Thursday, October 14, 2010

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா .....

   

      இந்தியா முழுவதும் விடுதலை போராட்டம் நடந்து கொண்டிருந்த காலம்.அப்போது அலகாபாத்தில் முக்கியமான் காங்கிரஸ் மாநாடு ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு முக்கிய்மான் பொறுப்பாளர், வல்லபாய் பட்டேல் ஆவார். மாநாடு தொடங்கும் நேரமாகியும் வல்லபாய் பட்டேல் வந்து சேரவில்லை.மேடையிலிருந்த காந்தியடிகள், “ வல்லபாய் பட்டேல் என்ன ஆனார்? ஏன் இன்னும்
வரவில்லை?” என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்.

            மாநாடு தொடங்கி அரை மணி நேரம் ஆன பிறகு வல்லபாய் பட்டேல்பரபரப்புடன் வேகமாக ஓடி வந்தார். அவரைக் கண்ட காந்திஜி, “நமது நாட்டிற்குச்சுதந்திரம் வருவதற்கு அரை மணி நேரம் தாமதமானால் அதற்கு வல்லபாய் பட்டேல்தான்
காரணம்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.  பட்டேல் காந்தியடிகளுக்கு வணக்கம் தெரிவித்து, “மாநாடுகளுக்கு
நான் வரும் நேரத்தைப் பொறுத்துதான் நமது நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்குமென்றால் அடுத்த மாநாட்டின்போது பல மணி நேரம் முன்னதாகவே வந்துவிடுகிறேன்” என்று கூறினார். அதைக் கேட்டு மேடையிலிருந்த காந்திஜி உட்பட அனைவரும் மகிழ்ச்சியோடு
சிரித்துக் கொண்டார்கள்.