Tuesday, August 03, 2010

ஜாக்கிசேகர் அண்ணனுக்கு ஒரு விளக்க கடிதம்

அன்பான ஜாக்கி அண்ணன் அவர்களுக்கு,
நான் 1992 ஆம் ஆண்டிலிருந்து பத்திரிக்கை உலகில் எழுதி வருகிறேன்.18 வருடங்களாக இந்தத்துறையில் எழுதி இப்போதுதான் 20 தினங்களாக பதிவுலகுக்கு வந்துள்ளேன்.என்னைக்கவர்ந்த பதிவுலக படைப்பாளிகளான கேபிள் சங்கர்,கீதப்பிரியன்,உண்மைத்தமிழன்,ஜாக்கிசேகர்,சவுக்கு உட்பட 14 படைப்பாளிகளின் படைப்புகளை அவர்கள் பிளாக் முகவரியோடு பாக்யாவில் எழுதினேன்.

உங்கள் படைப்பை பிரசுரிக்கையில் தவறுதலாக எனது பெயர் வந்து விட்டது.
நன்றி ஜாக்கிசேகர் எனவும் தொகுத்து வழங்கியது சி பி எஸ் எனவும் வர வேண்டியது.இதை நான் உடனடியாக பாக்யா ஆசிரியரிடம் ஃபோன் மூலம் தெரியப்படுத்தி விட்டேன்.நீங்கள் பல முறை மெய்ல் அனுப்பிக்கொண்டே வருவதாக அவரும் சொன்னார்.

நமக்குள் ஃபோன் தொட்ர்பு உண்டு என்பதால் நீங்கள் தாராளமாக என்னிடமே கேட்டிருக்கலாம்.
கொலை செய்த தூக்குத்தண்டனைக்கைதிக்குக்கூட தன் தரப்பு வாதத்தை சொல்ல உரிமை உண்டு.
மற்றவர்கள் படைப்பை திருடும் பழக்கம் எனக்கு இல்லை.அதை சரக்கு இல்லாதவர்கள்தான் செய்வார்கள்.இவ்வளவு பப்ளீக்காக ஒருவர் அடுத்தவர் படைப்பை திருடத்துணிவார்களா?
உங்களுக்கு தெரியாமல் போய் விடுமா?

வருகிற பாக்யா இதழில் இது பற்றிய விளக்கம் வரும் .நன்றி அண்ணே