Saturday, October 16, 2010

கவுரவர்கள் - சினிமா விமர்சனம்

பாலுமகேந்திராவின் ராமன் அப்துல்லாவில் பிள்ளப்பூச்சி மாதிரி வந்த விக்னேஷ்க்கு இதில் பிரமோஷன்,தாதாவின் அடியாள்,நடிப்பும்,தோற்றமும் சகிக்கவில்லை.ஏதோ சத்யராஜ்ஜுக்காக பாக்க வேண்டி இருக்கு.அசல் அஜீத்தின் கெட்டப்பில் விக்னேஷ் வந்து நம்மை பாடாய் படுத்தி எடுக்கிறார்.பிரபுதேவாவுக்கு நயன்தாரா எப்படி பாலைவனத்தில் சோலையாக தெரிந்தாரோ அது மாதிரி மோனிகா இருக்கறதால பொழுது போகுது.

ஊருக்கெல்லாம் நல்லது செய்யும் தாதா சத்யராஜ் அவரது நண்பன் பானுச்சந்தரின் மகன் செய்த கொலைக்கு போலீஸால் தேடப்படும்போது அடைக்கலம் கொடுக்க மறுத்து விடுகிறார்.போலீசால் கொல்லப்பட்ட பானுச்சந்தரின் மகன் சத்யராஜால்தான் இறந்தான் என வெறி கொண்ட பானுச்சந்தர் அவரை பழி வாங்க பல வகைகளில் முனைவதும், என்ன நடக்குது என்பதும்தான் கதை.

ஆனால் இந்தக்கதை போதுமா என்ற சந்தேகம் இயக்குநர் சஞ்சய்ராம்க்கு வந்துவிட்டதால் பல பல கிளைக்கதைகளை புகுத்தி மஹாபாரதம் ரேஞ்சுக்கு இழு இழு என்று இழுக்கிறார்.திரைக்கதை ஓவர் லோடால் தடுமாறுகிறது.அமரர் எழுத்தளர் சுஜாதாவின் கூற்றுப்படி ஒரு திரைக்கதை தெளிந்த நீரோடை போல் இருக்க வேண்டுமே தவிர இப்படி குழம்பிய குட்டையாக இருக்கக்கூடாது.

படத்தோட ஓப்பனிங்கில் வரும் கட்டை கட்டை நாட்டுக்கட்டை நீயா வந்து கோத்துக்கிட்டசெம டப்பாங்குத்து.அந்தப்பாடலில் கோடம்பாக்க வழக்கப்படி திருநங்கைகள் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.படத்தின் ஓப்பனிங்க் ஃபைட்டுக்கு டைரக்டர் கண்டு பிடித்த காரணம் புதுசு.ஹீரோ வேலை செய்யும் பைக் ஸ்டேண்டிற்கு வரும் ஓனரின் அடியாட்கள் ஹீரோவை டீ வாங்கி வரசொல்கிறார்கள்.வாங்கி வந்த பின் அதற்கு காசு கொடுக்கவில்லை,உடனே ஹீரோ பொங்கி எழுகிறார்,(4 டீக்கு 16 ரூபா குடுத்திருந்தா போதுமே)

ஹீரோவின் அம்மாவாக குயிலி (நாயகனில் நிலா அது வானத்து மேலே),அவருக்கு அம்மாவாக வரும் பாட்டி இருவருக்கும் ஓவர் மேக்கப்.லாங்க்‌ஷாட்டில் கூட பவுடர் கிளார் அடிக்கிறது.

நல்ல நடிகரான பானுச்சந்தர் சாதாரண சீனுக்குக்கூட பதறுவதும்,பாடிலேங்குவேஜ்ஜில் அநாவசிய துடிப்புகள் காண்பிப்பதும் ஏன்?வில்லனின் மகன் வில்லனை போடா டாடி என அடிக்கடி கூறுவதை இயக்குநர் காமெடி என்று நினைத்து விட்டாரோ?சிரிப்பு சத்தியமா வர்லை,எரிச்சல்தான் வருது.


மேஜிக் நிபுணரான (நிஜத்தில்) அலெக்ஸ் பேசாமல் அதே தொழில் கவனம் செலுத்தலாம்.மற்றவர்கள் வசனம் பேசற சீன்களில் அவர் சும்ம வேடிக்கை பார்த்தாலே போதும்,தேவையே இல்லாமல் முகத்தில் நவரசங்களையும் காண்பித்து கடுப்பேற்றுகிறார்.


தாமிரபரணியில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த பானு காலத்தின் கட்டாயத்தால் இதில் தகடு தகடுக்கு ஜோடி.பார்ட்டி செம கட்டை.

ஆர் பார்த்திபனின் அழகி படத்தில் 2வது ஹீரோயினாகவும் ,சீன் இல்லாத சிலந்தி எனும் சீன் படத்தில் நாயகியாகவும் வந்த மோனிகா இதில் நாயகி.விக்நேஷுக்கும் ,இவருக்கும் ஜோடிப்பொருத்தம்,பாடி கெமிஸ்ட்ரி,எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை.(அதென்ன சீன் இல்லாத சீன் படம்?சீன் படம் போல் விளம்பரம் செய்து ஏ முத்திரையோடு வந்து ஒரு சீனும் இல்லாமல் ஏமாற்றும் படம்)

ஆஹா சொக்க வெச்சான்,அழகா சிக்க வெச்சான் பாட்டு செம ஹிட் அடிக்கப்போகும் மெலோடி.குப்பையில் கோமேதகம் மாதிரி இப்படி ஹிட் பாட்டுகள் அமைவதுண்டு.அந்தப்பாட்டுக்கு மோனிகாவின் ஆடைஅலங்காரம்,நடன அசைவுகள் ,முக பாவனைகள்,காதல் சேட்டைகள் என அனைத்தும் கொள்ளை அழகு.

