தனி நபர் தாக்குதலை என்றுமே நான் விரும்பியதில்லை. மேலும் ஒருவரின் பர்சனல் லைஃப்ஃபில் அத்து மீறி நுழைவதும் நாகரீகமானது அல்ல. இருந்தாலும் எனக்கேற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவதன் காரணம் நீங்கள் இது போல் யாரிடமும் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம்தான்.
சித்தோடு ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். ஈரொட்டிலிருந்து கோபி, சத்தியமங்கலம் செல்லும் பஸ்கள் அந்த ஊரின் வழியாகத்தான் செல்ல வேண்டும்.அக்டோபர் 1ந்தேதி அன்று நடந்த சம்பவம் இது.நான் சித்தோடு சென்று அந்த பதிவரின் வீட்டுக்கு சென்று காலிங்பெல்லை அழுத்தினேன். அவரது மனைவி கதவைத்திறந்து ,”வாங்கண்ணே, அவர் ஆஃபீசில்தன் இருக்கிறார்”என்றார். நானும் ஆஃபீஸ்க்கு சென்றேன். 2 கிமீ தூரம்தான்,அவரது வீட்டிற்கும், ஆஃபீசுக்கும்.
ஆஃபீஸ் பூட்டி இருந்தது.செல்லுக்கு ட்ரை பண்ணுனேன். கட் பண்ணினார்.எஸ் எம் எஸ் அனுப்பினேன். எங்கேப்பா இருக்கேஎன.... அவர் பதில் அனுப்பினார். ”நான் எந்திரன் படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்”
அடப்பாவி, என்கிட்ட சொல்லாமயே படத்துக்கு போய்ட்டியா? உன் மனைவி கிட்டயாவது சொல்லிட்டு போயிருக்கலாமெ? எனக்கேட்டதுக்கு அவர் "ம்க்கும், இதுக்கே ரூ 300 செலவு, மனைவியையும் கூட்டிட்டுப்போனா செலவு பட்ஜெட் ஏறிடும். எனக்குத்தான் சினிமா விமர்சனம் போடனும்னு தலை எழுத்து. அவளுக்கென்ன. மெதுவா பார்க்கட்டும்" என்றார்.
இந்நேரம் உங்களுக்கு புரிந்திருக்கும் இது ஒரு மொக்கைப்பதிவென்று., அது வேறு ஒன்றும் இல்லை. எனக்கு இது 100வது பதிவு. அதைக்கொண்டாடவும், என்னை பதிவுலகிற்கு அறிமுகப்படுத்திய குருவுக்கு நன்றிக்கடன் கட்டவும்,(காட்டவும்) இந்தப்பதிவை உபயோகப்படுத்திக்கொண்டேன்.
அந்தப்பதிவர் வேறு யாரும் அல்ல,நல்லநேரம் ஆர் கே சதீஷ்குமார்தான். நாங்கள் இருவரும் 15 வருடங்களாக நண்பர்கள். நெட் பற்றி எனக்கு சொல்லிக்குடுத்ததும், வழிகாட்டியாக இருந்ததும் அவர்தான். டெக்னிக்கல் அறிவில் நான் பூஜ்யம் (மற்ற அறிவில் மட்டும் ராஜ்யம் அமைச்சுக்கிழிச்சீரா?என்று கேட்காதீர்). பிளாக்கில் எனக்கு டைப் பண்ண மட்டுமே தெரியும். மற்ற அனைத்து இடுகை இணைப்பு, மார்க்கெட்டிங்க் விஷயங்கள் அனைத்தும் என் நண்பர் சதீஷ்தான் பார்த்துக்கொண்டார். இந்த நேரத்தில் நான் அவருக்கு நன்றி சொல்லக்கடமைப்பட்டிருக்கிறேன்.
ஜூலை 16 ,2010இல் பிளாக் ஆரம்பித்தேன். 83 நாட்கள். ஃபாலோயர்ஸ் 115.அலாஸ்கா ரேங்க்கிங் 1,35,000. குறுகிய காலத்தில் இத்தனை வளர்ச்சி பெற திரு சதிஷ்குமார் அவர்களே காரணம். மற்றும் உங்கள் ஆதரவும்.
பதிவுலக தர்மப்படி இதுவரை போட்ட 99 இடுகைகளில் சூப்பர்ஹிட் ஆன பதிவுகள் லிஸ்ட்டும், லின்க்கும்
1. குமுதம் ஷாக்--ஞாநி வெளியிட்ட கடிதங்கள்-பரபரப்பு-
ஜூனியர் விகடன் இதழில் அரசல்புரசலாக வெளியான ஒரு செய்தியை முன்வைத்து அப்பத்திரிகை அலுவலகம் முன் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் அறிவித்துள்ளன. பலரும் தொலைபேசியில் அச்சுறுத்தி மிரட்டுகிறார்கள்.
3. கோடம்பாக்கத்தில் காமெடிக்குப்பஞ்சமா?
4. பத்திரிக்கை உலகம் அதிர்ச்சி -துக்ளக் கின் கண்டனத்துக்குரிய தலையங்கம்
பத்திரிக்கையாளர்,நகைச்சுவை நடிகர்,அரசியல் விமர்சகர்,எழுத்தாளர்,சட்டம் படித்தவர் என பன்முகத்திறமை கொண்டவர் திரு சோ அவர்கள்.முகமது பின் துக்ளக் என்ற படத்திலே அரசியல் அவலங்களை,ஓட்டுக்காக அரசியல்வாதிக்ள் எந்த அளவுக்கு இறங்கி வருவார்கள் என்பதை 37 வருடங்களுக்கு முன்பே புட்டு புட்டு வைத்தவர்.
5. புதிய பதிவர்கள் முன்னேற்ற சங்கம்
கடை விரித்தேன் கொள்வாரில்லை,பதிவிட்டேன் படிப்பார் இல்லை, அப்படியே படித்தாலும் பின்னூட்டம் இடுவார் இல்லை என புலம்புவரா நீங்கள், அப்போ நீங்க நம்ம ஆளு. பதிவுலகில் நான் ஒரு கத்துக்குட்டி. 72 நாட்கள் மட்டுமே ஆகிறது. இதில் நான் கற்றவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
டிஸ்கி 1 - டைட்டிலில் பதிவுலகம் அதிர்ச்சி எதற்கு? பதிவிடுவதையே உலகம் என நினைத்துக்கொண்டிருக்கும் நான் என்னையே பதிவுலகமாக நினைத்துக்கொண்டேன்,அதனால்தான் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி பதிவுலகத்திற்கே ஏற்பட்டதாக நினைத்துக்கொண்டேன்……..ஹி…ஹி…ஹி
டிஸ்கி 2 - ஓட்டு போட தமிழ் மணம் பட்டை தெரியவில்லை எனில் பதிவின் டைட்டிலை ஒரு முறை க்ளிக் செய்யவும்