கவித்துவமான டைட்டில்,கண்ணைக்கவரும் ஸ்டில்கள்,கலக்கலான ஃபிகர் என்று சொல்ல முடியாவிட்டாலும் ரசிக்க வைக்கும் அழகுள்ள ஹீரோயின் இத்தனை இருந்தும் இயக்குனரால் ஏன் இந்தப்படத்தை ஹிட் ஆக்க முடியவில்லை?
புதுமுக ஹீரோ ராகுல் முதல் படம் என்ற அளவில் ஓகே.ஹீரோயின் சமந்தாவுக்கு புக் ஆன கணக்கில் இது முதல் படம் ஆனால் ரிலீஸில் 2வது படம்.படத்தின் இயக்குனர் அடிப்படையில் ஒரு ஒளீப்பதிவாளர் என்பதால் படம் முழுவதும் ஒளீப்பதிவு த்னியாகஹ்தெரிய வேண்டும் என்ற ஆர்வம் புரிகிறது.ஆனால் பி சி ஸ்ரீராமாக இருந்தாலும்,சந்தோஷ் சிவனாக இருந்தாலும் கதை,திரைக்கதையில் சரக்கு இல்லை எனில் ஒப்பேற்ற முடியாது என்பதை பொட்டில் அடித்தாற்போல் சொல்லும் படம்.
படத்தோட ஓப்பனிங்லயே ஹீரோ ஹீரோயினிடம் காதல் வசப்படுவதும்,ஹீரோயின் அதை சட்டை செய்யாமல் அலட்சியப்படுத்துவதும்,அதற்கடுத்த சீனே ஹீரோ காதலை உதறுவதும் ரொம்ப ஓவர்.என்ன தான் ஃபாஸ்ட் உலகமாக இருந்தாலும் இப்படியெல்லாமா நடக்கும்?அதை விட சூப்பர் காமெடி அடுத்த 5வது நிமிஷமே ஹீரோயின் ஹீரோவின் ஊருக்கே வந்து நான் மனசு மாறிட்டேன்,ஐ லவ் யூ என்பது செம காமெடி.காதலை கேலிக்கூத்து ஆக்கி விட்டார்கள்.
பம்பாய் படத்தில் மணிரத்னம் காதல் டேக் ஆஃப் ஆவதை அவசர அவசரமாக காண்பித்தார் என்றால் அதற்கு காரணம் இருந்தது,படத்தின் பின்பாதி மும்பைகலவரத்தை அடிப்படையாகக்கொண்டு திரைக்கதை செல்ல வேண்டியக் கட்டாயம்.இந்தப்படத்திற்கு என்ன?
புதுமுக ஹீரோ முகசாயலில் எக்ஸ் இடை அழகி சிம்ரனின் எக்ஸ் லவ்வர் ராஜூசுந்தரம்போலவும்,காதல் வைரஸ் ரிச்சர்டு(ஷாலினி அஜித்தின் தம்பி) போலவும் இருப்பதால் ஈஸியாக மனதை கவர்கிறார்.வசன உச்சரிப்பும்,பாடி லாங்குவேஜும் போகப்போக கற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கலாம்.
ஹீரோயினின் அழகை ஹீரோ புக்ழ்ந்து பாடும் ஓப்பனிங்க் சாங்க் ஆன “நீ ஒன்றும் அழகில்லை” பாட்டு அங்காடித்தெருவின் சூப்பர்ஹிட் மெலோடி ஆன அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாட்டின் உல்டா.யூ டூ வைரமுத்து சார்?
ரூம் ஃபுல்லா காதலியின் ஃபோட்டோ ஒட்டி வைப்பதும்,அதைகொஞ்சுவதும் ஓவர் செயற்கை.குஷி படத்தில் எஸ் ஜே சூர்யா செய்த ஓப்பனிங் சீன் டெக்ன்க்கை ரவி இதில் காப்பி அடித்திருக்கிறார்.
காதலித்துப்பார் கவிதை வரும் என்ற புகழ் பெற்ற கவிதையை இன்னும் எத்தனை படத்தில் பார்க்க வேண்டி இருக்குமோ தெரியவில்லை.அதைத்தான் ஜோடி படம் உட்பட பல படங்களில் பிரித்து மேய்ந்து விட்டார்களே?
இயக்குனர் ஒரு அவசரக்காரர் என்று நினைக்கும்ப டி படத்தின் காட்சிகள் படபட என கட் ஆகி கட் ஆகி ஸ்பீடு ஆக போகுது,அது ஏன்?படம் ஸ்பீடு என பெயர் வாங்கனும்னா திரைக்கதை ஸ்பீடா இருக்கனும்.இப்படி எடிட்டர்ட்ட சொல்லி பட பட கட்டிங்க் கூடாது.
