கதை என்னன்னு எல்லாம் நான் கேக்க மாட்டேன் படம் ஜாலியா இருந்தா சரிதான் என்பவரா நீங்கள்,அப்போ படம் உங்களுக்காகத்தான் ...
சவுதி அரேபியா செல்லப்போகும் சிவா அங்கே சரக்கு கிடைக்காது என்பதால் (சவுதி அரேபியாவில் சரக்குக்கு தடையாம் -தகவல் ராம்சாமி)
கடைசி கடைசியாக தமிழ்நாட்டில் ஒரு குவாட்டர் அடிக்க ஆசைப்படுகிறார்.(ஆஹா,என்னே ஒரு நாட்டுப்பற்று).அதற்காக அவர் படும் கஷ்டங்கள்,பயண அனுபவங்கள்,(ஆமா,இவரு பெரிய இதயம் பேசுகிறது மணியன்..)இவற்றை காமெடியாக சொல்லி இருக்கிறார்கள்.தேர்தல் நடக்கும் நாள் என்பதால் சரக்குக்கு தடை போட்ட நாளில் கதை நடப்பதாக சொல்லி இருப்பது சுவராஷ்யம்.
சிவாவுக்கு பொருத்தமான வேடம்.தமிழ்ப்படம் போலவே இதிலும் கலய்க்கும் கேரக்டர்.விஜய் ரசிகர் என்ற போர்வையில் தன் நெஞ்சில் சுறா என பச்சை குத்திக்கொண்டு இவர் பண்ணும் லூட்டிகள் கலக்கல் ரகம் தான்.ஆனால்.........
இயக்குநரை 3 விஷயங்களுக்காக தாராளமாக பாராட்டலாம்.
1.படம் முழுக்க ரெண்டே கால் மணி நேரம் ஒரே ஒரு இரவில் நடக்கும்படி திரைக்கதை அமைத்தது.
2.வழக்கமாக தமிழ்ப்படங்களில் வரும் க்ளிஷே காட்சிகள் எதுவும் இல்லாமல்,எந்த வித செண்ட்டிமெண்ட்டும் இல்லாமல் காமெடி என்ற ஒரே ஒரு இலக்கை நோக்கி கதை பயணிக்க வைத்தது.
3.ஒளிப்பதிவில் ஜால வித்தை எல்லாம் செய்யாமல் நார்மலாக கதை எவ்வளவு அனுமதிக்குமோ அந்த அளவு மட்டும் லைட் ஷேடோவில் மொத்த படத்தையும் எடுத்த துணிச்சல்.
அட
எஸ் பி பி சரண் காமெடி நடிப்பில் ஷிவாவுக்கு இணையாக அதகளம் பண்ணுகிறார்.வசனங்களை கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் .சட் சட் என கட்சி மாறும் அரசியல்வாதிகள் போல் ஷாட் டக் டக் என மாறுகிறது.
ஹீரோயின் தற்கொலைக்கு முயல்வதைக்கூட காமெடியாக சொல்லி இருப்பது படத்துக்கு பிளஸ்.அவருக்கு ஹீரோ உடன் காதல் ஏற்பட்டதா ,இல்லையா என்பதை கடைசி வரை சரியாக சொல்லாதது ஒரு வகைடில் தேவலை.டூயட் காட்சிகள் இல்லை,அப்பாடா...
படத்தை பார்த்து விமர்சகர்கள் படத்தில் கதை இல்லை என்று சொல்வார்கள் என டைரக்டருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.அதனால்தான் அவர்களுக்கு பதிலடி கொடு[பது மாதிரி ஒரு டயலாக் வைத்திருக்கிறார். ”இதுல மெசேஜ் என்ன? ஏண்டா மெசேஜ் மெசேஜ்னு அலையறீங்க?”
அட
படத்தில் 4 பாடல் காட்சிகள் வந்தாலும் நான்கிலும் தனது ரசனையை காண்பித்து அனைத்து பாடல்களையும் அதே இரவு ஷேடில் எடுத்து இருக்கிறார்.
ஒரு பாடல் காட்சியில் 1/4 என்ற எண்ணை (குவாட்டர்) எப்படி எல்லாம் யூஸ் பண்ண முடியும் என காட்சிப்படுத்தி பிரம்மிக்க வைக்கிறார்.அவர் அபாரமான க்ரியேட்டிவ் மைண்ட் உள்ளவர் என்பதற்கு அந்த ஒரு பாடல் காட்சியே போதும்.
தமிழ் சினிமாவில் பாம்பை வைத்து பயப்படும் காட்சியும்,நாய் துரத்தும் காமெடியும் எப்போதும் சிரஞ்சீவித்தனம் பெற்றவை.இயக்குனர் இந்தப்படத்தில் நாய் துரத்தும் காமெடியை நம்பி இருக்கிறார்.
படத்தில் மின்னல் போல் மின்னி மறையும் காமெடி டயலாக்ஸ்:
1. நாங்க போலீஸ் இல்லை சொன்னா நம்பு,நாங்க அக்யூஸ்ட்.(குற்றவாளி)
நீ தாடி வெச்சிருக்கே ,அக்யூஸ்ட்னு நம்பலாம் ,அவரு தொப்பை வெச்சிருக்காரே,போலீஸ்தானே அதை வெச்சிருப்பாங்க.?
2. டே,குள்ளா,எரிச்சலை கிளப்பாதே,அந்த மீன் கூட உன்னை விட உயரமா இருக்கும்.
3. என்னை எதிர்த்தா உனக்கு கட்டிங்க் கிடைக்காது.
டே,நாயே,நீயே பாக்க கட்டிங்க் மாதிரிதான் இருக்கே.
4. என்ன ,உங்க கைல சிகரெட்?நீங்க தம் அடிப்பீங்களா?
உங்களுக்கு பிடிக்கலைன்னா தூக்கிப்போட்டுடறேன்.
பேடு ஹேபிட்...கொண்டாங்க அதை,நான் அடிக்கறேன் கொஞ்சம்...
5. என்னது ,இந்தாளுக்கு இது மேலே போற வயசில்லையா?யோவ்,இந்தாளு க்கு 3 வருஷத்துக்கு முன்னாலயே 300 வயசு இருக்கும் போல இருக்கு...
6. எங்க கட்சி கூட்டத்துக்கு வந்தா குவாட்டர் சரக்கும் ,மட்டன் பிரியாணியும் இலவசம்.
சார்,கேக்கெறேனேன்னு தப்பா நினைக்காதீங்க,நான் சைவம் எனக்கு மட்டும் சைவ பிரியாணி கிடைக்குமா?
யோவ் நான் என்ன அய்யரா,அரசியல்வாதிய்யா...
நீங்க நல்லவரா?கெட்டவரா?
நல்லவனா இருந்தா எதுக்கு குவாட்டர் குடுத்து ஓட்டு கேக்கறேன்....
7. என்ன குவாட்டர் வாங்க இவ்வளவு கூட்டம்?இருங்க ஒரு ஐடியா பண்றேன்,யோவ் பாம் பாம்
சீக்கிரம் சரக்கு குடுங்கய்யா,பாம் வெடிக்கப்போகுதாம்
அடப்பாவிங்களா,பாமே வெடிச்சாலும் இவங்க கலைய மாட்டாங்க போல இருக்கே,...
8. உனக்கு ரொம்ப பேடு டேஸ்ட்டுப்பா
டேஸ்ட்டைப்பற்றி நீங்க பேசறீங்களா?இந்த பேண்ட்,பெல்ட்,சர்ட் 3ம் 3 வெவ்வேற மொட்டை மாடில இருந்து திருடுன மாதிரி இருக்கு....
9.ஒரு ஃபோன் போட்டா என்ன ஆகும்னு தெரியுமா?உன் வேலையே காலி ஆகிடும்.ஆனா நான் ஃபோன் போட மாட்டேன்,ஏன் தெரியுமா?நீ நல்லவனாட்டம் இருக்கே,அவ் அவ் அ வ்
10. நீ இதை திருடிட்டு வந்தியா?
ஏன்பா கேவலப்படுத்தறே?சுட்டதுனு கவுரமா சொல்லு.
11. சும்மா சமஞ்ச பொண்ணு மாதிரி வெக்கப்படாதே,...
12. அடே,4 பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை.
யார் அந்த நாலு பேரு? நீ,நான்,மறுபடி நீ ,அப்புறம் நான்,நீ நாயகன் பாக்கல?
13.நீங்க பாக்க காலி சிலிண்டர் மாதிரி இருக்கீங்க,ஆனா தூக்கறப்ப 5 சிலிண்டர் வெயிட் இருக்கீங்க...
14. ஹே ,கேர்ள்ஸ் என்ன 2 பேரும் பாக்க ஒரே மாதிரி இருக்கீங்க?
