படத்தோட க்ளைமாக்ஸ்ல டைரக்டர் வித்யாசமான ,ரசனையான ,க்ரியேட்டிவ்வான ஒரு மேட்டர் பண்ணி இருக்கார்.பஞ்ச தந்திரம் படத்துல சிம்ரன் குழந்தைக்கு ஃப்ளாஷ்பேக் சொல்வது போல் இந்த உத்தியும் மிக ரசனையானது.மிகச்சிறப்பாக கலைநேர்த்தியுடன் செய்த டைரக்டருக்கு நம் பாராட்டுக்கள்.ஆனால் அதற்கு முன்பெல்லாம் என்னதான் செய்தார்?
காதல்,பணி,வாழ்க்கை என அனைத்திலும் தோல்வியையே சந்திக்கும் இளைஞன் தற்கொலை செய்ய முடிவெடுக்கும்போது அந்த முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது.ஒரு லோக்கல் கிட்னாப் பார்ட்டியிடம் (மும்பை எக்ஸ்பிரஸ் கமல் & டீம் மாதிரி) தன்னை கொல்ல சொல்கிறான்.உயிரே படத்தில் வரும் மனீஷா கொய்ராலா மாதிரி அவனை ஒரு மனித வெடி குண்டாக்கத்திட்டமிடுகிறான்.அதற்குப்பிறகு ஏகப்பட்ட திருப்பங்கள்.சாகலாம் என முடிவெடுத்தவனை ஒரு பெண் காதலிக்கறாள்.அவள் அப்பா தான் வில்லன்.இதற்கு மேல் கதையை யூகிக்க சொல்லியா தர வேண்டும்?
வெண்ணிலா கபாடிக்குழு ஹீரோ - கோவா நாயகி பிரியா இவர்கள் தான் ஜோடி.ஹீரோ சுமரான பர்ஃபார்மன்ஸ்தான்,ஹீரோயின் எபொவ் ஆவரேஜ்.
ஹீரோயின் ஹேர்ஸ்டைல் கலைந்தபடி வந்தாலும் பார்க்க கொள்ளை அழகு.இதுவே ஒரு பையன் அப்படி வந்தால் பரட்டைத்தலை என பட்டம் கட்டுவோம்.(பெண்கள் எது செய்தாலும் அழகுதான்.இது எதிர்பால் ஈர்ப்பாலா?வயசுகோளாறா?)
தாத்தா மண்ணே வணக்கம் என அறிமுகமாகும் விவேக் பெரிதாக சிரிக்கவைக்கவில்லை.அதற்கு அவரது மார்க்கட் டவுன் ஆனதும் ,கேரக்டரைசேஷன் சரி இல்லாததும்தான்.
திருப்பதினு நீங்க பேர் வைக்கலாம்,லண்டன்னு நாங்க பேர் வைக்கக்கூடாதா? என அவர் கேட்பது காமடிதான் என்றாலும் 1965 இல் எம் ஆர் ராதாவே கீமாயணம் நாடகத்தில் பண்ணி விட்டாரே?
முதல் காட்சியில் ஹீரோ ஆட்டோவில் சேறு அப்பிக்கொண்டு இறங்குகிறார்.அப்போது அவர் சட்டையில் கை அளவு சேறு.அடுத்த ஷாட்டில் சட்டை பூரா சேறு.கண்ட்டின்யூட்டி விட்டுபோச்சே,அசிஸ்டண்ட் டைரக்டர்ஸ் யுவர் அட்டன்ஷன் ப்ளீஸ்.அந்த சீனில் ஆட்டோ ட்ரைவர் நல்லா சீன் போடறாங்கப்பா என பன்ச் பேசுவது நல்ல காமடி.
ஹீரோ தன் காதலிக்கு தரப்போகும் லவ் லெட்டரை மடிச்சு வீசும் கட் ஷாட் இதுவரை எந்தப்படத்திலும் வராதது,வெல்டன் டைரக்டர் சார்,லவ்வுக்கு ரூட் விடும்போது அடி ஆத்தாடி பாட்டு ஒலிப்பதும்,அதே ஃபிகர் ஃபிரண்டுக்கு செட் ஆனதும் போனால் போகட்டும் போடா பாட்டு பேக் டிராப்பில் வருவது காமெடி டச்.
காமெடி கிட்னப் குரூப்புடன் ஹீரோ பயணிக்கையில் அடிக்கடி டிரைவர் ஸ்டியரிங்கை விட்டு பின்னால் திரும்பி பாஸ் இடம் பேசுவதும், அருகில் உள்ள ஆள் பதறி ஸ்டியரிங்கை பிடித்து ஓட்டுவதும் செம காமெடி.
படத்தில் தோன்றும் பளிச் வசனங்கள் -
1.நாங்க 2 பேரும் ரகசியமா பேசப்போறோம், காதை மூடிக்க.
2.பிணம் போனாத்தான் அழனும்,பணம் போனாக்கவலைப்படக்கூடாது.
3.நாளை நாள் நல்லாருக்கும்னு நம்பிக்கை ஊட்டுவதே ஜோசியர்தான்.அவரே ஏமாத்துனா ஜனங்க என்ன செய்வாங்க?
4. உன் கடைசி ஆசை என்ன? சாகறதுதான்.
5.வாழனும் வாழனும்னு நிறைய ஆசைப்படறவங்க தினம் தினம் செத்து செத்து பிழைக்கறாங்க.
6. நீ ஒரு டீ குடிக்கப்போன நேரத்துல அவனுக்கு பாலே ஊத்திட்டாங்க.
சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வர்லை படல் காட்சியில் பீர் பாட்டில்களோடு நடனக்குழு செய்வது ஓவர் அலம்பல்.அவர்கள் குடிகாரர்கள் எனக்காட்ட ஒரு ஷாட் போதாதா? பாடல் முடியும் வரை பீர் பாட்டிலோடு அலைய வேணுமா?
கண்ணோடு எனும் பாடல் காட்சியில் கொரியோகிராஃபி பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யா சூட்கேஸ் டன் பாடுவாரே அந்தப்பாட்டின் உல்டா.அதே போல் ஹேப்பி ஹேப்பீ பாடலின் ஃபினிஷிங்க் டச்சாக சாணியில் கால் வைப்பது இளமைக்குறும்பு.
படத்தின் இயக்குநருக்கு ஒரு கேள்வி.வில்லன் ஹீரோவுக்கு ரூ 25 லட்சம் ஏ டி எம் கார்டு குடுத்து அப்பப்ப் எடுத்துக்கொள்ள சொல்கிறார்.பின் ஒரு சமயத்தில் அந்த வில்லன் கொலை செய்யப்பட்ட பிறகு ஹீரோவைக்கைது செய்யும் போலீஸ் ஆதாரம் இல்லை எனக்கூறி விடுதலை செய்கிறது.கொலை செய்யப்பட்ட பேங்க் ஸ்டேட்மெண்ட்டில் பணம் பெற்றவரது பெயர் இருக்குமே,அந்த விஷயத்தில் கோட்டை விட்டது ஏன்?
விவேக் ஆடும் சாவுக்கு குத்தாட்டம் ஏற்கனவே யுனிவர்சிட்டியில் வந்துடுச்சே?
கரகாட்டக்காரன் மியூசிக்கைபோட்டு ஸ்கூட்டி பெப்பில் ஹீரோ போவதும், நடந்து செல்பவன் கூட அதை கடந்து செல்வதும் புளித்துப்போன காமெடி.
படத்தில் ஆங்காங்கே மொக்கைக்காமெடியும்,கடி ஜோக்குகளும் வருகின்றன.
1.அன்னாசி -அண்ணாச்சி வார்த்தை ஜாலக்காமெடி, பாண்டி பழக்கடை-போண்டி பழக்கடை ஜோக்
2.தற்கொலைக்கு முயலும் ஹீரோ லாரி வரும் வெளிச்சத்தை பார்த்து முன்னால் வந்து நிற்பதும் பின் அது 2 பைக் என உணர்ந்து அசடு வழிவதும் (சின்னத்தம்பி கவுண்டமணியின் மாலைக்கண் காமெடியின். உல்டா)
3.வில்லன் ஹீரோவைப்பார்த்து 10 ஆம் தேதி இந்த கார்டும் எக்ஸ்பயர்டு,நீயும் எக்ஸ்பயர்டு என நக்கல் அடிப்பது.(ஒரு பக்கா லோக்கல் கிட்னாப்பருக்கு அந்த அளவு சென்ஸ் ஆஃப் ஹியூமரும்,நாலெட்ஜும் இருக்குமா என்ன?)
4.இஞ்சின் ஆயில்ல வடை சுட்டியா?உடம்பு இந்த குலுங்கு குலுங்குதே?
5.அவ வைஷ்ணவி இல்லை,வயஸ் ஆனவ என விவேக் புலம்புவது.
6.கிரிக்கெட் பேட்டால போட்டுத்தள்ளுனதால இவன் இனி கிரிக்கெட் சுந்தரம் என அழைக்கப்படுவான் என்பது
7.இந்தப்பக்கம் மசூதி ஏதாவது இருக்குங்களா?
என் வீட்டுக்குப்பக்கத்துல ஒரு மசூதி இருக்கு
வெரிகுட்,உங்க வீடு இருக்கு?
அதைத்தான் தண்ணி அடிச்ச மப்பில கண்டுபிடிக்கவே முடியல.
காரில் கடத்தப்பட்ட ஹீரோயினை ஹீரோ சவுண்ட்டை ஃபாலோ பண்ணியே 8 கி மீ ஓடுவது சாத்தியமே இல்லை.(குருதிப்புனல் கமலே பண்ணிட்டாரே)
ஒரு சீனில் (சாதா சீன்)ஹீரோயின் ஒயிட் &ஒயிட்டில் தலையில் ரோஸ் வைத்து வரும் சீன் கொள்ளை அழகு. (சீன் படமான த்ரீ வே லவ் படத்தில் ஒரு நீக்ரோ ஃபிகர் வருமே)
செல்ஃபோனை கண்டுபிடிச்சவன் வேணா ஜப்பான்காரனா இருக்கலாம்,ஆனா மிஸ்டு காலை கண்டுபிடிச்சவன் தமிழன் தான் என விவேக் கூறுவது எஸ் எம் எஸ் ஜோக்தான்,ஆனால் அதற்கு தியேட்டரில் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்.
அதேபோல் க்ளைமாக்சில் வில்லன் ஃபைட்டின் முடிவில் மோட்டார் போட்டிலிருந்து மல்லாக்க விழுவது செம ரிஸ்கி ஷாட்.
படத்தின் திரைக்கதையில் டைரக்டர் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கும்.ஆனால் வந்தவரை இந்தப்படம் பி ,சி செண்ட்டர்களில் தலா 15 நாட்கள், ஏ செண்ட்டர்களில் 20 நாட்கள் மட்டுமே ஓடும்.முதலுக்கு மோசமில்லாத படம்.