Friday, October 22, 2010

ஓ,தமிழர்களே,தமிழர்களே !

1. மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேச்சு: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்த முடியாத திட்டங்களையெல்லாம் கருணாநிதி செயல்படுத்தி வருவதுடன், சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். திட்டங்களின் பயன்களை மக்கள் அனுபவிக்கின்றனர். இந்த சாதனைகளே தமிழகத்தில் மீண்டும் தி.மு.க.,வை ஆட்சியில் அமர வைக்கும்.


நையாண்டி நாரதர் - அப்போ தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்த முடியாதுன்னு சொல்றீங்களா?


2. மத்திய நிதித்துறை செயலர் கோபாலன் பேட்டி: கடன் திட்டங்கள் கடைசி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். கூட்டுறவு வங்கிகள் போன்ற சிறிய வங்கிகளில் கடன் வழங்க விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளன. வங்கிகளும் ஏமாறக் கூடாது. வங்கிச் சேவைக்காக மக்களும் அலையக் கூடாது.

 நையாண்டி நாரதர் - எங்கே? லோன் தர்றதுக்கு பேங்க் மேனேஜர் லோ லோனு அலைய வைக்கிறார்,லோன் வாங்கின பிறகு அதைக்கட்டாம பொதுஜனம் அலைவைக்குது,பதிலுக்கு பதில்.

3.  பத்திரிகை செய்தி: விரைவில் நடக்கவுள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கான தேர்வு எழுதுவதற்காக, டாஸ்மாக் கடையில் பணிபுரியும் 70 சதவீத ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனால், தேர்வு நாளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


நையாண்டி நாரதர்  - டாஸ்மாக்லயே தினம் ரூ 2000 சம்பாதிக்கலாமே,தண்ணீர் கலந்து சரக்கு விக்கலாமே,அதுக்கும் மேலயா வி ஏ ஓ ல வருமானம் வந்துடப்போவுது?


4.  மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி: பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்களில் எட்டு மணி நேரம் மின் வெட்டு நிலவுகிறது. தலைநகர் டில்லியில் அதற்கும் அதிகமாக மின் வெட்டு உள்ளது. மற்ற நகரங்களில் நிலவும் மின்வெட்டை விட, தமிழகத்தில் மின்வெட்டு குறைவு தான்.


நையாண்டி நாரதர் - ஆம்,மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மக்களுக்கு சொரணை கம்மிதான்,இல்லாவிட்டால் திருப்பி திருப்பி தி மு க, அ ,தி மு க என 2 கட்சிக்கும் மாற்றி மாற்றி சான்ஸ் குடுக்குமா?அது இருக்கட்டும் குஜராத் மாநிலத்தில் மின் வெட்டே கிடையாது,அதை  உதாரணமா சொல்ல்லாமே?





5. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: பணக்காரர்களுக்கு கிடைக்கும் கல்வி, ஏழை மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் என் லட்சியம். கட்டாயக் கல்வி, கட்டணம் இல்லா கல்வி, சுமை இல்லா கல்வி, விளையாட்டுடன் கூடிய கல்வி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது என் ஆசை.

 நையாண்டி நாரதர் -உங்க லட்சியம் அதுதான்னா ஏன் கட்சி நடத்தறீங்க? அதை கலைச்சுட்டு சமூக சேவை அல்லது தொண்டு நிறுவனம் நடத்தலாமே?


6. அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன் பேச்சு : அரிசி கடத்தல், கொலை, கொள்ளை அன்றாட நிகழ்வு ஆகிவிட்டது. ஜெயலலிதா ஆட்சியில் ஸ்காட்லாந்து யார்டு போலீசிற்கு நிகராக இருந்த தமிழக போலீஸ், கருணாநிதி ஆட்சியில் கட்டப் பஞ்சாயத்து போலீசாக மாறிவிட்டது.

  நையாண்டி நாரதர் - மணல் கடத்தல் பற்றி சொல்லவே இல்லையே,உங்களுக்கும் பங்கு வந்துடுதா?





