறார் பாருங்கள்.. அது சுந்தர ராமசாமியின் கதை போல் அழகிய சிறுகதை.அப்பா,அம்மா வாக வரும் கேரக்டர்கள் மனதில் பதிந்து போகும் அளவுக்கு இயற்கையான நடிப்பு.

ஹீரோயின் செலக்‌ஷன் சுமார்தான்.கோகுலத்தில் சீதை கார்த்திக் மாதிரி குடி,கூத்தி என அலையும் ஒரு ஆணை ஒரு பெண் விரும்புகிறாள் என்பதை ஜீரணிக்கவே மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது..ஹீரோயின் முக சாயலில் மீனா மாதிரியும்,நடிப்பில் பூஜா மாதிரியும் முயன்று இருக்கிறார்.


மனதை தொட்ட செண்ட்டிமெண்ட் வசனங்கள் -

1. பிள்ளைகளால பெத்தவங்க வயிறு நிறையாட்டி பரவால்ல,மனசு நிறைஞ்சா போதும்

2. பொலைட்டா( POLITE ) கும்புடு போட்டு பணிஞ்சு நடக்கறவன் ஒழுங்கா வேலை செய்ய மாட்டான்.நல்லா வேலை செய்யறவன் கூழைக்கும்புடு போட மாட்டான்.

3. பொம்பள பாக்கற வேலையை அவரு பாக்கறாரு,அவரு பாக்கற வேலையை நீ பாக்கறே ,ஏன்?

வேலைல பொம்பள என்ன? ஆம்பள என்ன? திங்கள் டூ புதன் அவர் சமைப்பாரு.வியாழன் டூ சனி நான் சமைப்பேன்,ஞாயிறு 2 பேருக்கும் லீவ்,ஹோட்டல் சாப்பாடு.

4. சீரியஸா இருக்கற பாட்டியை போய்ப்பாக்க ஏன் மாட்டேங்கறே?

நான் போய் பார்த்தா அவங்களுக்கு வாழனும்கற ஆசை வந்துடும்.அவங்க ரொம்ப கஷ்டப்படறாங்க.சாக வேண்டிய தருணம் இது.சாவுதான் ஒரு மனுஷனுக்கு பூரண விடுதலை.

5. காரணமே இல்லாம பிடிச்சிருந்தா அது குழந்தைகளைத்தான்.

6. உன் ஆளு குடுத்த கிஃப்ட் பார்சலை ஏன் பிரிச்சு பாக்கலை?

பிரிச்சுப்பார்த்துட்டா என்ன இருக்குன்னு தெரிஞ்சிடும்.பிரிக்காம இருந்து என்ன குடுத்திருப்பான்னு ஏங்கறதுல ஒரு கிக் இருக்கு.

7.ஒரு அரசியல்வாதியை புரிஞ்சுக்க நாம அரசியல்வாதியா இருக்கனும்னு அவசியம் இல்லை.ஒரு நடிகனை புரிஞ்சுக்க நாம நடிகனா இருக்கனும்னு அவசியம் இல்லை.ஆனா ஒரு அப்பாவைப்புரிஞ்சுக்க நாம அப்பாவா இருந்து பாக்கனும்.அப்போதான் புரியும்.

8.வெளில நாம் எங்காவது போறப்ப கண்ணாடில ஒரு தடவை நம்மை பார்த்துட்டு போகனும்,நம்மையே நமக்கு பிடிச்சாதானே மத்தவ்ங்களுக்கு நம்மளை பிடிக்கும்.

9. எந்தப்புருஷனும் தன் மனைவியை தினம் பாராட்டிட்டு  இருக்க மாட்டான்.

10.நாம எப்படி இருந்தாலும் நமக்கு வரப்போற மனைவி ஒழுக்கமானவளா அமையனும்கறதுதான் ஆம்பளையோட புத்தி.

11. ஏன் தாலியை கழட்டி வெச்சுட்டே?தப்பு பண்ணும்போது உறுத்துச்சா?

12. எல்லாப்புருஷனும் தன் மனைவியை கொன்னுடலாமான்னு வாழ்நாள்ல ஒரு தடவையாவது நினைச்சுப்பார்ப்பான்.

13.காதலிக்கறவங்களை நிப்பாட்டி ஏன் காதலிக்கறீங்கனு கேட்டுப்பாருங்க,யாராலும் பதில் சொல்ல முடியாது.அதுதான் காதல்.

14.கொடுமையைத்தாங்க முடியாதவங்க இருக்கலாம்,கோபத்தை தாங்க முடியாதவங்க இருக்கலாம்,அன்பைத்தாங்க முடியாதவங்க இருக்க முடியுமா?உன்னால அதை தாங்க முடியலை,அதனால தான் உன்னை காதலிக்கறேன்.

15, நீ நல்லவன் கிடையாது,உனக்கு நல்ல பொண்ணு கிடைக்க மாட்டா,உன்னை மாதிரி ஆளுக்கு எல்லாம் நல்ல பொண்ணு கிடைச்சுட்டா அப்புறம் நல்லவனுக்கு எல்லாம் பொண்ணு எங்கே கிடைக்கும்?

