தமிழக டி.ஜி.பி. லத்திகா சரண் நியமனம் செல்லாது : ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
தமிழக டி.ஜி.பி. லத்திகா சரண் நியமனம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக, பணி அனுபவம் குறைந்த லத்திகா சரண் நியமிக்கப்பட்டதாகக் கூறி, அவரது பணி நியமனத்தை எதிர்த்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தலைவர் ஆர்.நடராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் ஐ.பி.எஸ். பயிற்சி மைய இயக்குநர் விஜயகுமாரும் விளக்கம் அளித்திருந்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஃப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் வாதங்களும் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஃப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட பெஞ்ச், தமிழக டி.ஜி.பி.யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டது, உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு முரணானது என தீர்ப்பளித்தனர்.
அத்துடன், தமிழக டி.ஜி.பி. பணிக்குத் தகுதியானவர்களின் பெயர் பட்டியலையும் தயாரித்து அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்தில் வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு தரச்சொல்லி உத்தரவிட்டும் செய்யாத மத்திய அரசை கோர்ட் கண்டித்தது,இப்போது இந்த மேட்டர்,அரசுக்கும் ,கோர்ட்டுக்கும் பனிப்போர் நிலவி வருவது வருந்தத்தக்கது.இந்தத்தகவல் ஆனந்த விகடன் நண்பர் மூலம் கிடைத்தது.