விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்வில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களின் தொகுப்புதான் இந்தப்படம்.எந்த வித எதிர்பார்ப்பும், பில்டப்பும் இல்லாமல் ரிலீஸ் ஆகி பலரை ஆச்சரியப்படுத்தி இருக்கும் படம்.
முதலில் நம்மை ஆச்சரியப்படுத்துவது நடிகர் நடிகைகள் தேர்வு . பிரமாதம்.அடுத்ததாக நம் மனம் கவர்வது அட்டகாசமான வசனங்கள் .பின்னணி இசை , ஒளிப்பதிவு , ஏடிட்டிங் எல்லாமே கனகச்சிதம். ஒரு மாஸ் ஹீரோவின் படங்களில் வருவது போல் கூஸ் பம்ப் காட்சிகளும் உண்டு
ஒரே குறை , இது மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், வெறும் 50 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கு . இலங்கையில் நடக்கும் தமிழர் விழா வில் நடனக்கலைஞர்கள் 5 பெண்கள் 5 ஆண்கள் மட்டுமே பங்கேற்று இருப்பது ஒரு பின்னடைவே , ஆனா வேற வழி இல்லை
திரைக்கதை , காட்சி அமைப்புகள்: எல்லாம் இயக்குநர் கிட்டியின் திறமையை பறை சாற்றும்
வில்லுப்பாட்டு மூலமாக கதை சொல்லும் உத்தி ஓக்கே தான்.. உத்தம வில்லன் படத்தில் இதே உத்தி கையாளப்பட்டபோது போர் அடிக்கும் காட்சிகள் இருந்தது , ஆனா இதில் போர் அடிக்கலை
சபாஷ் டைரக்டர்
1 பிரபாகரனின் இளமைப்பருவ உருவத்தோற்றத்துடன் நடித்திருப்பவர் பாடி லேங்க்வேஜ் , பார்வை , வசனம் பேசும் லாவகம் எல்லாமே அற்புதம்
2 புத்த பிட்சு இலங்கையில் ஒரு முக்கிய பிரமுகரை கொலை செய்யும் காட்சி படமாக்கபப்ட்ட விதம்
3 ஹீரோவின் அப்பாவுடன் ஹீரோ பேசும் உரையாடல் காட்சி அவ்ளோ யதார்த்தம் , வலிமையான வாக்குவாதம்
4 ஹீரோ முதன் முதலாக அரங்கேற்றும் கொலை காட்சி
5 ஹீரோவின் சகோதரியை சீண்டும் போலீசை சகோதரியே தாக்கும் காட்சி
நச் வசனங்கள்
1 இனி யாரும் அழவேண்டாம் எனக்கூறி ஒருவன் பிறந்தான்
2 அப்பா நாம ஏன் திருப்பி அடிக்கல ?
3 ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால், உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்..!
4 பிறந்தான் பிறந்தான் சமரசம் இல்லா ஒரு மாவீரன்
5 இனி அதிகாரம் அவங்க கையில் இருக்காது , வெறும் பயம் மட்டுமே பையில் இருக்கும்
6 அமைதி வழிப்போராட்டம் பயன் தராது அமைதியாப்போராடுனா பலன் கிடைக்கும் என்று நம்புவது உலகின் மிகப்பெரிய மூட நம்பிக்கை
7 எந்த ஆயுதத்தால எதிரி தாக்கறானோ அதே ஆயுதத்தை கையில் நாம எடுக்கனும்
8 பயம் ஒன்று மட்டுமே இன்னொருவர் மனதில் அடிமைத்தனத்தை ஆழமா விதைக்கும்
9 முதல்ல பதட்டத்தை உருவாக்குவோம், பயம் தானா உருவாகும்
10 விடியலை தள்ளிப்போட இயலாது
11 சுவாசிக்க கத்துக்கிட்டு இருக்கும்போது ஏன் நுரையீரல்ல கத்தி பாய்ச்சறாங்க ?
12 உரிமையைக்கேட்கறோம்,அதற்கு விலை உயிரா?
சி.பி ஃபைனல் கமெண்ட் - மேதகு − விடுதலைப்புலி பிரபாகரனின் வாழ்க்கை சரித்திர சம்பவங்களின் தொகுப்பு,பாகம் 1. இது 100 நிமிடங்கள், வசனம் ,பிஜிஎம் பட்டாசு .இளவயது பிரபாகரன் நடிப்பு பாடிலேங்குவேஜ் அருமை..அனைத்து தமிழர்களும் அறிய"வேண்டிய வரலாறு என்பதால் ரேட்டிங் தேவை இல்லை