Tuesday, June 30, 2015

புலி - ஸ்கோப் இருக்கா?

டாக்டர், ஜலதோஷம் உடனே போக என்ன வழி?


மூக்குதான்.



============

2 படத்தை தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் பண்ணிடுன்னு எங்க அம்மா முடிவா சொல்லீடாங்க.


ஓஹோ! நம்ம அம்மா என்ன முடிவு எடுக்கப்போறாங்களோ?


=============
3  மனசே சரி இல்ல மச்சி.


ஓ.என்ன மேட்டர்?
ஆங்.அது மட்டும் சொல்ல மாட்டேன்.
யோவ்.அப்போ இதை மட்டும் ஏன் சொன்னே? #,நெட் தமிழன் குழப்படிகள்



===========

4 சத்குரு = எதுக்கு எல்லாரும் வெயிட் பண்றீங்க, பத்மாசனம் பண்ணுங்க 

இருங்க குரு, அதுக்கு பத்மா வரனும் இல்ல?


===============



5 சார், பதவி ஏற்று ஒரு வருசத்துல நாட்டுக்காக  என்ன செஞ்சிருக்கீங்க?

யோகா  செஞ்சேனே பார்க்கல? 


=================
6 மோடி = உங்க  அமைச்சர்கள் பண்ற யோகாசனத்துக்கு   என்ன  பேரு? 

ஜெ = ஹலோ, அது ஆசனம் இல்ல. கால்ல விழுந்து கும்பிடறாங்க 


==============

7  டாக்டர்.் பீட்ரூட் உடம்புக்கு நல்லதா?


வெஜ்டபிள் ரூட் ல உன் உணவுப்பழக்கம் போனா எல்லாத்துக்கும் நல்லது


============

8 சார்.உங்களுக்கு 40 வயசு ஆகிடுச்சு.நீங்க பென்சன் பார்ட்டி.


அப்டியா? உங்க வயசு எவ்ளோவ்?
இப்போதான் 73 ஆகுதுங்க
அப்போ பென்பேரன் பார்ட்டி



===========

9 சினிமா நடிகைக்கு உங்க பேங்க்ல லோன் கிடையாதா?ஏன்?


மாசாமாசம் லோன் ட்யூ கட்ட மாட்டாங்க.வருசா வருசம் புது புருசனை வேணா கட்டுவாங்க



=============

10 மிஸ்டர்.எதுக்காக என்னை கிள்ளுனீங்க?
அங்க்"கிள்"னு கூப்ட்டீங்களே?


============


11கடலை போடும் கான்வோக்களை படிக்கும்போது எதேச்சையாக என் விரல் பட்டு பேவரைட் ஆகிவிடும் பட்சத்தில் யாரும் ஜெர்க் ஆகாமல் கடலையை தொடரவும்

===========

12 பாகுபலி படம் பாத்தாச்சா?

நோ.
புலி படம் பாத்தாச்சா?
நோ
அப்புறம் எதை வெச்சு பாகுபலியை விட புலி 10 மடங்கு நல்லாருக்கும்னீங்க?


===========


13 சார்.இந்த சீன் ல ராணியோட மகளை லவ் பண்ணனும்.


சார்.ராணியே நல்லாத்தானே இருக்கு?


============


14 டியர்.இன்னைக்கு எங்கம்மாதான் ஊட்டி விட்டாங்க.


ஓகோ.நாளைக்கு உங்க அப்பா கொடைக்கானல்ல விடுவாரா?



==============

15 புலி 120 கோடி பட்ஜெட்டாம்.யார் யார் யார் யாருக்கு எவ்வளவு நட்ட ஈடு கொடுக்க வேண்டிவருமோ? ஐயப்பா காப்பாத்து.உன் வாகனம் தான்


===========

16  அப்ப பொண்டாட்டிக்கிட்ட பேசறதும் கடலையா?



தமிழன் சொந்த சம்சாரம் கூட என்னைக்கு கடலை போட்டிருக்கான்?




=============



17 டியர்.எதுக்காக பிளாங்க் மெஸேஜ் அனுப்ச்சீங்க?



நீ தானே வெத்து வேட்டு ன்னு சொன்னே?


===========


18 பாகுபலி போல் நாமும் 2 பாகமா புலி யை ரிலீஸ் பண்ணலாமா?
வேனாம்.எப்டியும் இவங்களே பார்ட் பார்ட்டா பிரிச்சு கலாய்க்கப்போறாங்க.நாம வேற எதுக்கு?


========19

புலி சினிமாஸ்கோப் படமா?


ஸ்கோப் இல்லைங்க.


=========


20 நியூட்டனின் 3ம் விதி எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கு ஆனா முத 2 விதி நிறைய பேருக்கு தெரியல
ஏன்னா எஸ் ஜே சூர்யா 3 வது விதி தான் படம் நடிச்சார்




===========