Thursday, June 03, 2021

ABHAY -2019 ஹிந்தி வெப் சீரீஸ் க்ரைம் த்ரில்லர் - விமர்சனம் 18+

  8  எபிசோட்ஸ் இருக்கு., 8ம்  தனித்தனி  கதை.  க்ரைம்  கேஸ்  டீலிங்.ஒவ்வொண்ணும்  30  நிமிசம்  அல்லது  40  நிமிசம் ,  மொத்தம்,  3  மணி  நேரம்,  செம  ஹிட்  ஆனது  இது


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோ  ஒரு போலீஸ்  ஆஃபீசர் . அவருக்கு  ஒரு  மனைவி , ஒரு மகன். ஹீரோ  போலீஸ்  அகாடமி ல  இருந்தப்போ  சக லேடி  போலீஸ்  ஆஃபீசர்  கூட  பழக்கம்  ஏற்படுது. சாதா  பழக்கம்  தான் .  ஆனா  அந்த  லேடிக்கு  அப்பவே  இவர்  மேல  ஒரு கண்.  இப்போ  சில  வருசங்கள்  கழிச்சு  யதார்த்தமா  அந்த  லேடி  ஹீரோவை  மீட்  பண்ண  2 பேரும் பதார்த்தமா  டச்சிங்  டச்சிங்   பண்ணிக்கறாங்க 


  கில்மா  எல்லாம்  முடிஞ்சதும்  நம்மாளு  தூ  த்தூ  மாறாட்டம்  தொட்ட  கை  நட்டம்   இதை  எல்லாம்  மறந்துடுங்கறான்.... அவளும்  சரிங்கறா.  நடிகை  சாந்தினி  மாதிரி  பின்னாளில்  இவ பிரச்சனை  பண்ணுவா  அப்டினு  ஹீரோ  டவுட்  ஆகறாரு


வில்லனோட  கன் பாயிண்ட்  மிரட்டல்ல  ஒரு  டைம்  ஹீரோவும்  அந்த கில்மா  லேடியும்  அவங்களுக்கு   உதவி  செஞ்ச  போலீஸ்  இன்ஃபார்மர்  யாரு?னு  வில்லன்  கிட்டே  சொல்லிடறாங்க .  அவன்  அந்த  இன்ஃபார்மர்  ஃபேமிலியை  கண்டம்  பண்ணீடறான். இன்ஃபார்மர்  ஹீரோ  மேல  செம  காண்டா  இருக்கான்.


  ஹீரோவோட  மனைவியை  யாரோ  கொலை  பண்ணிடறாங்க . அது  அந்த  கில்மா  லேடியா?  அல்லது  இன்ஃபார்மரா?  மூன்றாவது  புதிய  நபரா?   அதை  ஹீரோ  கண்டு  பிடிக்கனும் 


 இப்போ  மேலே  நான்  சொன்னது  கதையோட  ஒரு டிராக்  தான்  .  இந்த  கதை  ஒவ்வொரு  எபிசோடிலும்  10  நிமிசம்  மட்டும்  வருது 


  இதெல்லாம்  போக  ஒவ்வொரு எபிசோடிலும்  ஒரு  தனி  க்ரைம்  இன்வெஸ்டிகேஷன்  கேஸ் 


கதை  1  - ஒரு  கிராமத்துல  அடிக்கடி  பெண்  குழந்தைகள்  மட்டும்  காணாம  போகறாங்க .  போலீஸ் ல  புகார்  பண்றாங்க .  ஹீரோ  இன்வெஸ்டிகேஷன்  பண்றாரு .  ஒரு  வீட்ல்  2  பேரு  பெண்  குழந்தைகளை  கடத்திட்டு  வந்து  பாலியல்  வன்முறைக்கு  ஆட்படுத்திட்டு    கண்டம்  துண்டமா  வெட்டி  போடறாங்க , அவங்க  எப்படி  பிடிபடறாங்க  என்பதே  கதை 


கதை  2 .  ஒரு  வீட்ல  வேலை  இல்லாத  வெட்டிப்பையன் ,   எப்போப்பாரு அவனைத்திட்டிட்டு  இருக்கும்    அவனோட  சொந்த  அம்மா , அப்பா  இருவரையும்  குக்கர்  எடுத்து  ஒரே  போடு . அவனை  எப்படி  போலீஸ்  பிடிக்குது ?


கதை  3   வில்லி   பச்சைக்கிளி  முத்துச்சரம்  ஜோதிகா  கேரக்டருக்கு அக்கா  மாதிரி ,  2  ஆண்களை  கையாளா  வெச்சுக்கறா.  வசதியான  ஆளா  பிடிக்க  வேண்டியது , நைசா  பேசி  வீட்டுக்கு  கூட்டிட்டு  வந்து  அவனை  போட்டுத்தள்ளிட்டு  நகை, பணம், செல்  ஃபோன்  ஆட்டையைப்போட்டுடறது, இந்த  மாதிரி  3  சம்பவம்  பண்ணின  பிறகு  போலீஸ்ல  பிடிபடுவது  எப்படி  ?


 கதை  4    ஒரு   வசதியான  பங்களாவாசி  தம்பதிக்கு  குழந்தை  பாக்யம்  இல்லை . பவுர்ணமி  பூஜை   மனைவியா   பண்ணினா  சரியாப்போகும்னு  சொல்லி  ஒரு  லேடி  நித்தியானந்தி  ஏமாத்தி  தனிமையான  இடத்துல  பூஜை  பண்றேன்னு  சொல்லி  நகைகளை  எல்லாம்  ஆட்டையைப்போடப்பாக்குது. போலீஸ்ல  எப்படி  மாட்டுது ? 


