Saturday, August 14, 2010

ஹாலிவுட் சினிமா விமர்சனம்-THE EXPENDABLES 18+

நம்ம கோடம்பாக்கத்துல ரஜினி,கமல்,அஜித்,விஜய்,சூர்யா,விக்ரம் இவங்க எல்லாம் சேர்ந்து நடிச்சா எப்படி இருக்கும்?(தியேட்டர்ல எப்படியோ தியேட்டருக்கு வெளியே ரசிகர்களுக்குள்ள ஒரே அடி தடியா இருக்கும்) இங்கே சாத்தியமோ ,இல்லையோ ஹாலிவுட்டில் சாத்தியமாகி இருக்கிறது.
படத்தோட மக்கள் தொடர்பும் ,போஸ்ட்டர் டிசைனும் ரொம்ப மோசம்.ஏதோ டப்பிங்க் பட போஸ்டர்  மாதிரி..

படத்தின் இயக்குனரும் ,நாயகனும் ஃபர்ஸ்ட் பிளட்,ராம்போ புகழ் சில்வர்ஸ்டர் ஸ்டாலின் .விளம்பரத்தைப்பார்த்து ஏதோ ஆபாவாணனின் இணைந்த கைகள் மாதிரி பிரம்மாண்டப்படம் என நினைத்தால் அது சுயம்வரம் மாதிரி ஒரு அடாசு படம்.

ஆரம்பக்காட்சியில் சில வசனங்களை ரசிக்க முடிகிறது.

காலிங்பெல் சத்தம் கேட்டு “யாரது?” என ஒரு ஃபிகர் கேட்க, நம்மாளு நீ தூங்கறப்பக்கூட உன்னை ரசிக்க ஒருத்தன் வருவானே அவன்தான் என ஜொள் விட நாமும் ஏதோ சுவராஸ்யமான படத்துக்கு தான் வந்திருக்கோம் போல என நம்பி நிமிர்ந்து உட்கார்ந்தால்...?

நீ என்ன பண்றே?என்ன வேலைல இருக்கே?ஏதாவது சொல்றியா?

என்ன வேலை செய்யறேன்கறது முக்கியம் இல்ல,எப்படி உன்கிட்ட நடந்துக்கறேன்கறதுதான் முக்கியம்.

இப்படி நடக்கும் ஊடல் காட்சிகள் ரசனையான கவிதைகள்.
தமிழில் பார்த்தால் பல காட்சிகள் வினோதமாக தெரிகிறது.

இது நம்ம ஆளுதான்

அப்படியா,இன்னா பேரு கண்ணு?

த ட்ரான்ஸ்போட்டர் ஹீரோவை கெஸ்ட் கேரக்டர் எனக்கூறி கூட்டி வந்து நொங்கு எடுத்து விட்டார்கள்.அவரது தலையை கவுண்டமணி செந்திலை நக்கல் அடிப்பது போல் சர்வசாதரணமாக கிண்டலடிக்கிறார்கள்.

உன் தலையை பார்த்தா பானையை கவுத்து வெச்ச மாதிரி இருக்கு.

ஒரு புராஜக்ட்டை செய்ய அழைத்து வரப்படும் 3 திறமைசாலிகளுக்கிடையே நடைபெறும் உரையாடல்கள்

இந்த வேலையை கத்துக்குட்டிங்கதான் செய்வாங்க,என்னை விட்டுடுங்க என அர்னால்டு ஸ்வார்செனேகர் சொல்ல  உடனே இதை செஞ்சா எவ்வளவு பணம் தருவீங்க? என ஜெட்லீ கேட்க கத்துக்குட்டிங்கறதை நிரூபிச்ட்டான் என நையாண்டி செய்ய ஒரே ரகளை தான்.
படத்தின் ஹீரோ சில்வர்ஸ்டர்ஸ்டோலன் மும்பை எக்ஸ்பிரஸ் கமல் மாதிரி கெடப்பில் வருகிறார்.எடுபடவில்லை.படம்,அவர் நடிப்பு எதுவும்.ஒரு அபத்தமான காட்சி.

எதிரியின் பாசறைக்குள் நுழைந்த ஹீரோ &கோ விமானத்தில் பறந்தபடியே ஃபயர் சர்வீஸ் மாதிரி பெட்ரோலை பைப் மூலம் எதிரியின் இடத்தில் தெளிக்கின்றனர்,பின் ஷூட் பண்ணி வெடிக்க வைக்கிறாங்க.அப்போ இவங்க பயணம் பண்ற விமானமும்தானே தீப்பிடிக்கும்?பி எஸ் ஸி பிசிக்ஸ் சில் அரியர் வெச்சவன் கூட இதை சொல்லிடுவானே.சூப்பர் ஹிட் படங்கள் குடுத்த  இவருக்குத்தெரியாமல் போன மாயம் என்ன?

படத்தின் முக்கிய சொதப்பல் ஹீரோயின்.குதிரை மாதிரி நீள் முகம்.காமரா எந்த கோணத்தில் அவரை காண்பித்தாலும் ரசிக்க முடியவில்லை.படத்தோட கதையே ஆபத்துல மாட்டி இருக்கற காதலியை காதலன் நண்பர்களோட வந்து காப்பாத்தறதுதான் அப்படிங்கறப்போ நல்ல ஃபிகரா போட்டிருக்க வேணாமா?
இடைவேளைக்குப்பிறகு யார் யாரை  சுடறாங்க, யார் தப்பிச்சாங்க ஒண்ணும் புரியல.கிராஃபிக்ஸ் காட்சிகள் ஜூராசிக்பார்க் மாதிரி இருக்கும்னு பார்த்தா நம்ம ராமநாராயணனின் ஆடிவெள்ளியை விட மோசமாக இருக்கு.

க்ளைமாக்சில் ஜெட்லீ பேசும் டயலாக் நல்லாருக்கு.நான் ரொம்ப உயரனும்னு நினைச்சேன்.ஆனா சண்டை போடறப்பக்கூட எம்பி எம்பிதான் சண்டை போட வேண்டி இருக்கு.ஆண்டவன் என்னை குள்ளமாவே படச்சிட்டான்.
சரி ,படத்தைத்தான் கெடுத்துக்குட்டிச்சுவர் பண்ணிட்டோம்,ஏதாவது கண்ணுக்கு குளுமையா சீனாவது வெப்போம்கற பேசிக் நாலெட்ஜ் கூட டரக்டருக்கு இல்ல.நாம் என்ன செய்வது?ஸ்டில்களில் பார்க்கும் அளவு கூட திரையில் இல்லை.
இதுல இருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டிய நீதி என்னன்னா பெரிய ஹீரோ படம்னாலும் ரிசல்ட் கேட்டுட்டுதான் போகனும்.