Friday, October 15, 2010

தொட்டுப்பார் - சினிமா விமர்சனம்

யாருக்காவது ஜாமீன் போடற மாதிரி இருந்தா யார் எவர்னு விசாரிங்க,முன்ன பின்ன தெரியாத ஆளுங்களுக்கு ஜாமீன் போட்டா  என்ன விபரீதம் எல்லாம் ஏற்பட வாய்ப்பு இருக்கு அப்படிங்கறதை முடிஞ்சவரை சுவராஸ்யமா சொல்லி இருக்கார் இயக்குநர்.

புதுமுகம் வித்யார்த்தான் ஹீரோ.தாதா கேரக்டர்,ரவுடி கேரக்டர் ,வேலை வெட்டி இல்லாத ஆள் கேரக்டர் என்றாலே தலை சீவக்கூடாது, பரட்டையாக ஹிப்பி தலையோடு இருக்க வேண்டும் என்ற கோடம்பாக்கத்தின் (கேனத்தனமான)செண்ட்டிமெண்ட் பிரகாரம் கெட்டப் போட்டிருக்கிறார்.குத்தாட்டப்பாட்டு,ஹீரோயின் கூட டூயட் என்றால் முகத்தில் பல்ப் எரிகிறது,மற்ற இடங்களில் தேமே என்று நடித்திருக்கிறார்.

ஹீரோயின் லக்‌ஷனா.பேருக்கேத்த மாதிரி லட்சணமான முகம்தான்.ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்திழுக்கக்கூடிய கரிஷ்மா இல்லை.கன்னக்குழி அழகு,உதட்டழகு என முடிந்தவரை சமாளிக்கிறார்.பாடல் காட்சிகளில் ஜோதிகாவை இமிடேட் செய்கிறார்.பாடி கெமிஸ்ட்ரி சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை.(அதற்கு ஹீரோயின் மேல் எந்தத்தவறும் இல்லை)

படத்தின் டைட்டில் டிசைனில் பீர் பாட்டில்கள் டிசைன் வரும்போதே தெரிந்து விடுகிறது கதைக்களன் டாஸ்மாக்தான் என்று.ஹீரோ பாரில் வேலை செய்பவராகக்காட்டியதில் டைரக்டருக்கு எவ்வளவு சவுகரியம்.குத்தாட்டம்,மப்புக்காட்சிகள் என ஒரே போதை மயம் தான்.

இந்திரா புகழ் அனு ஹாசன் (விஜய் டி வி காஃபி வித் அனு) டாக்டராக வந்து கண்ணியமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.அவரது டிரஸ்ஸிங் சென்ஸ் அற்புதம்.காமா சோமா என்று உடை உடுத்தும் நடிகைகளுக்கு நல்ல ஒரு படைப்பினை இவரது கவுரவமான உடைகள்.

வசனகர்த்தா பல இடங்களில் ரசிக்க வைக்கிறார்.

1.ஒயின்ஷாப்பை பார்த்தாதான் தெரியுது ஊர்ல எத்தனை பேர் வேலை இல்லாம இருக்காங்கன்னு.

2.ஃபர்ஸ்ட் கட்டிங்க்லயே தூங்கிடற ஆம்பளையும்,ஃபர்ஸ்ட் நைட்லயே தூங்கிடற பொம்பளையும் உருப்பட்டதா சரித்திரம் இல்ல.

3. தம்பி,ஒரு உயர் அதிகாரி லஞ்சம் கேட்டா குடுத்திடனும்,கேள்வி கேக்கப்படாது.

4.பாத்தா பிச்சைக்காரனாட்டம் இருக்கியே,உன் பேர் என்ன?     மகாராஜா.
ரேஷன் கார்டு வெச்சு இருக்கியா?      என் கிட்ட இருக்கற ஒரே சொத்து அதுதான்.

5. ஒரு மனுஷன் கோயிலுக்கு எதுக்கு போறான்?  நிம்மதியை தேடி

ஒயின்ஷாப்புக்கு எதுக்கு போறான்?  நிம்மதியை தேடி.

அப்போ 2 ம் ஒன்னுதானே?
6.ஹீரோயின் - நான் விஸ்கோஸ் படிக்கறேன்.

ஹீரோ - படிங்க ,நான் வேணாம்கலையே?

ஹீரோயின் -நீங்க?           ஹீரோ -என்னைப்பாத்தா படிக்கறவனாட்டமா இருக்கு?

7.உங்களுக்கு இங்கிலீஷ்ல பேசத்தெரியுமா?

ஓ.ஓல்டுமங்க்,ஓல்டு கேஸ்க்,மானிட்டர்,கோல்கொண்டா.

8.எங்கே வேலை செய்யறீங்கன்னு கேட்டப்ப கவர்மெண்ட் வேலைனு சொன்னீங்க?    ஏன்?டாஸ்மாக் கவர்மெண்ட் கிடையாதா?

9.ஒவ்வொரு மனுஷனுக்கும் வாழ்க்கைல கறுப்புப்பக்கங்கள்னு ஒண்ணு கண்டிப்பா இருக்கும்.


டைரக்டர் ஒரு ஷோக்குப்பேர்வழி என்பது குத்தாட்டப்பாடல்களிலும்,டூயட் சீன்களிலும் பட்டவர்த்தனமாய் தெரிகிறது.கேமரா,எடிட்டிங்க் 2லும் பாடல் காட்சிகள் சைன் (SIGN) பண்ணுது.