7. முதல்வர் கருணாநிதி: ஜனநாயகத்தில் யாரும், எந்தப் பொருள் பற்றியும் பேசலாம்; எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பவர்களைப் பற்றியும் குறை கூறலாம்; குற்றஞ்சாட்டலாம்; அதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தை இன்று நேற்றல்ல, அண்ணா காலத்திலிருந்தே நாம் பின்பற்றி வருகிறோம்.

 நையாண்டி நாரதர் - தலைவரே,இந்த காமெடிதானே வேணாம்கறது,ஆ ராசா பற்றியோ,அழகிரி பற்றியோ பேசுனா உங்களுக்கே கோபம் வந்துடுது.

 8.




Manthira punnagai audio launch
பொது விழாக்களுக்கு கவர்ச்சி உடையணிந்து வருவதையே எழுதப்படாத பாலிஸியாக வைத்துக் கொண்டு செயல்படும் நடிகைகளில் முக்கியமானவர் மீனாட்சி. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் பாவாடை தாவணியில் தோன்றி அசத்திய மீனாட்சியா இது? என்று முகம் சுழித்து கேட்கும் அளவுக்கு திரையில் தோன்றும் மீனாட்சி, அதைவிட மோசமான ஆடைகளையே பொது விழாக்களுக்கும் அணிந்து வருவார். அப்படி வரும் நடிகைகள் கண்ணை திறக்க முடியாத அளவுக்கு பிளாஷ் மழை பொழியும்.



அப்படியொரு பிளாஷ் மழை நடிகை மீனாட்சியின் மீது பொழிந்தது. அவர் நாயகியாக நடித்திருக்கும் மந்திர புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அத்த‌னை ‌பேரையுமே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் சிக்கென்ற ஆடையுடன் வந்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்த்திபன் தனக்கே உரிய நையாண்டியுடன் மீனாட்சியைப் பற்றி ஏ‌டாகூடமான கமெண்ட் அடித்தார். பார்த்திபன் பேசுகையில், போட்டோகிராபர்களுக்கு மீனாட்சியின் கால் ஷீட் கிடைச்சிருச்சு, என்ற கமெண்ட் அடித்தபோது ஒட்டுமொத்த கூட்டமும் சிரிக்க, அவர்கள் சிரிப்பது தன்னைப் பார்த்துதான் என்பதுகூட புரியாமல் கன்னத்தில் கை வைத்திருந்தார் மீனாட்சி.

 நையாண்டி நாரதர் - மீனாட்சி மீனாட்சி தமிழ்க்கலாச்சாரம் என்னாச்சி?

9.
Poorna turns out as Glamour babe
பூர்ணா இப்போது ரொம்ப பிசி. அவரது மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. டைட்டாக இருக்கிறதாம் கால்ஷீட். கை நிறைய படங்களுடன் நடித்துக் கொண்டிருக்கும் பூர்ணா, கவர்ச்சிப் பாதையிலும் படு க்ளாமரமாக இறங்கி விட்டார். நரன் படத்தில் மிதமிஞ்சிய கவர்ச்சிக்கு பச்சைக் கொடி காட்டியுள்ள பூர்ணா, மலையாளத்தில் எடுக்கப்படும் மகரு மன்னே என்ற படத்திலும் கவர்ச்சிகரமாக கலக்கியுள்ளாராம்.இப்படத்தின் ஹீரோ சந்தோஷ் சிவன். ஒளிப்பதிவாளரான இவர் இயக்குநராக மாறி உருமி என்ற படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கியுள்ளார்.
நையாண்டி நாரதர் - இதுல தமிழ் ரசிகர்களுக்கு பரி பூரண சம்மதமாம்,மிஸ் பூர்ணா


10 . இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தயார்  - த்ரிஷா

 நையாண்டி நாரதர் - ஓஹோ,தமிழர்கள் இளிச்சவாயர்கள்னு அரசியல்வாதிகள்தான் முடிவு கட்டீட்டாங்கன்னா நீங்களுமா?