1. தலைவரை வாழும் விக்கிரமாதித்தன்-னு புகழ்றாங்களே?
தலைவருக்கு ஏகப்பட்ட லேடீஸ் சகவாசம் உண்டு-னு பூடகமா சொல்றாங்க.
2. தலைவரு தன் வாயாலயே மாட்டிக்கிட்டாரு.
ஓட்டுக்குப் பணம் தருவதில் தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது அப்டினு அறிக்கை விட்டிருக்காரே?
3. பொண்ணு ரொம்ப முற்போக்குவாதியா இருக்குது.
இருக்கட்டும். அதுக்காக மாப்ளை கழுத்துல அவதான் தாலி கட்டனும்-னு அடம் பிடிக்கனுமா?
4. தைரியம் புருஷ லட்சணம்-னு சொல்லுவாக்களே. உன் புருஷன் எப்படி?
என் புருஷன் லட்சணமாதான் இருப்பாரு.
5. தலைவர் ஏன் ஃபாரீன்(FOREIGN) சரக்கு அடிக்கறது இல்லை?
“இந்தியனாக இரு; இந்தியப் பொருள்களையே வாங்கு”-இதுதான் அவர் கொள்கை.
6. தலைவரு எதுக்கு டாஸ் போடறாரு?
டாஸ்மாக் போலாமா வேணாமா?-னு டிசைட்(DECIDE) பண்ண.
7. அவரு விஜய் ரசிகர்-னு எப்படி எப்படி கண்டுபிடிச்சே?
ஆயுத பூஜை கொண்டாடாம வேலாயுத பூஜை கொண்டாடுனாரே?
8. தலைவர் ஏன் சலிச்சுக்கறாரு?
அவரையும் ஒரு தலைவர்னு மதிச்சு யாரும் இன்னும் கொலை மிரட்டல் விடலையாம்.
9. சார்... கதைப்படி நீங்க...
“முதல்ல கதையை சொல்லுங்க. அப்புறம் சீ்னை சொல்லலாம்.
10. குன்னூர் TO ஊட்டி பைக்ல போறப்ப நடக்கற சம்பவங்கள்தான் படத்தோட knot. [கதை முடிச்சு]
“ஓஹோ... ஏகப்பட்ட டர்னிங் பாயிண்ட்ஸ் இருக்கும்-னு சொல்லுங்க.
11. உன் லவ்வரோட அழகைப் புகழ்ந்ததுக்கு கோவிச்சிட்டாளா?
“ஆமா, இது வரைக்கும் நான் லவ் பண்ணுன ஃபிகர்லயே டாப் நீ தான்-னு
12. தலைவருக்கு ஏகப்பட்ட கெட்ட வார்த்தை பரிச்சயமாம்.
விளையாடாதீங்க. ஒரு வார்த்தை ஒரு லட்சம் போட்டியை (விஜய் டிவி)தப்பா புரிஞ்சுட்டீங்க போல.
13. நயன்தாரா புடவை விளம்பரத்துல நடிச்சிருக்காங்களே?
புடவை கட்டி படத்துல நடிச்சிருந்தா தான் அதிசயம்; புடவை விளம்பரப் படத்துல நடிச்சது என்ன பெரிய அதிசயம்?
14. இந்திரன் கெட்டதும் பெண்ணாலே அந்த சந்திரன் கெட்டதும் பெண்ணாலே!
அதெல்லாம் பழசுடா மாப்ளே; எந்திரன் கெட்டதும் பெண்ணாலே!
15. தலைவர் சரியான சரக்குப் பைத்தியமா இருக்காரே?
மேடை ஏறி 10 நிமிஷம் கூட இல்லை, பி.ஏ.வைப் பார்த்து “தம்பி! சரக்கு(குவாட்டர்) இன்னும் வர்லை” அப்டீன்னாரே?
16. அவர் அஜித் ரசிகர்னு எப்படி சொல்றே?
விஜய் டி வி கூட பாக்க மாட்டேங்கறாரே?