(இந்தப்பாட்டின் இறுதியில் கேமரா டாப் ஆங்கிளில் ஒரு லோ கட் சீன் ஸூட் பண்ணி இருக்கு ,6 செகண்ட் மட்டுமே வரும் சீனை டோண்ட் மிஸ்)


படத்தின் வசனகர்த்தா மனதைத்தொட்ட இடங்கள்

1.நாம் ஜெயிக்கறப்பதான் தோத்ததைப்பத்தி நினைக்கனும்.

2.நான் கும்பிடற சாமியை விட பண்ணுற அரசியலை நம்புறவன்.

3.தலைவரே,எனக்கு உயிர் போற பிரச்சனை,நீங்கதான் உதவனும்.

சொல்லு,உனக்கு என்ன வேணும்?

உங்க உயிர்தான்.

4.பொண்ணுங்க ஐ லவ் அமெரிக்கானு சொன்னா கல்யாணத்துக்கு முன்னமே மேட்டருக்கு ஓக்கே சொல்றாங்கனு அர்த்தம்,ஐ லவ் பாகிஸ்தான்னு சொன்னா என்னால எல்லாரும் வெட்டிக்கிட்டு சாகப்போறீங்கனு அர்த்தம்,ஐ லவ் இந்தியானு சொன்னா டூயட் பாட ரெடினு அர்த்தம்.(என்ன ஒரு கண்டுபிடிப்பு?)

5.தலைவரே,எங்கம்மா அப்பா உங்களைப்பாக்க வரனும்னு ஆசைப்படறாங்க.

ம்ஹூம்,எப்பவும் பெரியவங்களை நாமதான் போய் பாக்கனும்.

6.என்னப்பா ,என்னைப்பாக்க பல டிக்கெட்டுங்களோட வந்திருக்கே,பயமா?

ம்ஹூம்,நான் எப்பவும் தரை டிக்கெட்டுதான்.


டைரக்டரிடம் சில கேள்விகள்

1.சாதரண ஃபைட் சீனில் ஹீரோ வில்லனின் அடியாளை பிதாமகன் ரேஞ்சுக்கு ஆவேசத்துடன் அடிப்பது ஏன்?

2.ஹீரோ ஒரு சீனில் ஹெல்மெட்டை ஆயுதமாக கொண்டு போடும் ஃபைட் நம்பும்படியே இல்லையே?ஒரு ஹெல்மெட்டால் 47 பேரை அடிக்க முடியுமா?

3.படத்தில் வரும் அனைத்து ஆண் கேரக்டர்களுக்கும் அசல் அஜித் அல்லது விருமாண்டி கமல் மீசை எதற்கு?

4.கணவ்னின் ஃபோன் நெம்பரை எந்த மனைவியும் ஸ்டோர் பண்ணித்தான் வைத்திருப்பாள்,ஆனால் சத்யராஜுக்கு ஒவ்வொரு முறை ஃபோன் பண்ணும்போதும் நெம்பரை டயல் பண்ணுவது ஏன்?

5.பாட்டு சீனில் கூட ஹீரோ கலைத்துப்போட்ட பரட்டைத்தலையோடு கர்ணகொடூரமாக வருகிறார்,ஏன்?

6.உன் சங்கை அறுத்துடுவேண்டா என்ற டயலாக்கை படத்தில் 17 பேர் சொல்கிறார்கள்,ஏன் இந்த கொலை வெறி?

7.நான் 1 சொன்னவனையும் பாத்திருக்கேன் 100 சொன்னவனையும் பார்த்திருக்கேன்.நான் சொன்னதை மட்டும்தான் செய்வேன் என தேவை இல்லாமல் ரஜினியை வம்புக்கு இழுக்கும் பன்ச் டயலாக் எதற்கு?

8.ஹீரோ விக்நேஷ்க்கு தங்கையாக வருபவர் பக்கா அயிட்டம் போல் தெரிகிறாரே,தீபாவெங்கட்,ஆட்டோகிராஃப் மல்லிகா போன்ற எத்தனையோ நல்ல நடிகைகள் இல்லையா?

9.இடைவேளைக்கு பிறகு கதை ஏன் திசை மாறி பூங்கொடியை கட்டிக்கப்போறதுயாரு? எனும் திசையில் பயணிக்கிறது?

10.ஆசை பிரகாஷ் ராஜ் மாதிரி மச்சினி மேல் ஆசைப்படும் ரஞ்சித் கேரக்டரை ஏன் வடிவமைத்தீர்கள்?

டைரக்டரை  அட போட வைத்த சீன்கள்

1.வில்லனின் கையாளாக வரும் அல்லக்கை கிளைமாக்ஸ் வரை எதுவுமே பேசாமல் மலையூர் மம்பட்டியானில் செந்தில் செய்வது போல் போட்டுத்தள்ளி எனக்கு பதவிதான் முக்கியம் என சொல்லும் சீன்(செம அப்ளாஷ்)

2.ரஞ்சித்தை அழகாக பயன்படுத்தியது.

3.உள்துறை அமைச்சராக வருபவர் வாய் விட்டு எதுவும் பேசாமல் ஒவ்வொரு சீனுக்கும் மனசாட்சியாக கவுண்ட்டர் பன்ச் கொடுப்பது நல்ல டெக்னிக்.


தெலுங்கில் இந்தப்படம் நல்லா ஓடும்,தமிழில் தீபாவளி வரை ஓடும் (20 நாட்கள்)