Friday, June 24, 2022

CAUSALIDAD 2021 (CAUSALITY) -சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்


 புதுமைப்பித்தன்  இரா  பார்த்திபனின் இரவின் நிழல்  படம்  சிங்கிள்  ஷாட்  ஃபிலிம்னு  கேள்விப்பட்டு அந்த  மாதிரி  படம்  எப்படி  எடுக்க முடியும்?னு  சர்ச்  பண்ணதுல  இப்படி  ஒரு சிங்கிள்  ஷாட் ஃபிலிம்  கிடைச்சுது.ஒண்ணே  முக்கால்  மணி  நேரம்  ஓடுது. இந்த  மாதிரி  படம்  எடுக்க  முக்கிய  தேவை  அனைத்து  ஆர்ட்டிஸ்ட்களின்  ஒருமித்த  ஒத்துழைப்பு , இயக்குநரின்  திட்டமிடல் ,  ஒளிப்பதிவாளரின்  திறமை .  எடிட்டருக்கு  வேலையே  இல்லை 


தமிழில்  கமல்  நடிச்ச  குணா  படத்தில் ஒரு  ரூமுக்குள்ளே  சுற்ற்ச்சுற்றி  வரும்  காட்சி விமர்சகர்களிடயே  நல்ல  பாராட்டைப்பெற்றது . ( 3  நிமிசம்_)  அர்விந்த்சாமி  நடிச்ச  புதையல்  படத்தில்  ஒரு  பாடல்  சிங்கிள்  ஷாட்டில்  எடுக்கபப்ட்டது ( 4  நிமிசம் )   கேப்டன் பிரபாகரன்  படத்தில்  கோர்ட்  காட்சிகளில்  விஜயகாந்த் பட்டையைக்கிளப்பி  இருப்பார் ( 5  நிமிசம்) இதை  எல்லாம்  கவனமாபார்த்தம்னா  சிங்கிள்  ஷாட்  மூவி  எவ்ளோ  கஷ்டம்னு  தெரியும்

\Spoiler alert

டாக்டர்   கிட்டே  அப்பாயிண்ட் மெண்ட்  வாங்கி  அவரை  சந்திக்க  ஹீரோயின்  ஒரு  பார்ல  வெய்ட்  பண்றா, ஒரு  மணி  நேரத்துக்கும்  அதிகமா  டைம்  ஆகியும்  அவர்  வர்ல. ஃபோன் பண்ணா  அட்டெண்ட்  பண்ணல  , மெசேஜ்  மட்டும் வருது. அப்போ  அவர்  குடிக்கற பானத்துல  யாரோ  எதையோ  கலக்கறாங்க. ஹீரோயின்  பொறூத்துப்பொறுத்துப்பார்த்து  கிளம்பிடறா   வழில  மயக்கம்  போட்டு  விழறா


 ஒரு  பிச்சைக்காரன்  அவளை  தூக்கிட்டுப்போய்  ஒரு  ஹாஸ்பிடல்  முன்  போட்டுட்டுப்போறான், அவ  ஃபோனை  லபக்கிடறான். ஹாஸ்பிடல்  செக்யூரிட்டி ஹீரோயினை  தூக்கி  அட்மிட்  பண்றப்போ  அவளோட  பர்சை  ஆட்டையைப்போட்டுடறான், ஹீரோயினை ட்ரீட்மெண்ட்க்கு  உட்படுத்தும்  நர்ஸ் இப்படிக்காப்போய்ட்டு அப்படிக்கா  வரதுக்குள்ளே  ஹீரோயின்  ஆளைக்காணோம். ஒரு  மர்ம  நபர்  ஹீரோயினை  ஒரு  சேர்ல  உக்கார  வெச்சு  அதே  ஹாஸ்பிடல்ல்ல  ஒரு  ரூம்ல  அடைச்சு  வைக்கிறான்


அவன்  யாரு? எதுக்காக  ஹீரோயினை   அடைச்சு  வெச்சான்? நர்ஸ்  ஹீரோயினைக்காப்பாற்ற  எடுத்த  முயற்சிகள் என்ன?  என்பதுதான்  கதை 


ஆக்சுவலா  நர்ஸ்  தான்  படத்தில்  அதிக  நேரம்  வர்றாங்க  அவங்கதான் மெயின்   ஹீரோயின்னு  சொல்லலாம் லாரா  நோவா  நல்ல  நடிப்பு 


ஒரே ஹாஸ்பிடலுக்குள்  கதை  நடப்பதால்  ஷாட்ஸ்  எல்லாம்  ரிப்பீட்  ஆகாமல்  சுவராஸுயமாய்   காட்ட  வேண்டிய  பொறுப்பு  ஒளிப்பதிவாளருக்கு . பின்னணி  இசை  சுமார்  ரகம்  தான் 



சபாஷ்  டைரக்டர் 


1   பொதுவா  ஹாஸ்பிடல்ல  எப்பவும் கூட்டமா  இருக்கும் , அப்போ  க்தை  பகலில்  நடந்தா  சிங்கிள்  ஷாட்  மூவி  எடுப்பது  சிரமம் அதனால்  நைட்  ஷிஃப்டில் நடக்கும்  க்தையாக  எழுதியது  குட் 


2  ஹீரோயின்  எந்த  டாக்டரிடம்  அப்பாய்ண்ட்மெண்ட்  வாங்கினாரோ  அதே  டாக்டர்  தான்  இந்த ஹாஸ்பிடலில்  டாக்டர்  என்பதை  நர்ஸ்  கண்டுபிடிக்கும் இடம் 


3  ஹீரோயின்  பர்சை  ஆட்டையைப்போடும்  செக்யூரிட்டி  அவரது  ஐ டி  கார்டு  பார்த்து  பெயரைக்குறிப்பிட்டு  அவருக்கு என்ன  ஆச்சு? என  கேட்கும்போது  மயக்கமா  இருந்த  பெண்ணின்  பெயர்  உனக்கு  எப்படித்தெர்யும்? எனக்கேட்டு  மடக்கும்  சீன்  


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  இந்த  ஹாஸ்பிடல்ல  10  வருசமா  இருக்கேன்  என்  மனைவி  இறந்து  10  வருசம்  ஆச்சு  என  ஹீரோ  நர்சிடம்  சொல்றான் அத்தனை  வருசமா சக  பணியாளி  பற்றி  எந்த  விபரமும்  அறியாமலா  ஒரு  நர்ஸ்  இருப்பா? 


2   பொதுவா  ட்யூட்டி  முடிஞ்சதும்  வீட்டுக்குக்கிளம்பதான்  பார்ப்பாங்க  , ஆனா  நர்ஸ்  காணாம போன  பெண்ணை  தேடிட்டு  இருக்கா  அவ்ளோ  ஆர்வம்  எப்படி  வந்தது? ஷிஃப்ட்  மாற்றி  விட  வந்த  நர்சிடம்  மேட்டரை  சொல்லிட்டு  கிளம்பலாமே?அதுக்கு  விளக்கம்  கதைல  காட்டலை 


3   பேச்சிலர்ஸ்  ரூம்ல  பெண்களின்  கிளாமர்  படங்கள்  ஒட்டி  வெச்சிருப்பாங்க , சலூன்களிலும்  .. இது  தான்  நடைமுறை  ஆனா  ஹாஸ்பிடல்  செக்யூரிட்டி  டிரஸ்  வைக்கும்  லாக்கர்  ரூமில்  அப்படி  ஒட்டி  வெச்சிருக்கான் . இதை  நர்ஸ்  கண்டுபிடிச்சு  அவன்  மேல  சந்தேகப்படறா. இதை  அவன்  யூகிக்க  மாட்டானா?சிசிடிவி  காட்டிக்குடுத்துடாதா?


4  சிசிடிவி  ஃபுட்டேஜை  செக்  பண்ணு  என  நர்ஸ்  செக்யூரிட்டி  கிட்டே  சொன்னப்ப  அவன்  கண்டுக்கலை. அப்பவே  டவுட்  வந்திருக்க  வேணாமா? திரும்பத்திரும்ப   அவன்  கிட்டேக்கெஞ்சிட்டு  இருப்பது  ஏன் ?


5  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டாக  வரும்  சீன்  இமைக்கா  நொடிகள் , த  இன்விசிபிள்  கெஸ்ட் , எவரு ,  பதலா  உட்பட  பல  பட்ங்களில்  துவைச்சுக்காயப்போட்டாச்சு. ஒரு  ஆக்சிடெண்ட்  நடந்து  ஒரு  உயிர்  போகுது . அதுக்குக்காரணமான  டிரைவர்  ஹிட்  அண்ட்  ரன்  என  ஓடிடறான், அவனைப்பழி  வாங்கும்  பாதிக்கப்பட்டவர்  உறவினர்


ரசித்த  வசனம் 


  எல்லாக்குற்றவாளிகளும்  ஒரு  நாள்  தண்டிக்கப்படுவாங்க , இங்கே எல்லாருமே  ஏதோ  ஒரு  விதத்தில்  குற்றம்  செஞ்சவங்க தான் , மிஸ்டர்  க்ளீன்  அப்டினு   யாரும்  கிடையாது 


 சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சிங்கிள்  ஷாட்  சாதனைக்காக  இழுத்து சொல்லப்பட்டிருக்கும்  கதை சாதாரணமா  எடுத்தா  ஒரு  மணி  நேரத்தில்  கட்  பண்ணி  இருக்கலாம், க்ரிஸ்பா  இருந்திருக்கும்., ஸ்ளோ  மூவிதான் . 18+    அப்டினு  வார்னிங்  இருந்தாலும்  அடல்ட் கண்ட்டெண்ட்  எதுவும் இல்லை  அமேசான்  பிரைம்ல  பார்க்கலாம்