லாக்கப் ( 2020) –சினிமா விமர்சனம் ( ஓடிடி ரிலீஸ்-
ZEE 5) ( க்ரைம் த்ரில்லர் )
சென்னைல ஒரு ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல
பெண் சபலிஸ்ட் ஆன ஒரு இன்ஸ்பெக்டர்
,ப்ரமோஷனுக்காக இன்ஸ்பெக்டருக்கு எடுபுடி
வேலை பார்க்கும் ஒரு சப் இன்ஸ்பெக்டர் , அதே பிரமோஷனுக்காக
சப் இன்ஸ்பெக்டரிடம் எடுபுடியாக இருக்கும்
போலீஸ் கான்ஸ்டபிள் இவங்க
3 பேரும் தான் கதையின் மையப்பாத்திரங்கள் . ஒரு நாள் அந்த ஸ்டேஷன்
இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்படுகிறார். அதைப்பற்றி விசாரிக்க
ஒரு புது லேடி இன்ஸ்பெக்டர்
அங்கே வர்றாங்க
கொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு லேடீசை
சப்ளை செய்யும் ஒரு ரவுடி
குடி போதைல 2 பேரும் ஒண்ணா சரக்கு அடிச்ட்டு இருக்கும்போது தன் மனைவியையே அனுப்பக்கேட்டதால் கோபம் அடைந்து இன்ஸ்பெக்டரை
தாக்கியதாகவும் , அதுக்குப்ப்ழி வாங்கும் விதமா ஒரு கேஸ்ல
அவனை சிக்க வெச்சு
பேப்பர்ல ஃபோட்டோ எல்லாம் போட்டு
ரவுடியை அவமானப்படுத்தியதால் பழிக்குப்பழி
வாங்க தான் கொலை செய்ததாகவும் ஒப்புதல்
வாக்கு மூலம் தர்றான்
ஆனா கொலை செய்யப்பயன்படுத்திய கத்தி வேற
, ரவுடி
கையில் இருந்த கத்தி வேற . இந்தக்கொலையோட
உண்மையான குற்றவாளி யார்? என துப்பு துலக்கும்போது அதே ஏரியாவில் ஒரு பெண்ணோட டெட் பாடி கிடைக்குது. தற்கொலை மாதிரி
தெரியுது . ரேப் அட்டெம்ப்ட் எதும் இல்லை
இந்த 2 மரண சம்பவங்களுக்கும் ஏதோ தொடர்பு
இருக்கறதா லேடி இன்ஸ்பெக்டர்
நினைக்கறார். அதுக்குப்பின் அவர் என்னென்னெ
துப்பு துலக்கினார் என்பதே
மிச்ச மீதி திரைக்கதை
லேடி இன்ஸ்பெக்டரா ஈஸ்வரி ராவ்
நல்ல கம்பீரம் . அவர் சார்ஜ்
எடுத்துக்கிட்டது,ம் மொத்த ஸ்டெஷனையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது
அருமை , சப் இன்ஸ்பெக்டர் தன்னை எதிர்த்துப்பேசும்போது உண்ர்ச்சி
வசப்படாமல் அவரை டீல் செய்யும்
விதம் , ரவுடியை எப்படி கொலை செஞ்சே?
செஞ்சு காட்டு என டெமோ கேட்டு
மடக்குவது எல்லாம் கன கச்சிதம்
சப் இன்ஸ்பெக்டராக
வரும் இயக்குநர் வெங்கட்
பிரபு இனி கவுதம்
வாசுதேவ் மேனன் வழியில் பல படங்களில் வில்லனாக
மிளிர வாய்ப்பு நிச்சயம் . நல்லா பண்ணி இருக்கார்
, ஆனா அடிக்கடி தம் அடிப்பதை
குறைத்து இருக்கலாம். வில்லன் கேரக்டர் என்றாலே தம், தண்ணி
ஏதோ ஒண்ணு கைல இருக்கனுமா? என்ன?
போலீசாக வரும் வைபவ்
தான் கிட்டத்தட்ட நாயகன்
மாதிரி . அவரது போலீஸ் கம்பீரம் , உயர் அதிகாரிக்கு
கட்டுப்பட்டு நடப்பது , ப்ரமோஷனுக்காக
ஏங்குவது , காதலியுடனான காட்சிகள்
அனைத்திலும் கச்சிதமாக ஸ்கோர் செய்கிறார்
இன்ஸ்பெக்டராக வரும் மைம் கோபி மப்புலதான்
எல்லா சீன்களிலும் வர்றார். பணிப்பெண்ணாக வரும் பூரணா பாந்தமான
நடிப்பு , வைபவின் காதலியாக வரும் வாணி போஜன் அதிக வாய்ப்பில்லை
பின்னணி இசை ஓக்கே ரகம் ,ஒளிப்பதிவு கச்சிதம். திரைக்கதை , எடிட்டிங்
குட்
சபாஷ் டைரக்டர்
1 த்ரில்லர் படங்களில்
டூயட் , செண்ட்டிமெண்ட் காட்சிகள்
, காமெடி டிராக் மூன்றும் வேகத்தடை என்பதை
உணர்ந்து தவிர்த்த விதம்
2 கனகச்சிதமாக
ஒண்ணே முக்கால் மணி நேரத்தில் எடிட்டிங்
கட் பண்ண ஷார்ப்னெஸ்
3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்
அமைத்த விதம் , அவிழ்த்த விதம் கச்சிதம்
. முக்கியமான 3 கேரக்டர்களை வைத்து
கதை அமைத்த விதம்
4 கைதி பட வெற்றிக்குப்பின் தமிழ் சினிமா வில் ஒரே
நாளில் நடக்கும் கதைக்கு
மவுசு கூடியதை உணர்ந்து
திரைக்கதை அமைத்தது
நச் டயலாக்ஸ்
1
யாருய்யா இது ? உன்
ஆளோட அக்காவா?
