Monday, October 25, 2010

தலைவர்கிட்டயே தகராறா?


1.  தலைவரே! சி.பி.ஐ  மத்திய அரசின்  கைப்பாவையா  செயல்படுதுனு சொன்னீங்களாமே?

பொய்...  கோயில்களில்  திருப்பாவை  பாடப்  பட வேண்டும்னுதான் சொன்னேன்.


2.  தலைவர் கட்சில  இருக்கற  மகளிர்  அணித்தலைவிக்கு  நூல்  விடறாரே?

நடமாடும்  நூலகம்-னு  இந்த அர்த்தத்துலதான்  பாராட்னாங்களா?




3.  காஷ்மீர்  இந்தியாவுடன்  இணையவில்லை  அப்டி-னு  ஏன்  தலைவரே சொன்னீங்க?  பெரிய  பிரச்சனை ஆகிடுச்சு.

நயன்தாரா காஷ்மீர்  ஆப்பிள்  மாதிரி  இருக்காங்க.  இந்தியாவின்  மைக்கேல் ஜாக்‌ஷன்  பிரபுதேவா,  இவங்க  இரண்டு பேரும்  இணையலை-னுதான் சொன்னேன்-னு  பிளேட்டை திருப்பிபோட்ரலாம்!

4.  வாரிசு  இல்லை-னு  தலைவர்  வருத்தப்படறாரே?

அதுவும்  நல்லதுக்குத்தான்.  2, 3 வாரிசு இருந்தா வாரிசு  உரிமைப்  பிரச்சனையும்  வரும்.

5.  ஊழல்  கடவுள்  மாதிரி-னு  எப்படி  சொல்றீங்க  தலைவரே?

தூணிலும்  இருக்கும்,  துரும்பிலும்  இருக்கும்;   கண்ணுக்குத்  தெரியாது,  நீக்கமற  நிறைந்திருக்கும்.


6.  இதுதான்  என்  கடைசி  தேர்தல்,  மறக்காம  எனக்கு  ஓட்டுப்  போடுங்க.

போங்க  தலைவரே!  25  வருஷமா  இதையேதான்  சொல்றீங்க?  எங்கே  ரிடையர்  ஆகறீங்க?


7.  டான்ஸ்  போட்டில  வெற்றியும்,  தோல்வியும்  ஒண்ணுதான்.

எப்படி  சொல்றே?

டான்ஸ்  போட்டில  கலந்துக்கிட்றவங்க  ஜெய்ச்சாலும்,  தோத்தாலும்  அழறாங்களே?


8.  தமிழ்-ல  டைட்டில்  வெச்சாதான்  வரிவிலக்கு-னு  சொல்லியிருக்காங்க.  ஆனா  நீங்க  ஆங்கில  வார்த்தைல  டைட்டில்  வெச்சிருக்கீங்களே?

அதையும்  தமிழ்  எழுத்துல  தானே  வெச்சிருக்கோம்-னு  சொல்லி  குழப்பி  விட்ரலாம்.  டோண்ட்  ஒர்ரி.


9.  தலைவரே!  மத்திய  அரசின்  திட்டங்களை  எல்லாம்  மாநில  அரசின்  திட்டங்கள்-னு  விளம்பரம்  பண்றீங்களாமே?

“அவங்களுது, எங்களுது-னு  பிரிச்சுப்  பேசறது  எனக்குப்  பிடிக்காது”


10.  தலைவரே!  உங்க  பண்ணை  வீட்ல  ரெய்டு  வரப்போவுதாம்.

சரி, சரி,  மகளிர்  அணித்தலைவியை  கிளம்பச்  சொல்லு.


11.  டைரக்டர்:  மேடம், எங்க  படத்துல  கௌரவத்  தோற்றத்துல  ஒரு  சீன்ல  நடிக்கனும்.

நடிகை:  ஓ.கே.  என்ன  கேரக்டர்?

டைரக்டர்:  கேபரே  டான்சர்.


12.  தலைவருக்கு  நீலம்தான்  ராசியான  நிறமாம்.

ஓஹோ...  அதான்  அடிக்கடி  புளூஃபிலிம்  பார்க்கறாரா?


13.  தலைவர்  புளூகிராஸ்  மெம்பராம்.

அதுக்காக  வெட்னரி  டாக்டர்  பட்டம்தான்  வேணும்னு  அடம்  பிடிச்சா  எப்படி?


14.  டாக்டர்  ஆபரேஷன்  தியேட்டருக்குள்ளே  போறதை  இரண்டு  பேர்  தடுக்கறாங்களே,  யாரு?

பேஷண்ட்  போட்ட  இன்சூரன்ஸ்  கம்பெனி  ஆஃபீசர்ஸாம்.


15.  தலைவரே!  எங்க  கட்சிக்கு  இன்னும்  3  சீட்  வேணும்.

இன்னும்  வேணுமா?  இலங்கைல  போட்டி  இடறீங்களா?


16.  இலைங்கை  அகதிகளுக்கு  இங்கே  ஓட்டுரிமை  இருக்கா?-னு  தலைவர்  விசாரிக்கராரே,  ஏன்?

அவங்களுக்கு  ஆதரவா  பேசலாமா?-னு  முடிவு  பண்ணத்தான்.