1.படம் இன்னும் பூஜையே போடலை,அதுக்குள்ள கும்மி அடிக்கறது எதுக்கு?
கல்யாணமே ஆகலை,நிச்சயதார்த்தம் கூட ஃபிக்ஸ் பண்ணலை,பொண்ணை மட்டும் தான் பார்த்துட்டு வந்திருப்போம்,ஆனா பொண்ணு கூட ஃபோன்ல கடலை போடறது இல்லையா? அது மாதிரிதான்.
2. அமீர் டைரக்ஷன்ல விஜய் ஒரு படம் பண்ணப்போறாராமே?
ஆமா,அது பருத்தி வீரன்,இது படுத்தி எடுக்கற வீரன்.
3. ஏசுபிரான் - கண்ணபிரான் என்ன வித்தியாசம்?
ஆயிரக்கணக்கான மக்கள் முன்னால சிலுவைல அறையப்பட்டு கொல்லப்பட்டாரு ஏசு பிரான். லட்சக்கணக்கான மக்களை சிலுவைல அறையாமலேயே கொல்லப்போறாரு கண்ண பிரான்.
4. இது ஆக்ஷன் படம் கிடையாது,வன்முறை கிடையாது,ஆனா படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட்தான் கிடைக்கும்னு எப்படி சொல்றே?
கண்ணபிரான் அப்படிங்கற டைட்டில்ல இன்னொரு வாட்டி நல்லா பாரு.
5. அமீர்க்கும் ,விஜய்க்கும் என்ன வித்தியாசம்?
விஜய் தெலுங்குப்படத்தை ,மலையாளப்படத்தை ரீமேக் பண்ணுவாரு.ஆனா டீசண்ட்டா இந்தப்படத்துல இருந்துதான் சுடறோம்கறதை அறிவிச்சுடுவாரு.ஆனா அமீர் உலகப்படத்துல இருந்து உருவுவாரு,உல்டா பண்ணுவாரு,ஆனா ஒத்துக்க மாட்டாரு,கமுக்கமா இருந்துடுவாரு,நாம தான் கண்டு பிடிக்கனும்.
6. ஆறிலும் சாவு நூறிலும் சாவுன்னு எதுக்கு பழமொழி வந்தது?
கண்ணபிரான் டைட்டில் பாரு ,6 எழுத்து,அந்தப்படம் 100 நாள் ஓடுனாக்கூட (அல்லது ஓட்டுனாக்கூட) ஆபத்து என்னவோ நம்ம தமிழ்நாட்டுக்குதான்.
7.விஜய் - அமீர் சார்,யோகினு ஒரு டப்பா படம் குடுத்திருக்கீங்க,உங்க கூட ஒர்க் பண்ணவே பயமா இருக்கு.
அமீர் - விஜய்,மனசாட்சியே இல்லாம பேசாதீங்க, அஞ்சு அட்டர்ஃபிளாப்பை அசால்ட்டா குடுத்துட்டு இந்த அல்டாப்பு எதற்கு?
8. அமீருக்கும் ,விஜய்க்கும் ஒத்து வருமானு டவுட் தானா,ஏன்?
எதார்த்தமான நடிப்பை வெளிக்கொணர்வாரு அமீரு,எதார்த்தம்னா கிலோ என்ன விலைனு கேக்கறவரு விஜய்.....எப்படி செட் ஆகும்கறே?
9.இந்தப்படம் ரிலீஸ் ஆகறது 2015 தீபாவளுக்குத்தானா?ஏன்?
அமீர் பருத்தி வீரனை 3 வருஷமா எடுத்தாரு,யோகியை 2 வருஷமா எடுத்தாரு.ஒரு திறமையான ஹீரோவை வெச்சு படம் எடுக்கவே அவருக்கு இத்தனை வருஷம் தேவைப்படுதே,....... (ஃபில் இன் த பிளாங்க்ஸ் பிளீஸ்)
10. இந்தப்படத்தை சன் டீ வீ அதுக்குள்ள விலைக்கு வாங்கிடுச்சா,ஏன்?
மத்தவங்க யாராவது விலைக்கு வாங்குனா இளைய தளபதி விஜய் நடிக்கும்னு தெனா வெட்டா போட்டுக்குவாரு,இவங்க வாங்கிட்டா சன் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும்னு போட்டு அவரை, அவர் பேரை அமுக்கிடலாமே,அதுக்குத்தான்.
டிஸ்கி 1 - இது முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே,மீறி டென்ஷன் ஆகும் விஜய் ரசிகர்கள் திட்ட விரும்பினால் தமிழில் திட்டவும்.பெரும்பாலும் ஆங்கிலத்தில் திட்டியே மெயில் வருகிறது.
டிஸ்கி 2 - வி வி எஸ் எனும் விஜய்க்கு வெடி வைப்போர் சங்கத்தில் நான் சாதாரண உறுப்பினர் மட்டுமே. (இன்னும் சந்தா கூட கட்டலை) நான்தான் அதை உருவாக்கினேன் என்பதுபோல் ஆளாளுக்கு என்னை திட்டுவதை மென்மையாக கண்டிக்கிறேன்.