1. “தலைவர் ரொம்ப நேர்மையானவர்னு எப்படி சொல்றே?”
“கோர்ட்ல சத்தியப் பிரமாணம் எடுக்கறப்ப நான் சொல்வதெல்லாம் பொய்; பொய்யைத் தவிர வேறில்லைன்னு சொன்னாரே?”
2. “கேஸ் (GAS) கம்பெனி இண்டர்வ்யூல ஏன் செலக்ட் ஆகலை?”
“என்னைப் பற்றி ஸ்பெஷலா ஏதாவது சொல்லச் சொன்னப்ப எனக்கு கற்பூரபுத்தின்னு சொன்னேன். அய்யய்யோ! கம்பெனி பத்திக்குமோனு பயந்துட்டாங்க”
3. “இப்போதெல்லாம் தெருக்கூத்துக் கலை முற்றிலும் அழிந்து விட்டது. இதைக் காப்பாற்ற நமது தலைவர் முன் வர வேண்டும்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சு”
“ஏன்?”
“எங்க கட்சில செயற்குழு கூட்டம் நடக்கறப்ப வாங்க. ஏகப்பட்ட கூத்து நடக்கும்னு சொல்றார்!”
4. “ம்ன்னர் எப்படி எதிரிப்படையை பின் வாங்க செய்தார்?”
“நம் நாட்டில் அனைவருக்கும் சிக்குன்குன்யா. இங்கு வந்தால் உடனே பரவிக் கொள்ளும் என்று புரளி கிளப்பினார்”
5. “பெரிய கட்சித் தலைவரா வரப்போறான்னு இப்பவே எப்படி ஆரூடம் சொல்றீங்க?”
“100/100னு ( நூத்துக்கு நூறு) சிலேட்ல இவனே மார்க் போட்டுக்கிட்டானே?”
6. “நைட் 10.30 மணிக்கு தலைவரோட மேடை பேச்சு லைவ்-லேபோடுறாங்க”
“அது காமெடி டைமாச்சே?”
“இது மட்டும் என்ன?”
7. “என் மனைவி சமையல் பண்ணினா வாசம் கமகமன்னு ஆளையே தூக்கிடும்”
“இல்லையே! அதைச் சாப்பிட்டாத்தான் ஆளைத் தூக்க வேண்டிவரும்னு சொன்னாங்க”
8. “மன்னா! தங்கள் மெய்க்காப்பாளர் கல்யாண மண்டபத்தில் மொய் எழுதுற இடத்துல எதுக்கு நிற்கறாரு?”
“அமைச்சரே! அவர்தான் இப்போதைய மொய்க்காப்பாளர்”
9. “நண்பர்களாகப் பிரிகிறோம்னு அறிக்கை விட்டது தப்பாப் போச்சு”
“ஏன் தலைவரே?”
“அப்போ... இத்தனை நாளா எதிரிகளா சேர்ந்து இருந்தீங்களா?ன்னு நிருபர்கள் கேட்கறாக்க!”
10. “தலைவரே! மேடைல பேசறப்ப ‘அன்புக்கு நான் அடிமை’ன்னு சொன்னீங்களே?”
“ஆமா... அதுக்கென்ன?”
“உங்க சம்சாரம் பேரு அம்புஜம்தானே? அன்பு-ன்னு பேரை மாத்திட்டாங்களா?”
11. “காமெடி படத்தைப் பார்த்து ஏன் அவர் அழறாரு?”
“அவரு அந்தப் படத்தின் புரொடியூஸர்”
12. “அரசு விழாவில் அரசியல் பேச மாட்டேன்னு அறிக்கை விட்டேன்!”
“என்ன ஆச்சு தலைவரே?”
“பிரஸ்காரங்க அதை எடிட் பண்ணி, இனி விழாவில் பேச மாட்டேன்னு சொன்னதா போட்டுட்டாங்க!”
13. “நீயும், உன் ஆள் மோஹனாவும் டெய்லி பீச்சுல 3 மணி நேரம் இருக்கீங்க. அப்படி என்னதான் பேசுவீக்க?”
“நாங்க பேசுறோம்னு யார் சொன்னது?”
14. “என் மனைவி கோபமா இருக்கறப்ப, ஒரு வரி பேசுனா போதும். அடங்கிடுவா.”
“வாயை மூடுனு சொல்வியா?”
“ம்ஹூம். பேசாம இருந்தா ஒரு நெக்லஸ் வாங்கித் தர்றேன் என்பேன்.”
15. “வரும் முன் காப்போம் திட்டத்தை தலைவர் ஆதரிக்கறாராமே?”
“ஆமாம்! இன்கம் டாக்ஸ் ரெய்டு வரும்முன் சொத்துக்களைக் காப்போம் திட்டமாம் அது!”
16. நடிகை - “காய்கறியை என் கையால வாங்கலாம்னு மார்க்கெட் போனேன். ஆட்டோகிராஃப் வேணும்னு யாரும் என்கிட்டே கேட்கலை. யாரும் கண்டுக்கலை.”
“மார்க்கெட் போனா கண்டுக்க மாட்டாங்க.”
டிஸ்கி 1 - டைட்டிலில் மார்க்கட் என்பது ஆங்கில MARKET டை குறிக்கும்,தமிழ் ஆர்வலர்கள் மார் கட்டு என டபுள் மீனிங்க்கில் பொருள் புரிந்து கொண்டு கண்டனம் தெரிவித்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
டிஸ்கி 2- மார்க்கட் போன நடிகை ஜோக் தனி,தலைவர் ஜோக் தனி.ரெண்டையும் சேர்த்து ஏதோ கிசு கிசு என வந்து ஏமாந்து கோபப்பட்டாலும் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல. ( டேய்,பருப்பு,எதுக்குமே நீ பொறுப்பு இல்லைன்னா எதுக்கு உனக்கு அந்த பொறுப்பு?)