1.>>>கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 1-11-2010க்கு முன்னர் தமிழ்மணத்தில் இணைத்திருத்தல் வேண்டும். டிசம்பர் 1, 2009 முதல் நவம்பர் 10 2010 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே விருதுகள் தேர்வுக்கு இடம்பெறும்>>>
பொதுவாக ஒரு ஆண்டின் சிறந்த படைப்பு என்றால் அந்த ஆண்டு முழுவதும் வரும் படைப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.உதாரணமாக 2010ம் ஆண்டின் சிறந்த படம் என்றால் 1.1.2010 முதல் 31.12.2010 வரை ரிலீஸ் ஆன படங்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
2.>>>>தமிழ்மணத்தின் முதற்கட்ட வாக்கெடுப்பு வலைப்பதிவர்களுக்கானது. தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ள வலைப்பதிவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம். ஒரு பதிவருக்கு ஒரு பிரிவுக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் வாக்குரிமை இருக்கும்.>>>
இதில்தான் முக்கியப்பிரச்சனை.ஒரு சாதாரண பதிவர்க்கு குறைந்த பட்சம் 10 பின்னூட்டவாதிகள் அல்லது பிடித்த பதிவாளர்களூம்,பிரபல பதிவாளர்களூக்கு 50 பின்னூட்டவாதிகள் அல்லது பிடித்த பதிவாளர்களூம் இருப்பார்கள்.அவர்கள் எல்லோருக்கும் அல்லது பெஸ்ட் பதிவுகளுக்கு வாக்களீக்க விரும்புவார்கள் ,இப்படி ரேஷன் வைத்தால் மனத்தாங்கல் ஏற்படும்.
3.>>>> தமிழ்மணம் நிர்வாகம், வலைப்பதிவர்களைக் கொண்ட நடுவர் குழு அமைக்கப்படும். நடுவர் குழுவில் இடம் பெறும் நடுவர்கள் தனித்தனியாக இடுகைகளை தேர்வு செய்து தமிழ்மணம் விருதுக்குழுவிற்கு அளிப்பார்கள்.>>>>
சீனியர் வலைப்பதிவர்களைக் கொண்ட நடுவர் குழு எப்படி தேர்ந்தெடுக்கும் என சொல்லத்தேவை இல்லை,அவர்கள் காலகட்டத்தில் உள்ள வலைப்பதிவர்களுக்கே அதிக முன்னுரிமை கொடுப்பார்கள்.இது இயற்கை மற்றும் மனோவியல் ரீதியாகவும் அப்படித்தான் அமையும்.புது வலைப்பதிவாளர்கள் புறந்தள்ளப்பட வாய்ப்புண்டு.
4 >>>> இந்த விருதுத் தேர்வுக்கான அடிப்படை. அறிவிக்கப்பட்ட போட்டிகளுக்காக எழுதப்படும் படைப்புகளாக அல்லாமல், தன்னெழுச்சியாக வெளிப்பட்ட படைப்புகளே இந்தத் தேர்வுகளுக்கு கணக்கிலெடுக்கப்படுவதால் இதில் போட்டியோ, ஏமாற்றமோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்குமென்றே நம்புகிறோம்.>>>
போட்டி என்று அறிவிக்கப்பட்ட பிறகு எழுதப்படும் பதிவுகளும் கணக்கில் சேர்க்கப்பட்டால் படைப்பின் தரம் இன்னும் கூடும்.இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு எழுதுவார்கள்.அது நல்லதுதானே.
5. >>>> தனிப்பட்ட இடுகை (post) அல்லது இடுகைத் தொடர்களே விருதுக்கு தேர்வு செய்யப்படும். வலைப்பதிவு முழுமைக்குமான விருது என்று எதுவும் இல்லை.>>>
பெஸ்ட் பிளாக் அவார்டு ஒன்றும் கொடுக்கலாம்.அது ஊக்குவிப்பாக அமையும்.
6. >>>
வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்குப் பெற்று முதலிடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.1000ம் (ஆயிரம் ரூபாய்), இரண்டாம் இடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.500ம் (ஐநூறு ரூபாய்) வழங்கப்படும்.>>>
பரிசுத்தொகை மிக கம்மி.ஒரு தனி மனிதனான பரிசல்காரன் கிருஷ்ணகுமார் அறிவித்த போட்டியிலேயே (சவால் சிறுகதை போட்டி) ரூ 1000 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக பலருக்கு அளிக்கப்பட்ட போது.இத்தனை பதிவாளர்களை வைத்து நடத்தும் மிகப்பெரிய நிறுவனம் அறிவுத்துள்ள பரிசு யானைப்பசிக்கு சோளப்பொரி.
7. அதே போல் யார் யார் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது ரகசியமாக இருக்க வேண்டும்.ஏனெனில் வெளிப்படையாக தெரிந்துவிட்டால் நண்பர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்புண்டு.இது பற்றி தெளிவாக ஏதும் கூறப்படவில்லை.
டிஸ்கி - 1 : என் மனதிற்குத்தோன்றியதை நான் எழுதினேன்.இதனால் தமிழ்மணம் போட்டித்தேர்வில் என் படைப்புகள் பரிசு பெறுவதில் பாதிப்பு ஏற்படும் என தமிழ்மணம் அமைப்பு நினைத்தால் எனக்கு தனி மெயிலில் மிரட்டவும்.நான் இந்த இடுகையையே நீக்கி விடுகிறேன்.கொண்ட கொள்கையில் கடைசி வரை உறுதியாக இருக்க நான் வீரபாண்டியக்கட்ட பொம்மன் பரம்பரையில் பிறக்கவில்லை.சாதாரண குடும்பம்தான்.
டிஸ்கி - 2 : வழக்கமாக் காமெடிக்காகத்தான் அட்ராசக்க வருகிறோம்,இப்படி சீரிஸ்சாக எழுதினால் எப்படி என கேட்பவர்கள் என் ஃபோட்டோவை ஒரு முறை பார்க்கவும்.அட டம்மி பீஸு என உங்களுக்கே சிரிப்பு வரும்.அப்படியே சிரிச்சுக்கிட்டே ஓட்டும்,கமெண்ட்டும் போட்டுட்டு ஓடி விடவும்.