தமிழ்மணம் டாப் 20 பிளாக் தர வரிசப்பட்டியல் வெளியான பிறகு எங்கே பார்த்தாலும் இதைப்பற்றியே பேச்சு.பதிவர்களிடையே பரபரப்பு..உற்சாகம்.இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படப்போகின்றன.?
பிளஸ்
1.வெற்றி பெறும் பதிவர்களுக்கு பாராட்டுகள்,வாழ்த்துக்கள் குவிவதால் பதிவர்களுக்கிடையே புரிதல்,சந்தோஷம்,படைப்புத்திறனின் ஊக்குவிப்பு வளர்கிறது.
2.இதுவரை ஏதோ ஒரு பதிவு போட்டோம் என்ற எண்ணத்திலிருந்து இனி தரமான நல்ல பதிவு போட்டு பேர் வாங்க வேண்டும்,இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்கிறது.
3.ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கூறிக்கொள்வது,கேலி பேசுவது,அடுத்த பதிவு எப்போ என கேட்டுக்கொள்வது என சிந்தனை முழுவதும் பதிவு பற்றியே குவிகிறது.
4.பதிவர்களின் படைப்பில் இப்போது ஒரு மாற்றம் தெரிகிறது.உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.மொக்கைப்பதிவு போட்டவர்கள் அரசியல்,சமூக விழிப்புணர்வு என வெரைட்டி காண்பிக்கிறார்கள்.கவிதை எழுதுவதில் தபுசங்கர்க்கு நிகரானவர் என பெயர் பெற்ற கவிதைக்காதலன் சமீபத்தில் சினிமா விமர்சனம்,சினிமா கட்டுரை என கலக்குவது ஒரு உதாரணம்.
5.அங்கீகாரம் மட்டுமே ஒரு படைப்பாளனை ஊக்குவிக்கும் என்ற நியதியின் படி தமிழ்மணத்தின் அங்கீகாரத்துக்காக படைப்பாளிகள் ஏங்க ஆரம்பித்து விட்டார்கள்,அவர்கள் சிந்தனைகள் எல்லாம் பதிவின் தரத்தை மேம்படுத்துவதில் இருப்பது நல்ல வரவேற்கத்தக்க மாற்றம்.
6.சினிமா விமர்சனத்தின் அடையாளம் என புகழப்பட்ட கேபிள் சங்கரின் மைனா பட விமர்சனத்தின் இண்ட்லி ஓட்டுக்களை விட ஃபிலாசபி பிரபாகரனின் இண்ட்லி ஓட்டுக்கள் அதிகம் ஆனதும்,அந்த விமர்சனத்தை கேபிள் சங்கர் சாரே பாராட்டியதும் ஆரோக்யமான மாற்றம்.
7.விசிட்டர்ஸ் டுடே ஆவ்ரேஜ் 300 டூ 500 கொண்டுள்ள கோகுலத்தில் சூரியன் வெங்கட் ஒரே ஒரு இடுகை மூலம் 1000 விசிட்டர்ஸ் வரவைத்ததும்,அவர் தொடர்ந்து 2 வாரங்களாக நெம்பர் 8 பிளேஸ்சில் இருப்பதும் பாராட்டத்தக்கது.
8.என்கவுண்ட்டர் சரியா ,தவறா என ஒரே ஒரு கேள்வி கேட்டு மங்குனி அமைச்சர் பெற்ற தமிழ்மண ஓட்டுக்கள் பிரம்மிக்கத்தக்க சாதனை.அவரது சொல்லாடல்,நகைச்சுவை நயம் இதெல்லாம் நாம் பின்பற்ற வேண்டியது..
9.பதிவும் நகைச்சுவை,பதிவின் தரத்தை விட பின்னூட்டங்களீன் மூலம் நகைச்சுவையை அள்ளித்தெளித்து கலாய்த்தல் எனும் நவீன காமெடி மூலம் பன்னிக்குட்டி ராமசாமி,மங்குனி,பட்டாபட்டி,சிரிப்புப்போலீஸ் ரமேஷ் இவர்கள் 4 பேரும் பெறும் பின்னூட்டங்கள் சர்வ சாதாரணமாக 200 தொடுவது உன்னிப்பாக கவனிக்கத்தக்கது.
