சில சினிமா டைட்டில்கள் கொடுத்து அதற்கு ஏற்றார்போல் கவிதை கேட்டிருந்தார்கள்.
சினிமாவில் சிச்சுவேசன் சாங் கேட்பது போல்தான் இதுவும்.தானாக உருவாகும் கவிதைகளை விட இது போல் நிர்ப்பந்தங்களில் உருவாகும் கவிதைகளில் வீரியம் குறைவாக இருக்கும்.சினி ஃபீல்டில் அதிக முறை திருத்தம் செய்து,அதிக வரிகளில் எடிட் செய்து உருவான பாடல் ரோஜா படத்தில் வைரமுத்து எழுதிய சின்ன சின்ன ஆசை.இதில் வைரமுத்து 240 ஆசைகளை எழுதிக்குடுக்க,மணிரத்னம் அதில் 40 ஆசைகளை தேர்வு செய்தார்.எந்த கரெக்ஷனும் இல்லாமல் உருவான பாடல் கண்ணதாசனின் சட்டி சுட்டதடா பாடல்.
முதலில் பரிசு பெற்ற கவிதை.
நேருக்கு நேர்
இனி என்னை மறந்து விடுங்கள்
என்று தோழியிடம் சொல்லி விட்டாய்.
நமக்குள் இனி ஒன்றுமில்லை என
கடிதம் எழுதினாய்.
என் வாழ்வில் இனி குறுக்கிடக்கூடாது
என ஆள் அனுப்பினாய்.
சரி,எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன்.
இவை எல்லாவற்றையும் உன்னால்
நேருக்கு நேர் நின்று
என் கண்களைப்பார்த்து சொல்ல முடியுமா?
இனி பிரசுரத்துக்கு தேர்வானவை.
காதல்
உச்சரிக்கும்போது உதடுகள் கூட
ஒன்று சேர்வதில்லை
காதல்.
நாணயம் இல்லாத நாணயம்
தொட்டுப்பார்க்க மட்டுமெ சொந்தம்
பேங்க் கேஷியர் எண்ணும் பணம்.
ஏட்டிக்குப்போட்டி
கதை எழுதும்போது கிடைக்கவில்லை
காதலிக்கும்போது மட்டும்
உருவாகி விட்டது கரு.
கவிதைகளை வெளீயிடுவதில் முன்பிருந்ததை விட இப்போது குமுதமும்,விகடனும் அதிக அக்கறை செலுத்துகின்றன.குமுதத்தில் குழந்தைகள் செய்யும் குறும்புகள்,மழலை சம்பந்தப்பட்ட கவிதைகள் எழுதினால் 20 நாட்களில் போட்டு விடுவார்கள்.விகடனில் காதல் கவிதைகளும்,மனித மன விகாரங்கள் பற்றிய அலசல்கள்,வித்யாசமான கருக்கள் இருந்தால் பிரசுரம் ஆகி விடும்.குமுதம் ரூ 50 பரிசும், விகடன் ரூ 250 பரிசும் தருகின்றன.