16. என்னை ஆண்டவன் தப்பா படைச்சுட்டான்,மேனுஃபேக்சரிங்க் டிஃபக்ட்,மாத்த முடியாது..




நினைவில் நின்ற காமெடி வசனங்கள்

1.மாமி,ஆத்துல உங்க வீட்டுக்காரர் இல்லியா?      எப்படி கண்டு பிடிச்சேள்?

அதுதான் தழைய தழைய புடவை கட்டி ,தலை நிறைய மல்லிகைப்பூ வெச்சி கும்முன்னு இருக்கீங்களே...

2.உனக்கு புரியாது,அவர் இருக்கறப்ப இப்படி இருந்தா அட்டாக் பண்ணிடுவாரு.

3.ஒரு மேரேஜ் கூட இன்னும் பண்ணலை,எதுக்கு மன்மத நாயுடுன்னு பேரு,முதல்ல அதை மாத்தனும்.

4.டே,நாயே  நில்லு எங்கே போறே?     கோமணம் கட்ட மறந்துட்டு வந்துட்டேன்,போய் கட்டிட்டு வர்றேன்.

செத்துப்போன கிளி பறந்து போகவா போகுது?

5.ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதா....இதையே எத்தனை நாளுக்கு சொல்லீட்டே இருப்பீங்க,நங்க இன்ஸ்பெக்டர் சுரைக்காயை வெச்சு சாம்பார் வெச்சுக்குவோம்ல?


6.உங்க குழந்தைக்கு இன்னுமா சீட் கிடைக்கல?

ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சதும் கியூல நின்னு பார்த்தாச்சு,ம்ஹூம்,பிரயோஜனம் இல்ல.

7.இந்த ஸ்கூல்ல என் பையனை சேர்த்துட்டேன்,நான் 25 வயசுல கத்துக்கிட்டதை எல்லாம் இந்த ஸ்கூல்ல 8 வயசுலயே கத்து தர்றாங்க..
நீ அந்த வயசுல தண்ணி அடிச்சே,,,,,அப்போ உன் பையன் இந்த வயசுல தண்ணி அடிப்பானா?இவ்வளவு கஷ்டப்பட்டு ஸ்கூல்ல சேர்த்தறியே பையன் படிக்கலைன்னா என்ன செய்வே?

8.அந்தாளு உன்னை எங்கெல்லாம் பார்த்தான் தெரியுமாடி?

தெரியும்,அப்படிப்பார்த்தா என் கற்பு ஒன்னும் கெட்டுப்போயிடாது..

9.எல்லோருமே இப்போ டிஃப்ரெண்ட்டாதான் திங்க் பண்றாங்க..நாம நார்மலா திங்க் பண்ணுனாலே அது டிஃப்ரெண்ட் ஆகிடும்..

10.நைட் 10 மணீ ஆனாலும் பரவால்ல... உடனே இப்போ ஆஃபீஸ் வா,..

பாஸ்,, அது வந்து ... நான் என் ஒயிஃப் கூட ஒரு முக்கியமான வேலைல இருக்கேன்.

அத வேற யாராவது பண்ண சொல்லீட்டு நீ உடனே வா.    அது முடியாது...



11.அடியே,ஆன்னா ஊன்னா உங்கப்பனுக்கு ஃபோன் போடறியே, அவர் என்ன கஸ்டமர் கேரா?

12, மாப்ளை,எந்த வேலைக்குப்போறதா இருந்தாலும் நைட் 10 மணீக்கு வீட்டுக்கு வர்ற மாதிரி வேலையா பார்த்து போங்க.

மாமா,நான் போறது நைட் டியூட்டி ....

சரி நட் 10 மணீக்குள்ள வரப்பாருங்க.

13.நான் ஒரு குடிகாரன்னு உன் மனைவி கிட்டே ஃபோன் போட்டு இப்பவே சொல்லு.

ஆமா,என்னமோ குடியரசுத்தலைவர் மாதிரி பெருமையா சொல்லிக்கறான் பாரு.

14.வழக்கமா எல்லாரும் சம்பளம் வாங்குன பிறகுதான் சரக்கு அடிக்கப்போவாங்க,நீ சரக்கு வாங்கி பாக்கெட்ல வெச்சுக்கிட்டுத்தான் வேலைக்கே  கிளம்புவே போல.

15  உடம்புக்கு கெடுதல் பண்ற கோக் ,பெப்சி இதை எல்லாம் சத்தம் போட்டு கேட்டு வாங்கறோம்,ஆனா உடம்புக்கு நல்லது பண்ற காண்டம் வாங்க மட்டும் ஏன் கூச்சப்பட்டு நிக்கறோம்?

16  இந்தாங்க என் விசிட்டிங்க கார்டு..

அடடா,பதிலுக்கு தர என் கிட்டே விசிட்டிங்க கார்டு இல்லையே..?

17. குடிக்கற நான் இவ்வளவு தெளிவா இருக்கேன்,குடிக்காத நீங்க இவ்வளவு குழப்பத்துல இருக்கீங்களே?