10.நல்ல நேரம் சதீஷ் சன் டி டி ஹெச்,ஐ சி ஐ சி 2 பதிவுகள் மூலம் தனது பாணீயிலிருந்து விலகி புதிய பாதையில் போய் பாராட்டுக்களையும் ஜீஜிக்ஸில் ரூ 500 பரிசும் பெற்றதும் பாராட்டத்தக்கது.தொப்பிதொப்பி அரசியல் கார்ட்டூன் பதிவின் மூலம் அட்டகாசமான ராஜ் பாட்டையை தொடங்கியதும் நல்ல ஆரம்பமே...
11. புதிய தலை முறை இதழில் வந்த யுவகிருஷ்ணாவின் கட்டுரைப்படி அலெக்ஸா ரேங்க்கிங்க்கில் முதல் 2 இடங்களைப்பிடித்ததாக சொல்லப்படும் கேபிள் சங்கர் (62000 +), ஜாக்கி சேகர் (80000 +) இருவரும் ஜனரஞ்சக பதிவர்கள்,சினிமா விமர்சனம் ,நாட்டு நடப்பு,என சகலமும் கலந்து கட்டி அடிப்பவர்கள்.இவர்களை விட அலெக்ஸா ரேங்க்கில் முன்னிலை வகிக்கும் வந்தே மாதரம் சசி (56670) டெக்னிக்கல் பதிவுகளை மட்டுமே போட்டு குறுகிய காலத்தில் இந்த அளவு வளர்ச்சி பெற்றது அபாரமானது.
டிஸ்கி - நான் தினமும் 2 மணீ நேரம் மட்டுமே நெட்டில் உள்ளதால் அதிகமாக பிற தளங்களுக்கு செல்ல முடிவதில்லை.எனவே என் லிஸ்ட்டில் வராத எத்தனையோ தளங்கள் கலக்கிகொண்டிருக்கலாம்.அவர்கள் என்னை மன்னிக்க.
மைனஸ்
1.ஓட்டுக்கள்,பின்னூட்டங்கள்,ஹிட்ஸ் இந்த 3 மட்டுமே தர வரிசையை நிர்ணயிக்கிறது.நல்ல படைப்புக்கள் பல இந்த 3ம் இல்லாமலே வந்து போய்க்கொண்டிருக்கின்றன.
2.கமெர்சியல் சினிமா,ஆர்ட் ஃபிலிம் என 2 வகையில் படங்களை தர வரிசைப்படுத்துவது போல் பிளாக்கிலும் 15 பிளாக்ஸை ஓட்டுக்கள்,பின்னூட்டங்கள்,ஹிட்ஸ் மூலம் தேர்ந்தெடுத்து 5 பிளாக்சை தர வரிசையில் தேர்ந்தெடுக்கலாம்.
3.அப்படிக்கூறியதற்காக இப்போது வரிசைப்படுத்திய 20 பிளாக்குகளும் தரம் இல்லாதவை என அர்த்தம் அல்ல.இவைகள் தரமானவை தான்.ஆனால் யாராலும் கவனிக்கப்படாத தரமான பிளாக்குகள் கவனிக்கப்பட வேண்டும் என்பதே என் வாதம்.
4.எனது அனுபவத்தில் அந்த மாதிரி அதிக பதிவு போடாவிட்டாலும் குவாலிட்டி பதிவர்கள் 1 சேட்டைக்காரன் 2 தொப்பி தொப்பி 3 ஃபிலாசபி பிரபாகரன் 4 குசும்பன் 5 கும்மாச்சி.
5 ராம நாராயணன் மாதம் ஒரு படம் எடுப்பார்,ஷங்கர்,மணிரத்னம் 2 வருடங்களூக்கு ஒரு படம் கொடுப்பார்.ஆனால் அவர்கள் இருவரின் ஒரு படத்தின் தரம் ராம நாராயணன் கொடுக்கும் 24 படங்களை விட அதிகம்.
பிளஸ்களை மேன்மேலும் பிளஸ் ஆக்குவோம்,மைனஸ்களை பிளஸ் ஆக்கும்முயற்சியில் ஈடுபடுவோம்,அனைவரும் உழைப்போம் எல்லோரும் மாற்றி மாற்றி வெற்றி காண்போம்.வெற்றியிலும் ,உழைப்பிலும் தானே மனிதனின் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது?