1. பெண்கள் ஏன் அதிகமா அரசியலுக்கு வர்றதில்லை?
அவங்களுக்கு ஆண்களை ஆட்டி வெச்சுதான் பழக்கம். ஓட்டு கேட்டு பழக்கமில்லை.
2. தலைவருக்குத்தான் படிக்கவே தெரியாதே, எதுக்கு லைப்ரரி போறாரு?
கன்னி மாரா லைப்ரரி-னா ஏகப்பட்ட கன்னிங்க வருவாங்க-னு நினைச்சுட்டார்.
3. மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதில் எங்கள் கட்சிக்கே முதலிடம்-னு தலைவர் சொல்றாரே?
ஆமா... நைட் டைம்ல கரண்ட்டே இருக்கறதில்லை. எவனும் தூங்க முடியறதில்லை.
4. தலைவரே! நம்ம கட்சில இருக்கற 16 எம்.எல்.ஏ. க்களுக்கும் மகளிர் அணித்தலைவியோட ஃபேஸ்கட் பிடிக்கலையாம்.
ஓஹோ... அதிருப்தி எம்.எல்.ஏ. க்கள் இந்த ரூபத்திலும் உருவாகறாங்களா?
5. தலைவருக்கு எப்பவும் கட்சி ஞாபகம்தான் -னு எப்படி சொல்றே?
தலைவரோட சம்சாரம் ஒரு குழந்தை வேணும்-னு கேட்டதுக்குக்கூட அதைப்பத்தி நான் எதுவும் கருத்துக்கூற முடியாது, கட்சி மேலிடம்தான் முடிவு பண்ணனும்கறாரே?
6. “அத்தான்... உங்க மேல எனக்கு நம்பிக்கையே போயிடுச்சு...”
“வேணும்னா நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தலாமா? உன் 3 தங்கைகளும் எனக்கு ஆதராவாதான் ஓட்டு போடுவாங்க.
7. தலைவரே! கடல் படைக்கு நடத்தற எக்ஸாம்ல கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிடுச்சாமே?
இதுக்கு ஏன் பதட்டப்படறீங்க? ஆன்சர் பேப்பர் அவுட் ஆகலையே?
8. தலைவர் ஏன் மூடு அவுட்டா இருக்காரு?
அகில உலக அரசியல் பேதை விருது அவருக்கு தந்துட்டாங்களாம்.
9. தலைவருக்கும், மகளிர் அணித்தலைவிக்கும் இடையே கோல்டுவார் நடக்குதாமே?
ஆமா, உடனடியா 10 பவுன்ல செயின் பண்ணிப்போட்டே ஆகனுமாம். GOLD WAR.
10. இந்தில கவர்ச்சியா நடிக்கத் தயார்-னு அந்த நடிகை சொல்றாங்களே?
இதுலயும் தமிழன் ஏமாற்றப்படுகிறானா? அய்யகோ!
11. எதெதுக்குத்தான் விசாரணைக் கமிஷன் வைக்கறதுன்னு ஒரு விவஸ்தை இல்லாம போச்சு.
ஏன்?
எனக்கு ஏன் எந்த கொலைமிரட்டலும் லெட்டரும் வர்லை?-னு கேட்டு விசாரணை கோரியிருக்காரு தலைவரு.
12. பவித்ரன் சிட்டிசப்ஜெக்ட் பண்ணுனா என்ன டைட்டில் வைப்பாரு?
மாட்டு மிடி.
13. தலைவரோட வீட்ல மைனாரிட்டி ஆட்சி நடக்குதுனு எப்படி சொல்றே?
தலைவரோட சின்ன விட்டுக்கு 16 வயசுதான் ஆகுதாம்.
14. தலைவருக்கு குழந்தை மனசு.
அதுக்காக, எனக்கு ஓட்டு போட்டா எல்லாருக்கும் ஒரு பலூன் வாங்கித்தருவேன்னு வாக்கு தர்றதா?
15. தீபாவளிப் படங்கள் எதுவும் அசத்தல-னு எப்படி சொல்றே?
அசல் தல படம் மங்காத்தா ரிலீஸ் இல்லையே?
16. தலைவர் தீபாவளிக்கு பட்டாசு வெடிச்சு நான் பார்த்ததே இல்லையே?
அவருக்கு மத்தவங்க பதவிக்கு வேட்டு வெச்சுத்தான் பழக்கமாம்.
டிஸ்கி 1 - முதல் ஸ்டில் ஊலலலா படம்,ஹீரோயின் சிரிப்பு வராமல் சிரிக்கிறார்,அநேகமாக இந்தப்படத்துக்கு சம்பளம் இன்னும் தந்திருக்க மாட்டார் டைரக்டர்.
டிஸ்கி 2 :-ரெண்டாவது ஸ்டில்லும் அதே படம்.பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடும் என நினைக்குமாம்,காதலர்கள் கண்ணை மூடினால்...? (உடம்பையும் நல்லா கவர் பண்ணி மூடினா தேவலை)
இப்பவெல்லாம் ஹீரோக்கள் நாய் மாதிரி ஹீரோயினை மோப்பம் பிடிக்கறாங்க,ஏன்னு தெரியல.