நாங்க ட்வின்ஸ் (இரட்டை சகோதரிகள்)
ஓஹோ,எது செஞ்சாலும் 2 பேரும் சேர்ந்தேதான் செய்வீங்களோ?( ஏ ஜோக்)
15. சுடுகாட்ல ஏது இத்தனை பைக்?ஒருவேளை செத்துப்போனவங்களுதா இருக்குமோ?
16. நாங்க 2 பேரும் பிரதர்ஸ் இவன் பேரு வெட்டு,என் பேரு குத்து.இவன் 100 பேரை வெட்டி இருக்கான்....நான்....
சொல்லாதீங்க,நான் சொல்றேன் நீங்க 100 பேரை குத்தி இருக்கீங்க சரியா?
ம்ஹூம்,அவன் வெட்டுனதும் பாடி பக்கத்துல நின்னு குத்தாட்டம் போடுவேன்.
17. என்னைப்பற்றி உனக்குத்தெரியாது,பொள்ளாச்சி பக்கம் வந்து என்னைப்பற்றி கேட்டுப்பாருங்க.
யோவ்,க்ளைமாக்ஸ் நெருங்கிடுச்சு,இதுக்காக அவ்வளவு தூரம் நான் வர முடியுமா?
சரி,மறுபடி டைம் கிடைக்கறப்ப வாங்க.
18. உனக்கு சீட்டு ஆடத்தெரியுமா?
ஓஹோஹோ,எங்க ஊர் பசங்களுக்கு ஏ பி சி டி தெரியுதோ இல்லையோ ஏஸ்,ஜாக்கி ,கிங்க் இதெல்லாம் நல்லாவே தெரியும்.
19. வில்லன் சார்,நீங்க ஆள் தான் பாக்க காமெடி பீஸா இருக்கீங்க,ஆனா நீங்க சொல்றது ஒண்ணு கூட காமெடியாவே இல்லை.
20.அவன் கிட்டே இருந்து ஓடி தப்பிக்கறதை விட செல்ஃப் சூசயிடு பண்ணிக்கலாம். யோவ் தற்கொலைல என்ன செல்ஃப்?
21.ஏம்மா ஹீரோயின்,தற்கொலை பண்னிக்கப்போறப்ப எதுக்கும்மா உன் ஸ்கூல் யூனிஃபார்மோட இருக்கே?
ம்,என் ஸ்கூல் பேரைக்கெடுக்கத்தான்.
22. அதென்னய்யா உம்மா கோல்டு? அதாங்க கவரிங்க்.
23. எனக்கு அனிமல்ஸ்னா ரொம்ப பிடிக்கும்
நிஜமாவா,நீ புளூ கிராஸா?
அதெல்லமில்லை,மட்டன் சிக்கன் நல்ல சாப்பிடுவேன்.
24. இங்கே ஏன் படுத்திருக்கே? சூசயிடு பண்ணிக்க
இது டிராஃபிக் இல்லாத ரோடு ,நோ யூஸ் ,எந்திரிச்சு வா மெயின் ரோட்ல டிராப் பண்றேன்
25. நான் ஒரு தத்துவம் சொல்றேன் எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க.
தீஞ்சு போறதுக்கு முன்னே தோசையை திருப்பு.
ஓய்ஞ்சு போறதுக்கு முன்னே ஆசையை விருப்பு.
26. ஏ பொண்ணு என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறே?
நீ10வது ஃபெயில்,உன்னை மேரேஜ் பண்ணிக்கிட்டா படிக்கவே தேவை இல்லையே?
27. உன்னை வெட்டனும்.
வேணாங்க ,விட்ருங்க,அப்படி வெட்டனும்னு ஆசையா இருந்தா என் நகத்தை வேணா வெட்டுங்க.
படத்தில் உள்ள மைனஸ் என்னன்னா லேடீஸ்,குழந்தைகள் பாக்கவே முடியாது.புதுமை விரும்பிகள்,குடி மகன்கள் பாக்கலாம்.அப்போ குடி மகன்கள் புதுமை விரும்பிகளானு கேக்கக்கூடாது,அடுத்த முறை படம் எடுக்கையில் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மாதிரி படம் எடுப்பார் என நம்பலாம்.ஏன் எனில் அந்தளவுக்கு சரக்கு டைரக்டரிடம் நிறையவே இருக்கு. (மறுபடியும் சரக்கா?)
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் 44
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் நன்று
ஏ சென்ட்டர்களில் 75 நாட்கள் ,பி செண்ட்டர்களில் 40 நாட்கள் ,சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடலாம்