அந்தக்காலத்தில் உள்ள ஒரு மூட நம்பிக்கை இச்சாதாரி நாகம் (எந்த நாதாரி இதைக்கண்டு பிடித்தானோ) வகையறாவில் பெண் நாகம் உமிழும் நாகக்கல் யார் கையில் இருக்கிறதோ அவருக்கு மரணம் கிடையாது என்பதே.இச்சாதாரி நாகங்கள் உடல் உறவு கொள்ளும்போது அது பலவீனமான நிலையில் இருக்கும்,அப்போது பெண் நாகத்தை மட்டும் கவர்ந்து மாணிக்கக்கல்லை பெற முயற்சி செய்யும் ஒரு கேன்சர் பார்ட்டிஅடையும் துன்பங்களும் ,எதிர்கொள்ளும் சவால்களும் தான் கதை.
பாலிவூட்டின் ஏஞ்சலினாஜூலி என பெயர் பெற்ற மல்லிகா ஷெராவத் 75% நிர்வாணமாக நடித்த படம்.எனவே சீன் பட ரசிகர்கள் டோண்ட் மிஸ் இட். இராமநாரயணன் பார்த்தால் இந்தப்படத்தை ரீமேக் பண்ணி விடுவார்.அந்த அளவுக்கு காதில் பூ சுற்றும் காட்சிகள் அதிகம்.வந்தமா,சீனை பார்த்தமா ,கிளம்புனமா அப்படினு போய்க்கிட்டே இருக்கனும்.
முதலில் கை குலுக்கி பாராட்ட வேண்டியது ஒளிப்பதிவாளரைத்தான்.அவர் கேமராவுடன் ஹீரோயின் பின்னாலேயே அலைந்து கொண்டு கேப் கிடைக்கற டைம்ல எல்லாம் அவரோட பாடியை எக்ஸ்போஸ் செய்வதிலேயே குறியாக இருக்கிறார்.இதுவரை மல்லிகா ஷெராவத் நடித்த படங்களிலேயே மர்டர் படத்தில்தான் சீன் அதிகம்.அந்த சாதனையை (!?) இந்தப்படம் முறியடித்து இருக்கிறது.
நாக தேவதையாக வரும் ஹீரோயின் கொலை வழக்கை புலனாய்வு செய்யும் போலீஸ் அதிகாரியின் வீட்டிலேயே தங்குவது நம்ப முடியாது சீன்.
திரைக்கதையில் ஒரு எதிர்பார்ப்பும்,வேகமும் வேண்டும் என்பதற்காக வலுக்கட்டாயமாக புகுத்தியது மாதிரி தெரிகிறது. அதே மாதிரி போலீஸ் ஆஃபீசரான ஹீரோவின் நண்பராக வருபவருக்கும்,ஹீரோவின் மனைவிக்கும் ஏதோ கனெக்ஷன் ஏற்படப்போகிறது என்பது மாதிரி காட்சிகளை நகர்த்துவது இயக்குநரின் மலிவான உத்தி.(ஆனா அந்த மாதிரி காட்சி வராதா என ரசிகர்கள் பாவம் ஏங்கிப்போய் விட்டார்கள்)
2 விஷயத்தில் இயக்குநரை பாராட்டலாம்.இதுவரை நாம் பார்க்காத 2 கேரக்டர்களை அறிமுகப்படுத்தியதற்கு.ஹீரோவின் மாமியார் ஒரு மன நோயாளி.அவர் பார்வையில் தன் மாப்பிள்ளை ஒரு பெண்,அவருக்கு மேரேஜ் பண்ணி வைக்க பெண் தேடுவது மாதிரி செயல்களை செய்வதும் ஹீரோவை வாடி போடி என கூப்பிடுவதும் தமிழுக்கு புதுசு.அந்த கேரக்டரில் நடித்திருக்கும் நடிகை நடிப்பில் பட்டாசை கிளப்பி இருக்கிறார்.பல நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.ஆனால் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் ஆரவாரக்கூச்சல் இடுவது சீன் பார்க்கத்தடையா இருக்காரே என்பது தவிர வேறில்லை.
அதே போல் பாம்பாட்டி கேரக்டரில் வருபவர் நடிப்பு அற்புதம்.இயக்குநர் சொல்லி குடுத்து நடிப்பது போலவே தெரியவில்லை,ரகுவரன்,பிரகாஷ் ராஜ் போல் தனிப்பட்ட ஸ்பெஷல் நடிப்பு அவருடையது.
மேலே உள்ள ஸ்டில்லில் ஹீரோயின் அருகில் இருப்பவரே ஹீரோவின் ஜோடி.பார்ட்டி நல்ல ஃபிகர்.நடிப்பும் ஓக்கே.படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் இவருக்கு ஒரு சீன் உண்டு.சம்பந்தம் இருந்தா என்ன இல்லாட்டி என்ன?சீன் இருந்தா சரி என ரசிகர்கள் அதை கண்டு களிக்கிறார்கள்.
மல்லிகாவுக்கு 4 சீன்கள்.முதல் காட்சியில் அவர் முழு நிர்வாணமாக பீச் மணலில் படுத்திருப்பது காண்பவர்களை திக் பிரமை அடைய வைக்கிறது.இந்தக்காட்சியில் எப்படி நடிக்க துணிந்தீர்கள் என ஸ்டார் டஸ்ட் எனும் ஹிந்தி மாத இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் “அந்தக்காட்சியில் நான் நிர்வாணமாக நடிக்கவில்லை.என் ஸ்கின் (சருமம்)கலர்லயே தோல் ஆடை அணிந்துதான் நடித்தேன்,மேலும் சில காட்சிகளில் டூப் யூஸ் பண்ணிக்கொண்டார்கள்” என்றார்.
முதல் பாவம் அபிலாஷா முதல் கடைசி புண்ணியம் கல்பனா வரை யார்தான் உண்மையை சொல்கிறார்கள்?ஏதோ சால்ஜாப்பு.இதனால் நமது மன நிலை தான் பாதிக்கப்படுகிறது.நாம் பார்த்தது ஒரிஜினலா,டூப்ளிகேட்டா? என.
ஒரு சீனில் மல்லிகா முழு நிர்வாணமாக தெரு விளக்கில் ஏறுகிறார்.அங்கேயே படுத்துக்கொள்கிறார்.அந்த சீன் எதற்கு என்றே தெரியவில்லை.எந்தப்பாம்பு தெரு விளக்கில் படுக்கிறது?அந்தக்காட்சியில் வேணா டூப் நடிகைதான்,எப்படின்னாஅவ்வளவு ஹைட்டில் அவர் எப்படி ஏற முடியும்?
முதன்முதலாக மல்லிகா சேலை கட்டும் காட்சியில் ஹீரோவின் மனைவி “ஏம்மா,நீ சேலை கட்டுனதே இல்லையா?”என கேட்கையில் தியேட்டரில் விசில் பறக்கிறது.ஆனால் சீன் வரும் காட்சிகளில் மட்டும் அதுவரை கமெண்ட் அடித்தவர்கள் நிசப்தமாக பார்ப்பது ஏனோ?
சில பளிச் வசனங்கள்
1. போலீஸ் ஆஃபீசர் தன் பி ஏ விடம் - நீ என்னை விட புத்திசாலியா இருக்கே,அடிக்கடி நீ புத்திசாலின்னு நிரூபிச்சுட்டே இருக்கே,அதனால் நான் ரிசைன் பண்ணிடறேன்,நீ இந்த கொலை கேசை எடுத்து நடத்து.
2. நமக்கு ஒரு குழந்தை வேணும்னு எங்கம்மா கேட்டுட்டே இருக்காங்க.
உங்கம்மா பைத்தியம்கறே,ஆனா இந்த மேட்டர்ல மட்டும் ரொம்பத்தெளிவா இருக்காங்க.
3. இந்த கேஸ்ல ஏதோ சூப்பர் நேச்சுரல் பவர் சம்பந்தப்பட்டிருக்கு.
சாரி,சார்.நான் கண்ணுக்குத்தெரியறதை மட்டும்தான் நம்புவேன்.
4.சார்,என்னை அல்ப சொல்பமா நினைச்சுடாதீங்க.நான் ஜெகாவோட மச்சான்.
ஓ,நீ அந்த திருட்டுப்பயலோட மச்சானா?ஜாக்கிரதையா இருந்துக்கனும்.
5.உங்க ஃபேம்லி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சார்.
உனக்கும் இதே மாதிரி ஃபேமிலி கிடைக்க வாழ்த்துக்கள்
அய்யய்யோ,லூஸ் மாமியா,டார்ச்சர் ஒயிஃப் வேணாம் சார்,சும்ம ஒரு பேச்சுக்கு சொன்னேன்.
படத்தில் அடிக்கடி வந்து போகும் அபத்தமான வசனங்களில் ஒன்று
கேன்சர் வந்தவங்க யார் எது சொன்னாலும் நம்பிடுவாங்க.
இது எப்படின்னா சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் எனும் வடிவேல் காமெடி டயலாக் மாதிரி.
ஒளிப்பதிவாளர் பல இடங்களில் உள்ளேன் ஐயா சொல்கிறார்.குறிப்பாக டாப் ஆங்கிளில் ஒரு பஸ் போகும்போது மழையில் நனைந்தபடி ஒரு ஆள் ஏறும் சீன் அட போட வைக்கிறது.
மிகவும் விறு விறுப்பாக வந்திருக்க வேண்டிய பாம்பாட்டி,நாகதேவதை,போலீஸ் ஆஃபீசர் சேசிங்க் சீன்டைரக்டரின் திறமைக்குறைவால் சப் என முடிந்து போகிறது.
அதே போல் மல்லிகா (நாக தேவதை) பாம்புடன் சல்லாபிக்கும் காட்சியில் லாஸ்ட் எம்ப்பயர் படம் போல் முயற்சி செய்திருக்கிறார்கள் .எடுபடவில்லை.அதற்குப்பதில் த ஸ்பீசஸ் படத்தில் வருவதுபோல் அந்தப்பாம்பு ஆண் வடிவம் கொண்டு மல்லிகாவுடன் ஜல்சா பண்ணுவது மாதிரி எடுத்திருந்தால் இன்னும் கிளு கிளுப்பாக இருந்திருக்கும்.
வில்லனாக வருபவரின் நடிப்பு அருமை.கிராஃபிக்ஸ் காட்சிகள் குழந்தைத்தனமாக இருப்பது பெரிய பலவீனம்.சீனுக்காக பார்த்து தொலைக்கலாம்.