ஹீரொயின் ஒரு காட்சியில் எருமைகளுடன் வருகிறார்.அது காமெடிக்கா?அழகியல் வெளிப்பாட்டுக்காக வைக்கப்பட்டதா?இந்த மாதிரி பல கேள்விகள் இயக்குனர் பதிலுக்காக காத்திருக்கு.
தேடித்தேடிப்பார்த்து நான் கண்ட வசனத்தில் மனதைக்கவர்ந்த சீன்கள்.
1. என்னப்பா,வயக்காட்ல பொண்ணுங்களையும் காணோம்,அவங்ககிட்ட கடலை போடற பசங்களையும் காணோம்?
2. பொண்ணு யாரு?
இன்னும் மேரேஜ் ஆகலை.
ஓ,தள்ளிட்டு வந்ததா?
3.பாப்பா,உனக்கு என்ன வயசு? 30
எத்தனை வருஷமா? ம்,30 வருஷமா.
4.புருஷன் சந்தோஷமா எந்த வேலை செய்தாலும் அது இந்தப்பொண்ட்டாட்டிங்களுக்கு பிடிக்காதே?
5.உங்களை நம்ப முடியாது.நான் வீட்ல இல்லைனா வேலைக்காரியை கரெக்ட் பண்ணுவீங்க,ஆஃபீஸ் போனா டைப்பிஸ்ட்டை கரெக்ட் பண்ணுவீங்க.
புது மண ஜோடிகள் தனி அறையில் கொஞ்சி குலாவும்போது “எனக்கு இது புதுசா இருக்கு என ஹீரோ சொல்வதும்,அதை ஒளிந்திருந்து பார்க்கும் வாண்டுகள் “அங்கிள் .எங்களூக்கும் இது புதுசுதான் என கலாய்ப்பது ரசனையான சீனாக இருந்தாலும் சமூக நலன் கருதி அந்த மாதிரி சீன் வைக்காமல் இருப்பது நல்லது.
என்ன பிடிக்கும் பாட்டில் ஒளிப்பதிவாளர் பின்னி எடுக்கிறார் என்றாலும் அந்த கட் ஷாட் டெக்னிக் கதிரின் காதல் வைரஸ் படத்தில் ஏய் ஏய் என்ன ஆச்சு உனக்கு பாட்டு எடுக்கப்பட்ட ஸ்டைலின் காப்பி.அதே போல் ஆணூம் ,பெண்ணும் இல்லை என்றால் பாட்டு ம்ணிரத்னத்தின் அலைபாயுதே படப்பாடலான செப்டம்பர் மாதம் பாட்டின் உல்டா.
கே பாலச்சந்தரின் கல்கி ஹீரோயின் மாதிரி கேரக்டரைசேஷன் செய்த டைரக்டர் அதை நிறுத்தி நிதானமாக ,தெளிவாக சொல்ல வேணாமா?
திடீர் என ஊரை விட்டு ஓடிப்போன தன் மகளை எந்தத்தந்தையாவது சிலாகித்துப்பாராட்டுவாரா?ஃபாரின் படத்தில் கூட நடக்காது.சிலிப் ஆன பல கட்டங்களில் இதுவும் ஒன்று டைரக்டர் சார்.மாதம் ரூ 1 லட்சம் சம்பளம் வாங்கும் ஹீரோயின் வாயிலிருந்து துட்டு என்றெல்லாமா வார்த்தைகள் வரும்?
படத்தில் ஆறுதலான் ஒரே விஷயம் சந்தானம்.இடைவேளைக்குப்பிறகு தான் வருகிறார்.முக்கியமான காமெடியை சொல்ல மறந்துட்டனே,45 நிமிஷத்துல படத்துல இடைவேளை வந்துடுது.இடைவேளைக்குப்பிறகு 50 நிமிஷம் ஓடுது.மொத்தமே ஒன்றரை மணி நேரம்தான் படம( ஒரு வேளை படத்தை இங்கிலீஷ் படம் மாதிரி எடுக்கனும்னு புரொடியூசர் சொல்லி இருப்பாரோ?)
