Friday, November 19, 2010

புது ராசா வரப்போறாரு......அசின் கவனத்தை ஈர்க்கப்போறாரு...



Image





















1. “குற்றம்  என்ன  செய்தேன்  கொற்றவனே?”

“போரில்  இருந்து  திரும்பி  வரும்போது  தோற்றவனே  என்று  அழைத்தீரே!”



2. “மன்னா!  இந்த  அர்த்த  ஜாமத்தில்  கூட  ஏதாவது  யோசித்துக்கொண்டு  இருக்கிறீரே! என்னது?”


“ஜாமம்  என்றால்  என்ன  அர்த்தம்  என்றுதான்  ராணி!”






3. “எதுக்காக  நடிகை  அசின்  வீட்டுக்கு  முன்னாடி  மறியல்  போராட்டம்  நடத்துறாங்க?”


அரசின்  கவனத்தை  ஈர்க்கும்  வகையில்  போராட்டம்  நடத்துவோம்னு  மேடையில  பேசுறப்ப,  நம்ம  தலைவருக்கு  நாக்கு  தடுமாறி  ‘அசின் கவனத்தை’னு  பேசிட்டாரு!”






4. “மேடம்...  நீங்க  சேலை  கட்டி  ஃபுல்லா  கவர் பண்ணி  ஒரு  ஸ்டில்  பார்த்தோமே?”


“ஐயையோ...  நம்பாதீங்க...!  அது  கம்ப்யூட்டர்  கிராஃபிக்ஸ்!”






5. “மூல  நோயால்  பாதிக்கப்பட்டவர்களை  மன்னர்  ஏன்  நாடு  கடத்துகிறார்?”


“ஆண்  மூலம்  அரசாளும்னு  யாரோ  சொன்னாங்களாம்,  தன்னோட  பதவிக்கு  ஆபத்து  வந்துடுமோனு  பயப்படறார்  மன்னர்!”






6. “போர்க்களத்துக்குச்  செல்ல  மன்னர்  தயங்குகிறாரே...  அவரோட  ‘மூப்பு’தான்  காரணமா?”


“இல்லை.  ஏற்கெனவே  ஒருமுறை  எதிரி  நாட்டு  மன்னன்  இவருக்கு  வைத்த  ‘ஆப்பு’தான்  காரணம்!”






7. “அவ்வப்போது  நகர்வலம்  செல்கையில்  பிச்சைக்காரன்  வேடத்தில்  சென்றது,  போர்க்களத்தில்  உபயோகமாக  இருக்கிறது!”


“எப்படி  மன்னா?”


“உயிர்  பிச்சை  கேட்க  உதவியாக  இருந்தது!”






8. “ஸ்கோப்  இல்லைனு  சொல்றீங்களே  டாக்டர்...  இனி  என்  மாமியார்  பிழைக்க  மாட்டாங்களா?”


“அவசரப்படாதீங்க!  ஸ்டெதஸ்கோப்  இல்லை,  மறந்துட்டு  வந்துட்டேன்னு  சொல்ல  வந்தேன்!”



Asin faints in Vijay film shooting spot



















9. “போர்  செய்தி 
கே ட்டதும்  மன்னர்  பதறுகிறார்.  மகாராணி  பரவசப்படுகிறார்...  ஏன்?”


“இரண்டுக்கும்  ஒரே  காரணம்...  புது  ராஜா  வரப்  போறதுதான்!”



10. “போலி  டாக்டர்னு  தெரிஞ்சும்  அதே  க்ளினிக்குக்கு  ஏன்  போனே?”


“டாக்டர்  போலியா  இருந்தா  என்ன...  நர்ஸ்  ஜாலியா  இருக்காங்களே!”






11. “மன்னா! தகவல்  அறியும்  உரிமைச்  சட்டத்தை  பலர்  தவறாக  புரிந்துகொண்டு  உள்ளனர்!”


“எப்படி?”


“அந்தப்புரத்தில்  உள்ள  பெண்களின்  இடுப்பளவு  எவ்வளவு  என்ற  தகவல்  வேணுமாம்!”






12. “மன்னர்  புலவர்  மேல்  ஏன்  கடுப்பாக  உள்ளார்?”


“ஏற்கெனவே  வேறு  ஒரு  புலவர்  10  வருடம்  முன்பு  பாடிய  பாடலை  இவர்  ரீ-மிக்ஸ்  செய்து  பாடினாராம்!”






13. “மன்னா!  உங்கள்  வாளுக்கு  வேலை  வந்துவிட்டது.”


“என்ன,  போர்  அறிவிப்பா?”


“ம்ஹும்...  சாணை  பிடிப்பவர்  வந்துள்ளார்.”






14. ஒரு  வீட்டில்  விருந்தாளியும்  குழந்தையும்...

“உனக்கு  அம்மா  புடிக்குமா,  அப்பா  புடிக்குமா?”

“எனக்கு  இந்தியன்  கிரிக்கெட்  டீமைத்தான்  புடிக்கும்.  ஏன்னா,  அவங்கதான்  அடிக்கவே  மாட்டாங்க!”






15. ஒரு  பூங்காவில்  காதல்  ஜோடி...


“ரமேஷ்!  எனக்கு  சாப்பிடும்  போதெல்லாம்கூட  உன்  ஞாபகமாவே  இருக்கு...”


“அப்படியா...  எனக்குக்  கைகழுவும்போதுதான்  உன்  நெனப்பு  வருது!”






16. “புடவை,  புருஷன்  என்ன  வித்தியாசம்?”


“புடவை  எடுக்கறப்ப  புரட்டிப்  புரட்டி  பார்த்து  எடுத்து  கட்டிக்குவாங்க.  புருஷனை  கட்டிட்டு  அப்புறமாதான்  புரட்டி  புரட்டி  எடுப்பாங்க.”