Thursday, October 21, 2010

சினிமா,சிரிமா,கில்மா - ஜோக்ஸ்



1.சாந்தி அப்புறம் நித்யா படம் ஏன் இன்னும் ரிலீஸ் ஆகலை?

எல்லாம் சென்சார் பிராப்ளம்தான்.


ஓஹோ,சென்சார்ல யூ சர்ட்டிஃபிகேட் தர்லைனு சொல்லிட்டாங்களா?

அட நீ வேற,டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஏ சர்ட்டிஃபிகேட்தான் வேணும்னு அடம் பிடிக்கறாங்களாம்,அப்பதான் 4 காசு பாக்க முடியுமாம்.


2.காவலன்,வேலாயுதம் - எது முதல்ல வரும்?

இது என்ன கேள்வி? ஒற்றைத்தலைவலி,ரெட்டைத்தலைவலி ரெண்டுல எது முதல்ல வந்தா என்ன?

3. சூர்யா மலையாளப்படத்துல நடிச்சா ராம்கோபால் வர்மா என்ன டைட்டில் வைப்பாரு?

அத்த சரித்திரம் (அத்த =அத்தை என பொருள் கொள்க)


4. ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவுல விஜய் ஏன் வெளிநடப்பு பண்ணீட்டாரு?

அவருக்கு பெஸ்ட் காமெடி ஆக்டர் அவார்டு குடுத்துட்டாங்களாம்.



5.மைனா படம் கலைஞர் குடும்ப படம்தானே,ஏன் வரி விலக்கு தர்லை?


மைனாரிட்டி அரசுன்னு நக்கல் பண்ற மாதிரி இருக்குன்னு கலைஞர் கடுப்பாகிட்டாராம்.




6. உங்காளு அடுத்த படத்துக்கு மங்காத்தானு டைட்டில் வெச்சிருக்காரே,?அந்த படத்துல சீட்டாடறவரா வர்றாரா?

சீட்டாடுனா தப்பில்லை,உங்காளு மாதிரி மொக்கை படத்தை சூப்பர் படம்னு சீட்டிங்க் பண்ணுனாத்தான் தப்பு.


7.தீபாவளிக்கு ரிலீஸ் ஆகற பிரசாந்த்தோட மம்பட்டியான் படம் அப்படியே தியாகராஜனோட மலையூர் மம்பட்டியானோட டிட்டோவாமே?

கதை,திரைக்கதை அதே மாதிரி இருந்தாக்கூட சமாளிச்சு பார்த்துடலாம்,ஜோடியும் அதே மாதிரி சரிதாவா இருந்துட்டா...?



8.டி ராஜேந்த்ரின் அடுத்த படம் அஜித் - ஷாலினியோட லவ் ஸ்டோரியாமே?

என்ன உளர்றே?

படத்தோட டைட்டில் ஒரு தலைக்காதல்னு சொன்னாங்க.அதான் கேட்டேன்.

9.இந்த வருஷ தீபாவளியை தலைவலி இல்லாம கொண்டாடலாம்னு எப்படி சொல்றே?

இளைய தளபதி படமோ,கேப்டன் படமோ ரிலீஸ் ஆகலையே?

10. ஆனந்த விகடன்ல விஜய் பேட்டி பாத்தியா?ஜெயலலிதாவை நான் சந்தித்த நிமிடங்கள்  பரவசமடைந்தேன் அப்படின்னு சொல்லி இருக்கிறாரே?
இவரு பரவசமடைஞ்சாரு,ஓக்கே,அந்தம்மா என்ன ஃபீல் பண்ணாங்கன்னு நீ கேக்கலையே?(மச்சி நீ கேளேன்,மாம்ஸ் நீ கேளேன்)


டிஸ்கி -1   : முதல் ஸ்டில் மைனா படத்தில் வரும் மைனா (பார்ட்டியின் நெற்றியில்,கன்னத்தில் ஓவர் பருக்கள் இருப்பதை பார்த்தால் டீச்சராக குப்பை கொட்டி இருப்பார் போல.ஏன்னா டீச்சருங்க சாக்பீஸ்ல போர்டுல எழுதறப்ப நெற்றில,முகத்துல சாக் தூள் விழுந்து அலர்ஜி ஆகி அப்படி ஆகுமாம்.)

டிஸ்கி - 2  :  ரெண்டாவது ஸ்டில் ஆண்மை தவறேல்.படத்தோட டைரக்டரை நான் கேக்கறேன்,பட டைட்டில்ல ஆண்மை இருக்கு ஓகே ,படத்தோட ஹீரோவுக்கு ஆண்மையின் அடையாளமா மீசை இல்லையே ஏன்?