1 சார்.உங்க ஹோட்டல்ல வீட்டுச்சாப்பாடு மாதிரியே இருக்கும்னீங்க?
ஆமா.ருசி எப்படி?
அதை விடுங்க.பரிமாறுவதற்கு லேடீஸ்.யாரும் கிடையாதா
============
2 திருவள்ளுவரே! நீங்க ஏன் அவளதிகாரம் எழுதலை?
வாசுகி விடலை
==========
3 டியர்.பிப்ரவரி 14 சன்டே.என்ன பண்ணலாம்?
1ம்.பண்ண முடியாது.வீட்ல அனுப்ப மாட்டாங்க
===========
4 டியர்!ஆண்கள் எல்லாம் பொய் சொல்லவே படைக்கப்பட்டவர்கள்என்பது உண்மையா?
ஆமா, பெண்களை வர்ணித்துக்கவிதை எழுதும்போது கவிதைக்குப்பொய் அழகுதானே?
==============
5 டியர்,பிப்ரவரி 14 ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு சொல்லிட்டு பீச் வந்துடு
லூசு, சண்டே. நம்ப மாட்டாங்க,அம்மாவும் கூடவே வருவாங்க
==============
6 எப்போப்பார்த்தாலும் என் இடையில் கிள்ளறீங்களே?என்னை கிள்ளுக்கீரைன்னு நினைச்சீங்களா?
சரி, கரிசலாங்க”கன்னி”க்கீரைன்னு நினைச்சுக்கறேன்
==================
7
டாக்டர். இதுவரை எனக்கு வந்த கனவுகள் எதிலுமே நான் முடிவே பார்த்தது இல்ல .ஏன்?
தியேட்டர்லயே க்ளைமாக்ஸ் வர்ற டைம் ல கிளம்பிடுவீங்க்ளோ?
============
8 சார்.நீங்க சொல்ற ஜோக் எந்த கோணத்தில் பாத்தாலும் சிரிப்பு வரல"
கும்பகோணம் ,அரக்கோணம் இந்த ஊர்ல படிச்சுப்பாருங்க
=========
9 பூ மாலை போடாம பொண்ணோட கழுத்துல மாப்ளை ஏன் வடை மாலை போடாறாரு?
பொண்ணோட பேரு ஹனு மலர்.அனுமார் பக்தையாம்
===========
10 டாக்டர்.டெய்லி க்ரீன் டீ குடிச்சா எவர் க்ரீன் ஹிரோயின் ஆகிடலாமா?
ஏம்மா.விட்டா பச்ச சேலை கட்னா பச்சப்புள்ள ஆகிடலாமா?னு கேட்பே போல
============
11 நான் என்ன எழுதுனாலும் எல்லாரும் பாராட்றாங்க.அப்போ நான் பெரிய எழுத்தாளினி தானே?
காலை வணக்கம் னாக்கூட கவிதை பிரமாதம் மிஸ் ங்கற உலகம் இது
=============
12 மிஸ்! இந்த ஃபோட்டோ எப்போ எடுத்தது?
கராத்தே'ல ப்ளாக் பெல்ட் வாங்கினப்போ
ஓஹோ, மான் கராத்தே வா?
====================
13 மாப்ளை, என் பொண்ணுக்கு கராத்தேன்னா இஷ்டம், அட்லீஸ்ட் குங்க்ஃபூ தெரிஞ்ச மாப்ளை தான் வேணுமாம்
எனக்கு குஷ்பூவை வேணா நல்லா தெரியும், ஓக்கேவா?
================
14 தலைவரே! மீண்டும் கூடா நட்பா?
அரசியலில் நிரந்தர கூடா நட்பு என்பதும் இல்லை, நிரந்தர கூடா பகையும் இல்லை
==============
15 சார், நம்ம படத்துல ஏழரை இருக்குன்னு நியூஸ் வந்திருக்கே?
யோவ், கொன்றுவேன், ஏழு ஃபைட் சீனும் , ஒரு அரைகுறை ஃபைட் சீனும் இருக்கு
===============
16 திருமணம் ஆகாத ஆண்களுக்கு வாடகைக்கு வீடு தரமறுப்பதன் காரணம் என்ன?
இருக்க இடம் கொடுத்தா படுக்க இடம் தேடுவானே?அதான்
=================
17 டியர், உடம்பு சரி இல்லை, யாராவது செய்வினை செஞ்சிருப்பாங்களோ?
இல்லை, நான் தான் உப்புமா செஞ்சேன்
===============
18 மிஸ்!காதலர் தினத்தன்னைக்கு பச்சை கலர் சுடி போட்டுட்டு வந்தா ஐ லவ் யூ சொல்லலாமா? உங்களுக்கு?
பச்சை பச்சையா திட்டிடுவேன், பரவாயில்லையா?
===============
19 சிவப்பு கலர் டிரஸ் போட்டா ஆள் உண்டு, பச்சை போட்டா ஆள் இல்லை
ஓஹோ, அப்போ சிவப்பு ஜாக்கெட், பச்சைப்பாவாடை போட்டுட்டு வந்தா என்ன அர்த்தம்?
===============
20 டியர்! நாளைக்குதானே லவ்வர்ஸ் டே, இன்னைக்கு ஏன் பார்க் போலாம்கறீங்க?
ஒன்றே செய், நன்றே செய் அதுவும் இ ன்றே செய்! முந்திக்கலாம்னுதான்
==================