பஸ் டிரைவராக வரும் சந்தானம் பஸ் பயணி செல் ஃபோனில் ஸ்டாப் இட் என கத்துவதைக்கேட்டு சடன் பிரேக் போடும் சீன் செம கைதட்டல்.கவுண்டமணியின் பாடிலேங்குவேஜை ,அவர் ஸ்டைல் ஆஃப் டயலாக் டெலிவரியை சந்தானம் தவிர்ப்பது நல்லது.எவளைப்பார்த்தாலும் என் பொண்டாட்டி மாதிரியே தெரியறா,என அவர் புலம்புவதும்,மனைவியிடம் இனி காலிங்க் பெல்லை உன் காதுக்குள்ளதான் வைக்கனும் என கலாய்ப்பதும் ரகளையான சீன்கள்.
நல்லாருக்கற முடியை கலைச்சு விட்டுட்டு ஏண்டி இங்கே வர்றீங்க? என அவர் கலாய்ப்பது அனைத்து பந்தா பார்ட்டி பார்வதிகளுக்கும் பொருந்தும் என்பதால் தியேட்டரில் செம விசில்.அவரது செல் ஃபோனில் வைத்திருக்கும் ரிங்க்டோன்(கா கா கா எனும் பராசக்தி பாடல்),கலரிங்க் ஹேர் விக் என படத்தின் ஒரே பூஸ்ட் அப் அவர் தான்.அவர் சீட்டுக்கு அடியில் பாம் என ஃபோன் வந்ததும் என்னது கண்ணி வெடியா? அதை ஏண்டா அங்கே வெச்சீங்க?வேற இடம் கிடைக்கலை? என புலம்புவது சூப்பர்.ஆனால் அந்த மாதிரி காமெடி ஜெய்ஹிந்த் படத்துலயே கவுண்டமணி செந்தில் பண்ணிட்டாங்க.
இடைவேளை ட்விஸ்ட்டுக்காக வரும் வில்லன் எடுபடவில்லை.லவ் கிஃப்ட்டை ஹீரோயினுக்கு கொடுக்கும் ஹீரோ எக்ஸ்பிரஸ்சன்ஸ் எப்படி இருக்க வேணும்? ஆனால் அவர் என்னடாவென்றால் பக்கோடா பொட்டணம் பிரிப்பதைப்போல் தேமே என முகத்தை வைத்திருக்கிறார்.அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் எல்லாம் என்னப்பா பண்ணுனீங்க?
நீயா? நானா? புரோகிராம் மேல டைரக்டருக்கு என்ன கோபமோ அதை ஒரு வாரு வாரி இருக்கார்.(பதிலுக்கு விஜய் டி வி ல இந்தப்படத்தை ஒரு கிழி அல்லது 9 கிழி கிழிக்கலாம்.இயக்குனர் சீமான் அந்த ஒரு சீனில் வந்து கவர்ந்தாலும் கடுப்பில் இருக்கும் ஆடியன்ஸை அது சமாதானப்படுத்தாது,
அதே போல் ரொம்ப முக்கியமான சீன் ஆன கல்யாண முகூர்த்தப்புடவையை தவறுதலாக வேலைக்காரிக்கு கிஃப்ட்டா குடுக்கும் சீன் செம சொதப்பல்.நாடகத்தனமாய் அப்படியா அந்த வேலைக்காரியை ஹீரோ முன் ஓட விடனும்?
கல்யாணத்துக்கு முன் லிவிங்டொகெதர் தம்பதியாய் வாழ்வதால் ஹவுஸ் ஓனர் காலி பண்ணசொல்வதும்,அடுத்த சீனிலேயே லேப்டாப்பில் தேடி 50 லட்சம் மதிப்புள்ள பங்களாவை வாங்குவதும்,அடுத்த 10 நிமிஷத்துல்யே அந்த பங்களாவை அம்போ என விட்டு இருவரும் ஹைதராபாத் 30 நாள் கேம்ப் போவதும் டைரக்டரின் லாஜிக் மீறலை காண்பிக்கும் முட்டாள்தனமான சீன்கள்.
எச்சரிக்கை 1 - மனசுல என்ன நினைச்சுட்டு படத்தை டைரக்டர் எடுத்தார்,புரொடியூசர் என்ன நினைச்சு இதற்கு ஃபைனான்ஸ் பண்ணினார் என யாராவது விளக்கினால் அவருக்கு 1000 பொற்காசுகள் பரிசு.
எச்சரிக்கை 2 - ஏ ,பி ,சி ,டி , ஈ,எஃப் என எந்த செண்ட்டரில் இந்தப்படம் 10 நாட்கள் ஓடினாலும் ஓட்டிய தியேட்டர் ஓனருக்கு 1 லட்சம் பரிசு.