18. அட்டு ஃபிகரா இருந்தாலும் இந்தக்காலத்துல 1008 கண்டிஷன் போடுவாங்க..எந்த கண்டிஷனுமே போடாத நந்தினியை நீ மிஸ் பண்ணிடக்கூடாது..

19.அய்யய்யோ,ஆம்னி பஸ்ல இருந்து மாயாண்டி குடும்பம் வருதே ,அழுதே இவன் ஆஸ்கார் அவார்டு வாங்கறவனாச்சே..

20. ராத்திரி ஏன் குடிச்சிட்டு வீட்டுக்கு வர்றீங்க?

அதுவா,,பகல்ல குடிச்சிட்டு ஆஃபீஸ் போக முடியாதே,... அதான்

21.. டே நாயே உன் வாய் ஏன் இப்படி கப்பு அடிக்குது,உன் மூக்குக்கு கீழே ஆணி அடிச்சு மல்லிகைப்பூ தொங்க விட்டாதான் வாசம் போகும் போல..நீ உயிரோட இருக்கறப்பவே பொண நாத்தம். அடிக்குதே நீ செத்துட்டா ..எப்படி நாறப்போறியோ?

22. உங்க வீட்டுக்கு பின்னால பலூனா கிடக்குதே..?

வீட்ல குழந்தைங்க விளையாடி இருக்கும்..

எனக்கென்னவோ குழந்தை வேண்டாம்னு நீங்க விளையாடுன மாதிரி தோணுது..

இயக்குநருக்கு தனிப்பட்ட முறையில் ஆர்ட் டைரக்‌ஷனில் செம இன்ட்ரஸ்ட் போல.அதற்கு தீனி போடும் விதமாக தனது கேரக்டரை டிசைனிங்க் இஞ்சினியராக வடிவமைத்துக்கொண்டது அவரது புத்திசாலித்தனம்.

படத்தின் ஓப்பனிங்கலயே ஹீரோ அந்த மாதிரி பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளவர் என காண்பித்து அழகிய தவறு என்ற நாவல் டைட்டிலை காண்பிப்பது கே பாலச்சந்தர் டைப் முத்திரை.


கார் ஷோ ரூமில் வேலை பார்க்கும் ஹீரோயின் கஸ்டமரிடம் டெமோ காண்பிக்கும் சீனில் அவர் காட்டும் கிளாமர் செம கில்மா.கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது.

வீட்டில் அகல் விளக்குகள் நூற்றுக்கணக்கில் இருக்க சிகரெட் பற்ற வைக்க ஹீரோ மக்கர் பண்ணும் சிகரெட் லைட்டரையே ட்றை பண்ணும் சீனில்  அவர்து கேரக்டர் தெளிவாக விளக்கப்படுகிறது.

படத்துக்கு தூண் மாதிரி சந்தானம்,விவேக்குக்கு பிறகு டிரஸ்ஸிங்க சென்ஸில் கலக்கும் காமெடியன் இவர்தான்.ஹீரோவை விட சூப்பராக டிரஸ் பண்ணீ வருகிறார்.மெடிக்கல் ஷாப்பில் காண்டம் கேட்க கூச்சப்படும் காட்சியில் பின்னிப்பெடல் எடுக்கிறார்.அதே சீனில் புத்திசாலித்தனமாக ஹீரோயின் - ஹீரோவை லிங்க் பண்ணி சீன் வைத்தது டைரக்டரின் சாமார்த்தியம்.

தண்ணி போட்ட பாப்பா நீ எனும் ஓப்பனிங்க குடி பாட்டில் டான்ச் மூவ்மெண்ட் ஏழையின் சிரிப்பில் பட பிரபு தேவா பாணி.

ஒரு காதல் பாட்டில் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஸ்லோ மோஷனில் சிதறுவது,மழையில் சிறுவர்கள் நனைவது,சோப்புக்குமிழிகள் பறப்பது என கேமரா விளையாடி இருக்கு.

டூயட்டில் ஹீரோ ஹீரோயின் கட்டிப்பிடிப்பது மாதிரி காண்பித்து விட்டதால் இருவரும் பிறகு முதன் முதலாக கைகளை இணைப்பது மாதிரி காண்பிக்கும் சீனில் டைரக்டர் எதிர்பார்த்த எஃபக்ட் கிடைக்கவில்லை.

ஒரு சீனில் ஹீரோ 4 நாட்களாக ஏன் ஆஃபீஸ் வர்லை? என கேள்வி கேட்கப்படுகிறது,அடுத்த சீனிலேயே ஏன் 2 நாளா வர்லை? என்கிறார்கள்.கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்.

குணா,மனசுக்குள் மத்தாப்பு,ஆளவந்தான்,குடைக்குள் மழை, கற்றது தமிழ் போன்ற மன நலம் பாதிக்கப்பட்ட ஹீரோக்கள் கதை வெற்றி பெறவில்லை.அந்த லிஸ்ட்டில் இந்தப்படமும் சேரும். சேது,காதல் கொண்டேன், படங்கள் விதி விலக்கு.

பி ,சி செண்ட்டரில் 10 நாட்கள் .ஏ செண்ட்டரில் 25 நாட்கள் ஓடலாம்


.