ஓலை வெடியே ஒத்தை வெடியே குத்தாட்டப்பாடலின் சரணத்தில் ச ச ச ச சரசு,உ உ உ உ உனக்கு பெரிசு (சென்சாரில் அதை மவுசு என மாற்றினாலும்)
ஓவர் அலப்பறை.ஷகிலா இட்லிக்கடையில் ஹீரோவும்,தோழனும் சாப்பிடும்போது நடக்கும் உரையாடலிலும் பச்சை வாசனை தூக்கல்.

வர வர உங்க கடை இட்லி சைஸ் சின்னதாகிட்டே வருது.

கேரளா,கர்நாடகா,ஆந்திரா,தமிழ்நாடு எங்கே போய்  யார்கிட்ட வேணாலும் கேட்டுப்பாரு,இந்தக்கடை இட்லி மாதிரி வருமான்னு.

அதே ஷகீலாவிடம்  -  இது யாரு?   என் தங்கை அம்மு.  பேரும் ஆளும் கும்முனு இருக்கே
அடுத்த சீனே பாட்டு.(ஹூம்)

ஆடி மாசம் காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க பாட்டு ரீ மிக்ஸா இருந்தாலும் பிக்சரைசேஷனில் மனம் கவர்கிறார்கள்.

ஹீரோயினை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் ஹீரோ சாவு கிராக்கி என சொல்லுகிறார்.உடனே ஹீரோயினுக்கும் அதே பழக்கம் தொற்றிக்கொள்கிறது,அவரும் தோழிகளை அப்ப்டியே சொல்கிறார்.என்ன கொடுமை டைரக்டர் சார்.அந்த மாதிரி காலேஜ் பொண்ணுங்க இருக்காங்களா என்ன?
ஹீரோவும்,ஹீரோயினும் சந்தித்து பேசும் காட்சிகளில் ஸ்கீரீனில் கார்னரில் இதற்கு முந்தைய சந்திப்புகளின்  சாராம்சத்தை போடுவது கவிதை.


அதே போல் காதல் மூடில் வரும் ஹீரோயின் தனது வீட்டு பெட்ரூமில் நுழைந்ததும் ஹேண்ட்பேக்கை வீசுவதும் அது ஃப்ரீஸ் ஆகி அந்தரத்தில் நிற்பதும்,டைரக்டரின் ரசனையான கற்பனை.

ஸ்கூலுக்கு போகும் மாணவர்கள் ஸ்கூல் பேக் சைஸ் பார்க்கும் ஹீரோ மனதில் அவர்கள் பெரிய பெரிய மூட்டைகளை சுமப்பது போல் கற்பனையில் நினைப்பது டைரக்டரின் சமூக சாடல் அக்கறையை காட்டுகிறது.

அதே போல் அடிக்கடி டாஸ்மாக் வரும் மயில்சாமி தன்னை சினிமாக்கு ட்ரை பண்ணும் கவிஞன் என அறிமுகப்படுத்துவதும்,பின் அவர் சரோஜாதேவி விருந்து போன்ற அஜால் குஜால் பத்திரிக்கைகளுக்கு கசமுசா கதை எழுதுபவர் என தெரிவதும் வெடிச்சிரிப்பு. (இந்தக்காட்சி தியேட்டரில் பலத்த கை தட்டலை பெறுகிறது)

தண்ணி அடித்த நபர் ஒருவர் ஹீரோவுக்கு 100 ரூபாய் டிப்ஸ் வைப்பதும் ,பின் டிப்ஸ் வைத்தவரின் குழந்தை சாப்பாட்டுக்கு கதறுவதும் டச்சிங்க் சீன்.

தொட்டுப்பாரு என்னை தொட்டுப்பாரு பாட்டு படத்தின் டைட்டிலை நியாயப்படுத்துவதற்காக.(அந்தப்பாட்டின் சரணத்தில் சீமை சிறுக்கி சங்கதியை குலுக்கி என வரும் வரம்பு மீறிய வரிகளை நீக்கி இருக்கலாம்)

டைரக்டர் சறுக்கிய இடங்கள் - ஒரு மாணவனின் உயிரை ஸ்கூல் வாசலில் காப்பாற்றுகிறார் ஹீரோ,ஸ்கூல் பேக் காலியாக இருப்பது அப்பட்டமாய் தெரிகிறது.

பல இடங்களில் கண்டினியூட்டி மிஸ்ஸிங்க்.வில்லன் பேசும் பன்ச் டயலாக் மோசம்.பாம்புக்கடியைக்கூட பொறுத்துக்கலாம்,கொசுக்கடியை பொறுத்துக்க முடியாது.(இது எல்லாம் ஒரு பன்ச்சா)

மனசைக்கவர்வது மாதிரி காட்சிகள் வைப்பது வேறு,மனதை பாதிப்பது மாதிரி காட்சிகள் வைப்பது வேறு,கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் தாலி அறுக்கும் சீனை இவ்வளவு விலாவாரியாக காட்ட வேண்டுமா?மனதை பிசைகிறது,தேவை இல்லாத சீனும் கூட.அதே போல் வில்லன் ஒரு திரு நங்கை என்பதும் அவ்ரை சேலையில் புரட்டி அடித்து வெட்டுவதும் கர்ண கொடூரம் (லேடீஸ் ஆடியன்ஸ் வரனுமா? வேணாமா?)

படம் சுவராஸ்யமாக போவது ஒரு பிளஸ் என்றாலும் இதே படத்தை இன்னும் டீசண்ட்டாக எடுத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

பி சி செண்ட்டர்களில் 30  அல்லது 20  நாட்கள் ஓடும் (தீபாவளி வருதே)

ஆனந்த விகடன் மார்க் 40,    குமுதம் ரேட்டிங்க் ஓக்கே  (EXPECTING)