Saturday, October 16, 2010

வாடா - சினிமா விமர்சனம்



டாக்டர் ராஜசேகருக்குப்பிறகு “மரியாதை”யாக டைட்டில் வைக்க தமிழில் ஆள் இல்லையே என்ற கவலை விட்டது.இயக்குநர் ஏ.வெங்க்டேஷ் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.அதே போல் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய நாவல்களிலேயே சிறந்த நாவலான தொட்டால் தொடரும் போல் அவர் வசனம் எழுதிய படங்களிலேயே மிக மோசமான படம் என்ற தகுதியும் இதற்கே.

படத்தின் முதல் பாதி முழுக்க ஹீரோ ரவுடியாகவும்,தீவிரவாதி போலும் காட்டப்பட்டாலே நமகெல்லாம் தெரிந்து விடும் இடைவேளைக்குப்பிறகு ஃபிளாஷ்பேக்கில் ஹீரோ ஒரு கலெக்டராகவோ,போலீஸ் ஆஃபீசராகவோ காட்டப்படுவார் என.ஆனானப்பட்ட கேப்டன் நரசிம்மாவில் ஜெயிக்க முடியாத கதை,இளைய தளபதி விஜய் மதுர படத்தில் அடி வாங்கிய கதையை வைத்துக்கொண்டு ஏ வெங்கடேஷ் என்ன தைரியத்தில் படத்துக்கு பூஜை போட்டார் என்றே தெரியவில்லை.

சுந்தர் சிக்கு ஓரளவு மார்க்கெட் இருக்கிறது (ரிலீஸ் அன்று தியேட்டரில் 38 பேர்)என்பதை ஒத்துக்கொள்ளலாம்,அதற்காக அவர் பாட்ஷா ரேஞ்சுக்கு பாய்வதும்,பஞ்ச் டயலாக் பேசுவதும் ரொம்ப ஓவர்.இனி எந்த ஹீரோவாவது பஞ்ச் டயலாக் பேச வேண்டும் என்றால் அதற்கு மினிமம் குவாலிஃபிகேஷன் 50 படம் முடித்திருக்க வேண்டும்,10 சூப்பர் ஹிட்ஸ் கொடுத்திருக்க வேண்டும் என யாராவது கோடம்பாக்கத்துக்கு ரூல்ஸ் போட்டாதான் தமிழ் சினிமா உருப்படும்.

ஜீன்ஸ் பேண்ட்டை இவ்வளவு லோ லெவலில் போட்ட முதல் கோலிவுட் நடிகை என்ற அந்தஸ்தை(!) பெறுகிறார் ஷெரில் ஃபிண்ட்டோ.அவர் உடுத்தும் உடைகள் எங்கே அவிழ்ந்து விடுமோ என நாம் தான் பயந்து கொண்டே படம் பார்க்க வேண்டி இருக்கே தவிர அம்மணி ஒன்றும் கவலைப்பட்ட மாதிரியே தெரியவில்லை.

இயக்குநர் காதலை எவ்வளவு கேலிக்கூத்தாக நினைக்கிறார்,தமிழ் ரசிகர்களை மாங்கா மடையன் ஆக்க நினைக்கிறார் என்பதற்கு ஒரு சாம்ப்பிள்.ஹீரோயின் செப்பல் அறுந்து விடுகிறது,ஹீரோயின் தெனாவெட்டாக ஹீரோவிடம் அதை கையில் எடுத்து வருமாறு கூறுகிறார்.உடனே ரோஷம் பொங்கி எழுந்த ஹீரோ கண்டபடி இங்கிலீஷில் திட்டி விடுகிறார்,உடனே அபரிதமான காதல் வந்து விடுகிறது,டூயட் பாட ஃபாரீன் கிளம்பிடறாங்க,என்ன கொடுமை சார் இது?





படத்தில் சம்பந்தமில்லாமல் பொங்கல் பாட்டு ஒன்று வருகிறது,தெரிந்த உதவி இயக்குநர் ஒருவரிடம் விசாரித்தபோது வந்த தகவல்,இந்தப்படம் 2009 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய படமாம்.அட தேவுடா.

படத்தில் பாடல் ஆசிரியருக்கு பணம் தர பட்ஜெட் பற்றவில்லை போல பாரதியார் பாடல்கள்,கண்ணதாசன் பாடல் என ஒப்பேற்றி இருக்கிறார்கள்.அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.

இந்தப்படத்தில் ரஜினியே இதுவரை செய்யாத காட்சி ஒன்று உண்டு.வில்லன் குரூப்பில் 5 பேர் நிற்கிறார்கள்.அவர்கள் எதிரே படுத்தபடி அடிபட்டிருக்கும் ஹீரோ தன் தோளில் கிடக்கும் ஈரல் துண்டால் சாய்ந்து கிடக்கும் ஒரு பனை மரத்தையே இழுத்து அதை அவர்கள் மேல் விட்டெரிகிறார்,அவர்கள் அனைவரும் அவுட்.ஈரோடு டெக்ஸ்டைல் சிட்டி என்பதால் ஈரல் துண்டு தயாரிப்பாளர்களிடம் இதன் சாத்தியம் குறித்து விசாரித்தேன்,அவர்கள் அதிசயித்துப்போய் இந்த ஒரு காட்சிக்காகவே அந்தப்படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்றார்கள்.

அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நினைப்பு என்ற நல்ல பாட்டை ரீமிக்ஸ் என்ற பெயரில் கெடுத்து குட்டிச்சுவர் ஆகி இருக்கும் குற்றத்திற்காகவே இயக்குநருக்கு ஒரு வருஷம் படம் எடுக்க தடை விதிக்கலாம்.




மைக்ராஸ்கோப் வைத்து தேடியதில் தென்பட்ட படத்தின் நல்ல அம்சங்கள்

1.கிஸ் குடுத்த பின் காதல் ஜோடியிடம் இந்தியா -சைனா ஒப்பந்தம் எப்படி இருந்தது? என கேட்பது.

2.அதோ ,அஞ்சலி வர்றா.

என்னது அஞ்சரைக்குள்ள வண்டி பட போஸ்டர் மாதிரியே வர்றா?

3.செல்ஃபோன் ரீசார்ஜ் செய்ய வேண்டிய சீக்ரட் நெம்பரை விவேக்கிடம் ஃபோனில் ஃபிரண்டு சொல்ல அதைக்கூட இருந்து கொண்டே குறித்து வரும் மனோகர் நன்றிப்பா ரூ 2000க்கு ரீ சார்ஜ் ஆகிடுச்சு என சொல்வது.

4. புது ரூட்ல நிறைய பஸ் விடனும்னு பொதுமக்கள் நிறைய பேர் பெட்டிஷன் குடுத்திருக்காங்க.

பஸ்ங்க நிறைய விடவேணாம்னு தனியார் பஸ் ஓனருங்க பெட்டி குடுத்திருக்காங்களே?

5.கடத்தப்பட்ட தலைவர் கடத்திய ஆளிடம்,”பிளீஸ்,என்னை விட்டுடுஎவ்வளவு பணம் கேட்டாலும் தர்றேன்”
அப்போ கூட இருக்கும் தலைவரின் பி ஏ “ஆஹா,இந்த ஐடியா இத்தனை நாளா எனக்கு தோணாம போச்சே?

6.யோவ்,நான் யாரு தெரியுமா?மந்திரி வணங்காமுடி.

அப்போ நான் யாரு?எம் எல் ஏ தேங்கா மூடியா?

7.பிரைம் மினிஸ்டரே ஒரு ஊருக்கு வரனும்னா அந்த ஊர் கலெக்டரோட பர்மிஷன் வேணும் தெரியுமில்லை?

8.பழைய பேப்பர்காரண்ட்ட பலாக்கொட்டை விக்கறவன் மாதிரி இருக்கே..

நீ மட்டும் என்ன அல்டிமேட் ஸ்டார் அஜித் மாதிரியா இருக்க்கே?நாமெல்லாமே மாயாண்டி குடும்பத்தார் மாதிரிதான்  இருக்கோம்.

9. மினிஸ்டர் பையன் மேல 18 கேஸ் இருக்கு.

யோவ்,மினிஸ்டர் மேல எத்தனை கேஸ் இருக்கு தெரியுமா?

அடப்பாவி,அவன் உன்னை கேட்டானா?ஏன் போட்டு குடுக்கறே?

10. குடம் ரொம்ப அடி வாங்கி இருக்கே,

குடத்தை பாக்காதே,குடத்தை வெச்சிருக்கற பொண்ணை பாரு.





விவேக்கின் காமெடியை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.அவர் சுருளிராஜன் கெட்டப்பில் வந்து அவர் குரலில் பேசி ,அவர் பாணியில் நடித்து அவரும் சிரமப்பட்டு அவர் பெயரையும் கெடுத்து சுருளி பெயரையும்
கெடுத்து குதறி விட்டார்,போதாக்குறைக்கு படம் முழுக்க டபுள் மீனிங்க் டயலாக்ஸ் வேறு.

கே பாக்யராஜ் காலத்தில் காமெடியின் டபுள் மீனிங் இலை மறை காய் மறைவாக இருந்து ரசிக்க வைத்தது.இப்போது எஸ் ஜே சூர்யா,வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகிடோர் வந்து அதை நாஸ்தி பண்ணி விட்டார்கள்,அதை விவேக் பின்பற்றுகிறார்.


படத்தில் புத்திசாலித்தனமாக ஒரு சீன் உண்டு என்றால் அது மினிஸ்டர்  ராஜ்கபூரை ஹீரோ சாதரண டவுன் பஸ்ஸில் பயணிக்க செய்து, ஜி ஹெச்சில் ட்ரீட்மெண்ட் எடுக்க வைத்து ஏழைகளின் இன்னல்களை உணர வைப்பதுதான்.படாத பாடுபடும் அவர் “யோவ்,எம் எல் ஏ சீட்டுக்கு கூட இவ்வளவு நேரம் லைன்ல நிக்கலைய்யா.”என புலம்புவது செம காமெடி.

ஒரு கலெக்டர் புரூஸ்லீ ரேஞ்சுக்குன் சண்டை போடுவதெல்லாம் ரொம்ப ஓவர்.ஒரு 35 கிலோ எடை உள்ள இரும்புக்கழியால் வில்லனின் கையாள் ஹீரோவை கை மணிக்கட்டுப்பகுதியில் அடிக்கிறார்,என்ன ஆச்சரியம் ஹீரோவின் கைக்கு எதுவும் ஆகவில்லை,அந்த இரும்புக்கழி உடைந்து விடுகிறது.

அப்பா ,ஆளை விடுங்க ,நான் எஸ்கேப்