 கதை 5   பையனோட  அம்மா  இறந்துட்டதால  அப்பா  2ம் கல்யாணம்  பண்ணிக்கறாரு . அவங்களுக்கு ஒரு  குழந்தை.  இந்த  3  பேரையும்  அந்தப்பையன்  கொலை  பண்றான்   ஏன்  பண்றான் ?  எப்படி  மாட்டிக்கறான் ?


 கதை  6 , 7 ,8   இந்த  மூணையும்  ஓப்பன்  பண்ணா  மொத்த  வெப் சீரிசையும்  இணைக்கும்  சஸ்பென்ஸ்  இழை  உடைஞ்சிடும்


ஹீரோவா  நடிச்சவர்  பக்கா  பாடி  லேங்க்வேஜ் , ஆக்டிங்  எல்லாம்   கச்சிதம்.  மனைவியா  நடிச்சவர்  ஓக்கே  ரகம், அவருக்கு அதிக  வாய்ப்பில்லை ,  அந்த  அகாடமி  அனாடமி கவுதமி    நல்ல  கிளாமர்.

 அது  போக  எல்லா  எப்பிசோட்லயும்  ஹீரோ  கூட  இன்னொரு  லேடி  போலீஸ்  ஆஃபீசர்  வர்றார்.  மனைவியை  விட  ,  காதலியை விட  இந்த  பார்ட்டி  செம  அழகு .  போலீஸ்  கெத்தும்   கச்சிதம்,  ஹீரோ  பேசாம  அல்லது  பேசிக்கிட்டே இந்த  லேடியை  லவ்  பண்ணி  இருக்கலாம்


  வில்லன்  சுமார்  ரகம்  தான் 


 படத்துல   அடல்ட்  கண்ட்டெண்ட்  2  இடத்துல  இருக்கு   அது  போக  ரத்தக்களறி  ,  ஓவர்  வன்முறை , ரத்தம்  தெறிக்கும் காட்சிகள்  ,  கொடூரங்கள்  எல்லாம்  சர்வ  சாதாரணமா  வந்துட்டுப்போகுது


 குடும்பத்துடன்  பார்ப்பதை  தவிர்க்கவும் ‘

 இது  செம  ஹிட்  ஆன  ஒரு  வெப்  சீரிஸ் , இதோட  செகண்ட்  செஷன்  வந்திருக்கு  இன்னும் பார்க்கலை 


நச்  டயலாக்ஸ் 


1    போலீஸ்  ட்யூட்டி  முடிஞ்சுட்டா  நம்ம  ஆஃபீஸ்  அவ்ளோதான், ஆனா  ஃபேமிலி  அப்படி  இல்லை  , கடைசி வரை  நம்ம  கூடவே  இருப்பாங்க ,  அதனால  ஃபேமிலிக்கு  அதிக  முக்கியத்துவம்  தரனும் 


2     சார், அந்த  கைதியை  வழிக்குக்கொண்டு  வரவே  முடியலை 


 போலி  பாஸ்போர்ட்  ரெடி பண்ணி  இருக்கான், அதை  வெச்சே  அவனுக்கு  3  வருச    ஜெயில்  தண்டனை  வாங்கித்தர  முடியும்,அதை  வெச்சு  மிரட்டுங்க


3   என்னோட    தனிப்பட்ட  கருத்தை  ட்யூட்டி ல  மிக்ஸ்  பண்ண மாட்டேன்


4   க்ரைம்  எப்பவும்  க்ரைம்  தான், அதுல  சின்னது பெருசுனு  பார்த்துட்டு இருக்கக்கூடாது 


5   ஜெயில்ல  எந்த மாதிரி  கொடுமைகள்  கைதிக்கு  நிகழும்னு  நாம  யூகிக்கும்  திறனை  வளர்த்திக்கனும்


6   விரக்தி  அடைஞ்ச  போலீஸ்  ஆஃபீசருக்கு    எங்க  ஆஃபீஸ்ல  வேலை  போட்டுக்குடுத்தா  எங்களுக்கு  என்ன  நன்மை ?


பத்திரிக்கை , மீடியா  மூலமா  இந்தப்பக்கம்  , அந்தப்பக்கம்  ரெண்டு  சைடும்    ஃபிரண்ட்ஸ்  இருக்காங்க,  யூஸ்  ஆகும்


7    கடைசியா  அவ  கோயிலுக்குப்போனா, அப்டியே  கடவுள்  கிட்டெ  போய்ட்டா 


8    எனக்கு  ஏற்கனவே  கெட்ட  பேரு  இருக்கு   மேலும்  எனக்கு  கெட்ட  பேரு  வர  வைக்காதே.


9   நீதான்  இப்போதைக்கு  பெஸ்ட்  சாய்ஸ் , ஒர்ஸ்ட்  சாய்ஸூம்  கூட 


10  இந்தப்பிரச்சனையை  எங்கே  தொடங்குனேனோ  அங்கேயே  முடிக்கறேன்


  சி.பி  ஃபைனல்  கமெண்ட் -  ஹிந்தி  தெரியாதவங்களும்  படம்  பார்க்கலாம்,  புரியும்  ,  வசனங்கள்  ரொம்ப  கம்மி .  காட்சிகள்  மூலமாவே  கதை  சொல்லி இருக்காங்க .  குடும்பத்துடன்  பார்க்க  முடியாது ,  ரேட்டிங்  2.25  / 5    ரிலீஸ்டு  @   ஜீ5