அட , அவங்க வீட்டு வேலைக்காரி சார்
வேலைக்காரியே இவ்ளோ அழகுன்னா.....
அப்போ நீ பெரிய இடமாத்தான்
பிடிச்சிருக்கே?
2
பாழாப்போன பணம் ஏழைங்க
கிட்டே தங்க மாட்டேங்குதே?
3
ஒரு நாள் வேலை செஞ்சாலும்
ட்யூட்டில கரெக்டா இருப்பேன்
4
போலீசோட வேலை கண்டுபிடிக்கறது , இன்னொரு போலீசை கேள்வி
கேட்பது அல்ல
5
பசில சாம்பார் சாதம் கூட்
பிரியாணி மாதிரி தான் தெரியுது
6
சார் , வேணாம் சார்
ட்யூட்டி டைம்ல....
ஏன்? யூனிஃபார்ம் போட்டிருந்தா
பசிக்காதா?
7
ஒருத்தர் நமக்கு பயப்படனும்னா
அவங்க வீக்னெஸ் நம்ம கைல இருக்கனும்
8
சாதாரண பி சி டா நீ, என்னை
விடப்பெருசா என்னத்த யோசிச்சுடப்போறே?
9 ஒரே நேரத்தில் 2 போலீஸ்
காரங்க கிரிமினல் மாதிரி
யோசிச்சா ரொம்ப பிரச்சனைல
போய் முடியும்
10 புத்திசாலித்தனம்
, போக்கிரித்தனம் இந்த ரெண்டும்
ஒண்ணு சேர்ந்து என் கிட்டே இருக்கு
11 நமக்கு
நியாயமாக்கிடைக்க வேண்டியதைக்கூட போராடித்தான்
பெற வேண்டி இருக்கு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 தனது செல் ஃபோனில்
வில்லங்கமான வீடியோ க்ளிப் இருந்தும்
எந்த தைரியத்தில் ஒரு போலீஸ் இன்னொரு போலீஸிடம்
தன் ஃபோனை கேலரி லாக் பண்ணாமல்
கொடுத்து மாட்டுகிறது ?
2 மஞ்சள் கலர் டி
சர்ட் போட்டு ரத்தக்க்காயம்
பட்ட போலீஸ் பின் அந்த சட்டையை
மாற்றி வேறு சட்டை போடும்போது அந்த ரத்தம் மீண்டும்
படாதா? பனியனும் போடலை . காயத்தின் ரத்தம்
எங்கே போகும்?காயத்துக்கு கட்டும்
போடலை
3 போலீஸ் பணிப்பெண்ணை
பைக்கில் ஏற்றிக்கொண்டு போகும்போது
பணிப்பெண்ணின் மகள் சைக்கிளில் அவர்களை ஃபாலோ
பண்ணி போவது எப்படி?பைக்கின் சராசரி வேகம் 40 கிமீ ஸ்பீடு என்றாலும்
4 ஈஸ்வரி ராவ் வெங்கட் பிரபுவின் பிளட் க்ரூப்பை
அறிய பிளட் டெஸ்ட்
எடுக்கச்சொல்வது நல்ல காமெடி , போலீஸ் ஐ டி கார்டிலேயே பிளட் க்ரூப்
இருக்குமே?
5 வைபவ் தன் பிளட்
க்ரூப் என்ன? என்பதை சிஸ்டத்தில் நீக்குவது கூட சாத்தியம் இல்லை , போலீஸ் ரெக்கார்டுகளில் பதிவாகி
இருக்குமே?
6 ஒரு சீனில் வெங்கட் பிரபு வைபவிடம் குறிப்பிட்ட பிராண்ட் பேரு சொல்லி சிகரெட் வாங்கிட்டு வரச்சொல்றார். பொட்டிக்கடைல வைபவ் “ சிக்ரெட் 1 குடுங்க என்று தான் கேட்கிறார், ஆனா கரெக்டா பெட்டிக்கடைக்காரர் அதே பிராண்டை தருவது எபப்டி?
7 வெங்கட்பிரபு வைபவின் செல் ஃபோனில் இருந்து ஒரு வீடியோ க்ளிப்பை தன் ஃபோனுக்கு மாற்றிக்கொண்டது வைபவ்க்குத்தெரியாது , ஆனா அது தெரிஞ்ச மாதிரி ஒரு சீன்ல வசனம் வருதே ,எப்படி?
சி.பி எஸ் ஃபைனல்
கமெண்ட் - நறுக் சுருக் க்ரைம்
த்ரில்லர் ரசிகர்களுக்கு டைம் பாஸ்
மூவி , பார்க்கலாம் . விறி விறுப்பாகப்போகுது . ஜீ ஃபைவ் ல ரிலீஸ் ஆகி இருக்கு . ரேட்டிங் 2. 75
/. 5