வந்திருந்தார்கள். அவர்களுக்குத் தமிழ்நாட்டுத் திரைப்பட ஸ்டுடியோக்களைச் சுற்றிக் காண்பிக்கும் பொறுப்பு, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனிடம் தரப்பட்டிருந்தது.
கலைவாணர், சோவியத் கலைஞர்களுக்கு ஸ்டுடியோக்களிலிருந்த
படத்தயாரிப்பிற்கான சாதனங்களையெல்லாம் காண்பித்துக்கொண்டு வந்தார். சோவியத் கலைஞர்கள் அங்கிருக்கும் தொழில் நுணுக்கப் பொருள்களையெல்லாம் பார்த்து, அவையெல்லாம் எங்குச்
செய்யப்பட்டவை என்று கேட்டார்கள்.
கலைவாணர் அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில்,”இது இங்கிலாந்தில் செய்தது.அது ஜப்பானிலிருந்து வந்தது. இது அமெரிக்க தயாரிப்பு”என்றெல்லாம் தொடர்ச்சியாக்சொல்லிக்கொண்டே வந்தார். ஒரு சோவியத் கலைஞர்,”உங்கள் சொந்த நாட்டில் தயாரான
பொருள் ஒன்றும் இல்லையா?”என்று கேட்டார்.
அந்தக் கேள்வி கலைவாணருக்கு வெட்கத்தையும் வேதனையையும் அளித்ததுஎன்றாலும், அவர் சிரித்துக் கொண்டே சோவியத் கலைஞர்களை நோக்கி,”ஏன் இல்லை? இந்தஸ்டுடியோவில் உள்ள சுவர்களையெல்லாம் நாங்கள்தாம் கட்டினோம். இங்கே இருக்கும் மரங்களையெல்லாம் நாங்கள்தாம் வளர்த்தோம். அதோ, கார் நிற்கிறதல்லவா, அதன் டயர்
டியூபுக்கு நாங்கள்தாம் காற்றடைத்தோம்” என்று நகைச்சுவையாகச் சொன்னார்.